இம்மாதிரிக் குற்றங்களைக் குறைப்பதற்காக, விசித்திரமான பாலியல் சட்டங்கள் சில நாடுகளில் உள்ளன என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று. அவற்றில் சிலவற்றின் பட்டியல் கீழே. நமக்கு எழும் சந்தேகங்கள் அடைப்புக் குறிகளுக்குள்!
சட்டம்: 1
உலகில் எல்லையில்லாத பாலியல் சுதந்திரம் கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் இங்குதான் சில கட்டுப்பாடான பாலியல் சட்டங்களும் உள்ளன. விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்ட இங்கு விலைமாதர்களுடன் காண்டம் அணிந்துதான் உடலுறவு கொள்ள வேண்டும். தவறுபவர்களுக்குத் தண்டனை உறுதி
['அந்த' நேரத்தில் ஒருவர் காண்டம் பொருத்தினாரா இல்லையா என்று எப்படிக் கண்டுபிடிக்கிறார்களாம்?!]
சட்டம்: 2
பொதுவாகவே கலவி என்பது இருளில் நடத்தப்படுவது. ஆனால், சிலர் அதனை வெளிச்சத்தில் செய்ய விரும்புவார்கள். அவ்வாறு விரும்புபவர்கள் கண்டிப்பாக ஹங்கேரிக்கு செல்லக்கூடாது. ஏனெனில், இங்கு வெளிச்சத்தில் உடலுறவு கொள்வது என்பது தண்டனைக்கு உரிய குற்றமாகும். எந்தச் சூழ்நிலையிலும் தம்பதிகள் வெளிச்சத்தில் உறவு கொள்ளக்கூடாது.
['அது'க்கான நேரத்தில் ஹங்கேரிக்காரர்களிடம் கதவைத் தாளிடும் வழக்கம் இல்லையோ?!
சட்டம்: 3
கொலம்பியாவில் மிகவும் வினோதமான சட்டம் உள்ளது. அது என்னவெனில், பெண்கள் முதலிரவில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கும்போது அதற்குச் சாட்சியாகப் பெண்ணின் தாயார் அந்த அறையில் இருக்க வேண்டும்
[என்ன கருமாந்தரச் சட்டமடா இது?!]
சட்டம்: 4
துபாய் கடுமையான சட்டங்களுக்குப் பெயர் போனது. ஆனால், காதலைப் பொருத்தவரை அங்கு மிதமான சட்டமே இருக்கிறது. இங்கு, பொது இடங்களில் எல்லை மீறும் காதல் ஜோடிகள் பத்து நாட்கள் சிறைச்சாலையில் இருக்க வேண்டும்.
[இதுகள், காதல் ஜோடிகள் அல்ல; 'காம' ஜோடிகள். பத்து நாளென்ன, பத்து மாதம்கூட சிறையில் அடைக்கலாம்தானே?!]
சட்டம்: 5
தற்போதைய காலக்கட்டத்தில் கள்ளக்காதல் என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகி விட்டது. ஆனால் ஹாங்காங்கில் கள்ளக்காதல் அவ்வளவு எளிதானதல்ல. ஏனெனில், இங்கு கணவர் கள்ளக்காதலில் இருப்பது உறுதியானால் மனைவி வெறும் கையால் அவரைக் கொலை செய்யலாம். இதற்காக அவருக்குத் தணடனை அளிக்கப்படாது.
[கள்ளக் காதலிக்கு ஏதும் தண்டனை இல்லையா?!]
சட்டம்: 6
சுயஇன்பம் செய்வது மனிதர்களின் இயல்பான பழக்கங்களில் ஒன்றாகும். ஆனால், இந்தோனேசியாவில் சுயஇன்பம் செய்வது என்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். இங்கு ஆண்களோ, பெண்களோ சுயஇன்பம் செய்து மாட்டிக்கொண்டால் 32 மாதங்கள்வரை ஜெயிலில் இருக்க வேண்டும்.
[மாட்டிக்கொள்ளும் அளவுக்கு இந்தோனேசியர்கள் முட்டாள்களா என்ன?!]
சட்டம்: 7
மீசை ஆண்களின் அடையாளங்களில் ஒன்றாகும். ஆனால், ஐயோவாவில்[?] ஆண்கள் மீசை வைப்பதே பிரச்சினை. ஏனெனில், மீசை வைத்த ஆண்கள் பொது இடங்களில் முத்தம் கொடுப்பது இங்கு தடைசெய்யப்பட்ட குற்றமாகும்.
[மீசை உறுத்துதுன்னு பெண்கள் புகார் செய்திருப்பார்களோ?!]
சட்டம்: 8
நம் நாட்டில் அகோரிகள் மட்டும்தான் பிணங்களுடன் உடலுறவு கொள்வார்கள், ஆனால், உலகின் சில பகுதிகளில் இது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது, லூசியானாவில் இச்சட்டம் உள்ளது. இங்கே பிணங்களுடன் அனைத்து விதமான உறவுகளையும் வைத்துக்கொள்ளலாம்.
[அதென்ன 'அனைத்து'விதமான உறவு?!...ச்சீய்...]
சட்டம்: 9
தங்களின் உடலுறவை வீடியோ எடுப்பது சிலரின் மூடத்தனமான பழக்கமாக இருக்கலாம். ஆனால், நேபாளத்தில் தங்களின் உடலுறவு அல்லது அல்லது நிர்வாணக் காட்சிகளைப் புகைப்படமோ அல்லது வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.
[எத்தனைத் தடைச்சட்டம் போட்டாலும் ரகசியமா எடுக்கிற 'மெண்டல்கள்' எடுத்துட்டுத்தான் இருக்கும். தடைச்சட்டம் என்ன, 'தடா'ச் சட்டம்கூடச் செல்லுபடி ஆகாதுதானே?!]
============================================================================
https://tamil.boldsky.com/