நரம்பியல் கோளாறுகளோ ஆழமான காயங்களோ உள்ள மனிதர்களின் மூளைக்குள் 'சிப்' பொருத்தி, அவர்களை அந்தப் பாதிப்பில் இருந்து மீட்க எலான் மஸ்க், 'நியூராலின்க்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகப் பக்கவாதப் பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்தினால், அதன் மூலம் அவர்களின் எண்ணங்களின் மூலமாகக் கம்ப்யூட்டரின் கர்சர், கீபோர்டு உள்ளிட்டவைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பது அவரின் நம்பிக்கை.
கடந்த 2016ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக எலான் மஸ்க் அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றிருந்தார்..
இந்தச் சோதனையில் ஈடுபடுத்தத் தேர்வு செய்யப்பட்ட முதல் நபரின்[பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்] மூளையில், சில நாட்களுக்கு முன்பு ‘சிப்’ பொருத்தப்பட்டது.
சிப் பொருத்தப்பட்ட அவர் குணமடைகிறார் என்றும், அவர் தன் எண்ணங்களைப் பயன்படுத்திக் கம்ப்யூட்டர் மவுசைக் கட்டுப்படுத்துகிறார் என்றும் ‘எலான் மஸ்க்’ தெரிவித்துள்ளார்[Maalaimalar .21 பிப்ரவரி 2024 12:32 PM].
இது உலக அளவில் பெரும் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.
* * * * *
மு.கு: அடியேனுக்குள்ள அறிவியல் அறிவின் அளவு 005%கூடத் தேறாது என்பதால், மேற்கண்ட செய்தி குறித்த விளக்கவுரைகளையும் விமர்சனங்களையும் தவிர்த்துள்ளேன் என்பதைத் தன்னடக்கத்துடன் தெரிவிக்கிறேன்.