இது நுண் கிருமிகளால் தாக்கப்படும்போது இதன் நரம்பியல் மின்சுற்றில்[Circuit] பாதிப்புகள் உண்டாகும்.
இவ்வாறு மூளையின் மின் சுற்று[சுழற்சி] பாதிக்கப்படும்போது, மன அழுத்தம், மனப்பிறழ்வு, தசைநார்ப் பிறழ்வு, அதீத நரம்பு வலி, போதைக்கு அடிமையாதல், நடுக்குவாதம், கோமா போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இந்த மின்சுற்றுப் பாதிப்புக்கு மூளையின் நரம்புகளில் மின்சாரம் செலுத்திச் சிகிச்சை அளிக்கும் முறைக்கு, 'ஆழ் மூளைத் தூண்டுதல்' என்று பெயர்.
பெரும்பாலும் மூளை சார்ந்த நோய்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும்போது நோயாளியை முழு மயக்கத்துக்கு உள்ளாக்குவார்கள்.
ஆனால், இந்த அறுவையை மேற்கொள்ளும்போது அவருக்கு உணர் திறன் இழக்கச் செய்யும் ஊசி மட்டுமே போடுகிறார்கள்.
மண்டை ஓட்டில் சிறு துளை போட்டு, அதன் வழியாக ஒரு கம்பியை நுழைத்து, நரம்புத் தண்டின் அருகே அதை வைத்து மின்சாரம் செலுத்தப்படுகிறது.
இதன் மூலம் நோயாளிக்கு உண்டான பாதிப்பானது படிப்படியாகக் குறைந்துவருவது கண்டறியப்படுகிறது.
இது மிகத் துல்லியமான சிகிச்சை முறை என்பதால் நோயாளியின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
தகவல்: பேராசிரியர், டாக்டர் கே.விஸ்வநாதன், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையம்.
======================================================================================
நன்றி: தினமணி 'மருத்துவ மலர்', 2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக