செவ்வாய், 10 மே, 2022

பெண்மை போற்றுகிறதா புண்ணிய பாரதம்?!

ண்ணையும் மழையையும் ஆறுகளையும் பெண்ணாக உருவகித்துப் போற்றி வழிபட்டுப் பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் நாடாக உலக அளவில் அறியப்பட்டது 'புண்ணிய பூமி' எனப்படும் பாரதம்[இந்தியா].

இது விசயத்தில் இது ஒரு 'பாவ பூமி' என்பதை உறுதிப்படுத்துகின்றன 2011 இல் நிகழ்த்தப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள். 

எவ்வகையிலெல்லாம் பெண்ணினம் இங்குச் சீரழிவுகளுக்கு உள்ளாகிறது என்பதற்கான பட்டியல்[இணையத் தளங்களிருந்து தொகுக்கப்பட்டது] பின்வருமாறு:

*மக்கள் தொகை அடிப்படையில், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் நாடுகளில் முதலிடம் பெற்றிருப்பது இந்தியாதான்.

*20 நிமிடங்களுக்கு ஒரு வன்புணர்வு இங்கு அரங்கேற்றப்படுகிறது[2011 புள்ளிவிவரம்]

*இது தொடர்பாகக் குற்றம் புரிந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் மட்டுமே[25-26%] தண்டிக்கப்படுகிறார்.

*ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆண்டில் 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டனர்.

*பாதிப்புக்குள்ளான பெண்களில் 10க்கு ஒருவர் மட்டுமே வழக்குத் தொடுக்கிறார். மற்றவர்கள் தடுக்கப்படுகிறார்கள்.

*அந்தப் பத்துப் பேர்களிலும் சிலர் காவல் நிலையத்தில் சமரசம் செய்யப்பட்டு வழக்கைத் திரும்பப் பெறுகிறார்கள். வழக்குகளைக் குறைத்துக் காட்டுவது காவல்துறையினரின் நோக்கமாக உள்ளது.

*தலித் இனப் பெண்கள் என்றால் காவல் நிலையம் செல்வதே வெகு அரிது.

*பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தப் புண்ணிய பூமி 4ஆம் இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் உள்ள நாடுகள் முறையே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகியவை.

*பாலியல் வல்லுறவுகள் அதிகரிப்பதற்கு, ஜாதி மத வேறுபாடுகளைக் கடந்து பெண்கள் ஒருங்கிணைந்து போராடுவதில்லை என்பது முக்கியக் காரணமாக உள்ளது. ஆண்கள் ஒப்புக்கு அனுதாபம் தெரிவிக்கிறார்கள்; குற்ற நிகழ்வுகளுக்குப் பெண்களைக் காரணம் ஆக்குகிறவர்களும் உள்ளனர். ஆண்களால் உருவாக்கப்பட்ட பலம் வாய்ந்த அமைப்புகள்கூட பெண்களுக்காகக் குரல் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

*இறுதியாக இடம்பெறும் இந்தத் தகவல் நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாகும். அது.....

தொடுக்கப்படும் கிரிமினல் குற்ற வழக்குகளைவிடவும் பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் இங்கு அதிகம் என்பதே!

==========================================================================