சைக்கிள் பந்தயங்களில் பல பரிசுகள் பெற்றவர்.
"இவருக்கா இந்த நோய்?" என்று உற்றார் உறவினரும் நண்பர்களும் மனம் வருந்தினார்கள்.
ஆயினும் என்ன, இந்த மனிதர் மட்டும் மனம் தளரவே இல்லை. "நான் சாதிக்கப் பிறந்தவன்" என்று அவ்வப்போது அவரின் உள்மனம் முழக்கமிடத் தவறுவதே இல்லை.
மனம் கலங்காமல் தொடர்ந்து சைக்கிள் போட்டிகளில் பங்கேற்றார்.
ஃபிரான்ஸ் நாட்டில், பிரபலமானதும், 21 நாட்கள் நடைபெறுவதுமான Tour de France எனப்படும் 2000[சற்றே கூடுதல் தூரம்] மைல் சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். செங்குத்தான மேடு, கிடுகிடு பள்ளம் என்று ஆபத்தான பாதையில் சைக்கிள் ஓட்ட வேண்டிய போட்டி அது. அதில் கலந்துகொண்டு கைகால்களை முறித்துக்கொண்டவர்களும், உயிரிழந்தவர்களும் ஏராளமாம்.
அப்படிப்பட்ட ஆபத்தான போட்டியில்தான் 'அவர்' கலந்துகொள்வதாக அறிவித்தார்.
மருத்துவர்கள் எச்சரித்தபோதும் கலந்துகொள்ளவே செய்தார்.
வென்றார். பரிசை மட்டுமல்ல, புற்றுநோயையும்தான்.
பின்னர் அவர் அளித்த பேட்டி ஒன்றில்.....