பக்கங்கள்

வெள்ளி, 10 நவம்பர், 2023

அண்ணாமலையிடம் கோரிக்கை: “நிறுவுக ஊர்தோறும் ஆழ்வார்&நாயன்மார் சிலைகள்!

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது முதல் வேலையாக அந்தக் கம்பத்தை அப்புறப்படுத்தி, ஆழ்வார்கள், நாயன்மார்கள் சிலைகள் அங்கே வைக்கப்படும்.....[https://youturn.in/articles/srirangam-temple-periyar-statue-annamalai.html].

இது சில நாட்களுக்கு முன்பு வெளியான, தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் அண்ணாமலை அவர்களின் அதிர்ச்சியூட்டும் அதிரடி அறிவிப்பு.

பக்தி நெறி பரப்பி, இறை நம்பிக்கையை வளர்த்து, அதன் மூலம் நம் மக்களின் மனங்களைத் தூய்மைப்படுத்தினார்கள் நாயன்மார்களும் ஆழ்வார்களும் என்பது ஆன்மிகவாதிகள் தொடர்ந்து செய்துவரும் பரப்புரை.

உண்மையில், இவர்களின் வரலாறு என்று சொல்லப்படுவது 10% உண்மையும், 90% பொய்யுரையும் கலந்தது என்பதை வாசிப்பின்போது கொஞ்சம் பகுத்தறிவைப் பயன்படுத்தினாலே புரிந்துகொள்ளலாம்.

அதிசயங்கள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் 27 நாயன்மார்கள்[மொத்தம் 63 பேர். ஆழ்வார்கள் பற்றிய ஆய்வு பிறிதொரு நாளில்] பற்றியச் சிறு சிறு குறிப்புகள் இங்கே இடம்பெற்றுள்ளன.

அடைப்புக் குறிகளுக்குள் இடம்பெற்றிருப்பவை, நாம் எழுப்பும் சந்தேகங்கள், அல்லது விமர்சனங்கள்.

வாசியுங்கள். இந்தப் பக்திமான்கள் பக்தியின் பெயரால் எந்த அளவுக்குச் சிந்திக்கும் அறிவைச் சீரழித்திருக்கிறார்கள் என்பது புரியும்.

“ஆகா, இந்துமதத்தை விமர்சிக்கும் இந்த நாத்திகர்கள் மாற்றார் மதம் குறித்து வாய் திறவாதது ஏன்?” என்று இந்துத்துவாக்கள் எவரும் கொதித்தெழுந்து குமுற வேண்டாம். நம்மைப் பொருத்தவரை எம்மதமாயினும் அதிலுள்ள மூடநம்பிக்கைகளை[நம் கண்ணோட்டத்தில்] விமர்சிக்கத் தயங்கியதில்லை. எந்தவொரு மதத்தவரும் நம்மை அவமதித்ததில்லை.1.திருநீலகண்ட நாயனார்: முதுமைக் காலத்தில், மனைவியாருடன் குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்[சிவன் அருளால் அவர் மனைவி குமரியானதாகக் கதை உண்டா?]

2.இயற்பகை நாயனார்: சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை, முழுநம்பிகையுடன் அனுப்பியவர்[மொட்டையாக ‘அனுப்பினார்’ என்பது தவறு. அவர் ‘கேட்டதால்’ இவர் அனுப்பிவைத்தார் என்பது கதை.

பக்தியைச் சோதிக்க உன் பெண்டாட்டியை அனுப்பு என்று சொன்னவர் கடவுளா, கயவாலியா?]

3.அமர்நீதியார்: சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப்போக, அதற்கு ஈடாக, தன்னுடைய சொத்தையும், குடும்பத்தையும் தந்தவர்[சிவன் கட்டியிருந்த புலித்தோல், போர்த்திருந்த யானைத் தோல் எல்லாம் களவுபோனதா?]

4.ஏனாதிநாதர்: கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக் கொல்லாமல், தன் உயிரை இழந்தவர்[இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறுவாராக்கும்].

5.கண்ணப்பர்: பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்[ஆட்டுக் கறியா பன்றிக் கறியா, கழுதைக் கறியா?]

6.குங்கிவியக்கலயர்: சாய்ந்த லிங்கத்தைத் தன் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காகத் தூபம் ஏற்றியவர்[பட்டினி கிடந்தே செத்தாரா?]

7.மானக்கஞ்சறார்: தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.[நல்லவேளை சிவனடியார் ஏடாகூடமாக வேறு எதையும் கேட்கவில்லை]

8.அரிவாட்டாயர்: சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் அதற்குத் தண்டனையாகத் தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்[துண்டான கழுத்தைச் சிவபெருமான் ஒட்டவைத்திருப்பாரே!]

9.மூர்த்தி நாயனார்: சந்தனக் கட்டைகள் கிடைக்காததால் தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்[முன்மண்டையைத் தேய்த்துக் கொஞ்சம் யோசித்திருந்தால் இதைச் செய்திருக்கமாட்டார்].

