எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 1 ஜூலை, 2025

பாரு பாரு... நல்லாப் பாரு... பகவான் படைச்சிருக்கான் பாரு!!!


காணொலியில் காணப்படுபவை பிறந்து மிகக் குறைந்த நாட்களே ஆன பறவைக் குஞ்சுகள்.

போதிய மயிர் வளர்ச்சி இல்லை. திடமாக நிற்பதற்கான வலிமையைக்கூட உடம்பு பெற்றிடவில்லை.

அம்மாக்காரி கொண்டுவந்து கொடுக்கும் இரையைப் பெறுவதற்கான பார்வைத் திறனும் இல்லை.

இரை என்று நினைத்து ஒன்றையொன்று கொத்திக்கொள்வது காணச் சகிக்காத கொடூரம்.

கொடூரம் நிகழக் காரணம்?

பசி அய்யா பசி, வயிற்றுப் பசி!!

இவை போன்ற உயிரினங்கள் முழு வளர்ச்சி பெற்ற பிறகு அவற்றைப் படுத்துவது உடலுறவுப் பசி!

[காணொலி காண்போரைச் சங்கடப்படுத்தும் என்பதால் தவிர்க்கப்பட்டது]

மேற்கண்ட ‘பசி’கள் அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு மனித இனம் உட்பட.

‘பசி’களைத் தணிக்க அன்றாடம் போராடித் துன்புறும் வகையில் உயிரினங்களை ஏன் படைத்தான் எல்லாம் வல்ல அந்த ஆண்டவன்?

“இனவிருத்திக்காக” என்பார்கள் அவதாரங்களும் மகான்களும்.

உயிரினங்களைப் படைத்து அவற்றை விருத்தி செய்யும்படி  அந்த ஆண்டவனிடம் அவர்கள் கோரிக்கை வைத்திருப்பார்களோ?

“ஆம்” என்றால்.....

அவர்கள் மகா மகா மகா பாவிகள்!