எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வெள்ளி, 3 ஜனவரி, 2025

‘பாஜக’ மகளிர்[+அம்மன்கள்] அணி போராட்டம்! ஒழிந்தது ‘தி.மு.க.’ ஆட்சி!!


பெண்ணினத்தைப் பாதுக்கக்கத் தவறிய[அண்ணா பல்கலை. நிகழ்வு]  ஸ்டாலின் ஆட்சியைக் கண்டித்து இன்று ‘பாஜக’ மகளிரணி போராட்டம் நடத்தியது[மேற்கண்ட காணொலிக் காட்சி].

கையில் ஒற்றைச் சிலம்பு ஏந்திய கண்ணகி வேடமிட்ட பெண்[கண்ணகியையே நேரில் கண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது] உட்பட, அக்கினிச் சட்டிகளை ஏந்திய & சாமியாடிய பெண்கள்[பராசக்திகளோ, காளிதேவிகளோ, மாரியம்மன்களோ என்றெண்ணி மெய் சிலிர்த்தோம்] ஸ்டாலினுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கண்களில் கோபக் கனல் தெறிக்க, ஆர்ப்பரித்துப் போர் முழக்கம் செய்தது இந்த மண் கண்டிராத அபூர்வ நிகழ்வாகும்; பேரதிசயமும் ஆகும்.

இது சாதாரண மகளிர் நடத்திய போராட்டம் அல்ல, அபூர்வச் சக்தி வாய்ந்த பெண் தெய்வங்களே முன்னிலை வகித்து நடத்தியது போன்ற போராட்டம் என்பதால் .....

பெண்ணினத்தைச் சொல்லொணாத் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் உள்ளாக்கிய/உள்ளாக்குகிற ஸ்டாலின் ஆட்சி ஒழிந்தது என்றே சொல்லலாம்.

வாழ்க அண்ணாமலை! வெல்க ‘பாஜக’!!

***தாய்க்குலம் மிளகாய் வத்தல் அரைத்துக் கண்ணகி சிலைக்குப் பூசியதன் நோக்கம்[ஏதோ ஐதீகமாம்... ஆறறிவை முடக்கும் வழக்கம்] புரியாமல் அடியேனின் முழு மண்டையும் காய்கிறது! ஹி... ஹி... ஹி!!!