10.திருக்குறிப்புத் தொண்டர்: சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்த நேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்[அழுக்குத் தேய்த்துச் சிவனைக் குளிப்பாட்டுபவரும் இவர்தானோ?].

11.சண்டேசுர நாயனார்: சிவலிங்கத்திற்குப் பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்[‘மாதா, பிதா, குரு தெய்வம் என்னும் மூத்தோர் மொழியை அறியாதவரா?].

12.பெருமிழலைக் குறும்பர்: சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர். சுந்தரருடன் கயிலை சென்றவர்[இந்நாள்வரை அங்கேதான் வாசமா?].

13.காரைக்கால் அம்மையார்: இறைவனின் அருளால், கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்கப் பேய் வடிவம் எடுத்தவர்[இன்னும் பேயாகத்தான் அலைகிறாரா? சிவகணமாகப் புரொமோசன் கிடைத்திருக்குமா?].

14.திருநீலநக்கர்: திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியைக் கடிந்து ஏசியவர். ஈசன் கனவில் காட்சியளித்து அருள்புரிந்தார்[நேரில் தரிசனம் தந்திருக்கலாம்].

15.நமிநந்தி அடிகள்: ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்[இப்போது தேவலோக வாசியாகத்தான் இருப்பார். பக்தக்கோடிகள் சிவபெருமானை நினைத்துத் தவமிருந்து அவரை இங்கு அனுப்பிவைக்கும்படி கோரிக்கை வைக்கலாம்]

16.திருஞானசம்பந்தர்: ஞானக் குழந்தை. பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்ட பேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப்பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்[அம்மை பால் மட்டும்தான் ஊட்டினாரா, சோறு ஊட்டியதில்லையா?].

17.திருமூலர்: திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர். விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார். இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களைக் காத்தார்{[நந்தி[பசு] என்னும் விலங்கு திருமூலரின் குருவா? நம்ப முடியவில்லை}.

18.மூர்க்கர்: சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகளைச் செய்தார்[சூதாடுதல்னா என்னவென்று சிவபிரானுக்குத் தெரிந்திருந்தால் இவரைக் கண்டித்துத் திருத்தியிருப்பாரோ?!].

19.சாக்கியர்: அன்பால் சிவலிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர். இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறி[கற்களைத் தானியமாக்கி ஏழைபாழைகளுக்குத் தானம் செய்திருக்கலாம். செய்தாரா?].

20.சிறுத்தொண்டர்: பைரவ அடியாராய் வந்த சிவனுக்காகத் தன் மகனையே வெட்டிக் கறி சமைக்கத் துணிந்தவர்[“உன் மகனைக் கறிசமைத்துப் போடு” -சிவன் கேட்டாராம். மாட்டுக் கறி, ஆட்டுக் கறிகளைவிடவும் மனுசக் கறிக்குச் சுவை அதிகமோ?].

22.கலிக்கம்பர்: முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்த மனைவியின் கையை வெட்டியவர்[அந்தக் கையால் அடிக்கடி அடி வாங்கியிருப்பாரோ?!].

23.கலியர்: வறுமையில் தன் மனைவியை விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசு இல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்[விளக்கெண்ணைக்கு மனைவியை விற்றவர் வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்திருப்பார்? இவருக்கெல்லாம் பெண்டாட்டி ஒரு கேடா?].

24.சத்தி: சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்[இந்த நூற்றாண்டில் இது நடந்திருந்தால், நாக்கு அறுபட்டவன் இவரின் ‘குஞ்சை’ அறுத்திருப்பான்!].

25.கழற்சிங்க நாயனார்: சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்[வெட்டு குத்து எல்லாம் இந்த நாயனார்களுக்குக் கைவந்த கலையோ?!].

27.செருத்துணை நாயனார்: சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்க நாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்[சூர்ப்பநகையின் மூக்கு, மு...லை அறுத்த ராமன் கதை நினைவுக்கு வருகிறது].

* * * * *

ஆன்ம நேயர் அண்ணாமலை அவர்களுக்கு நம் பணிவான வேண்டுகோள்:

திருவரங்கக்[ஸ்ரீரங்கம்] கோயிலின் முன்னால் நாயன்மார்[ஆழ்வார்களுக்கும்] சிலைகளை நிறுவுவதாக அறிவித்திருக்கிறீர்கள். ஒரு திருவரங்கம் போதாது, ஊரூருக்குச் சிலைகளை நிறுவுங்கள்.

மறவாமல், இங்கு இடம்பெற்றுள்ள நாயன்மார் பற்றியக் கதைக் குறிப்புகளையும் எழுதிவையுங்கள்.

இதை வாசிப்போர் அனைவரும், ஆகச் சிறந்த கடவுள் பக்தர்களாக மாறுவார்கள். அதன் விளைவு.....

வரும் தேர்தலில் வாக்குகளை மிக எளிதாக அள்ளிவிடலாம். முதலமைச்சராகவும் நீங்கள் ஆகிவிடலாம்.

காலம் தாழ்த்தாமல் செயலில் இறங்குங்கள்.

வெற்றி உமதே!

உதவி: