எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 28 ஜூலை, 2025

‘இந்தியா’வின் பிரதமரான ‘இந்தியர்’ மேதகு மோடி அவர்களே.....

[//உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு//> மாலைமலர்]

இந்தியா என்னும் இந்த நாட்டின் பிரதமரான இந்தியர் மோடி அவர்களே,

இந்தியாவின் குடிமக்களுக்கு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களையே வாங்குதல் வேண்டும் என்று நீங்கள் வழங்கியுள்ள ‘புத்திமதி’ ஏற்கத்தக்கதே. ஆனால்.....

இந்தியா’வின் பிரதமரான நீங்கள் குறைந்தபட்சம் ஓர் ஆண்டில் பாதி நாட்களாவது இந்தியாவிலேயே தங்கியிருந்து, இந்தியாவின் குடிமக்களுக்கு உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்குத் தீர்வு காண[வாயால் வடை சுடாமல்] முயலுதல் வேண்டும்.

நாளுக்கு நான்குவிதமான மிக மிக மிக உயர் ரக அயல்நாட்டு ஆடைகளை உடுப்பதைத் தவிர்த்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எளிய[பொதுமக்களுக்கானது> காந்தியடிகள் இடுப்பில் முண்டோடுதான் வாழ்ந்துமுடித்தார்] ஆடைகளையே உடுக்கப் பழகுங்கள்.

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் பல. இந்தியை மட்டும் பேணி வளர்க்காமல் அவற்றின் வளர்ச்சிக்கும் பாடுபடுங்கள்.

இந்தியா என்பது பல இன மக்கள் இணைந்து வாழும் ஒரு நாடு. அவர்கள் வாழும் மாநிலங்களுக்கான சுய உரிமைகளைப் பறித்து, ஒட்டு மொத்த இந்தியாவின் மக்களையும் உங்களின் அடிமைகளாக ஆக்கும் தொடர் முயற்சியைக் கைவிடுங்கள்.

இந்தக் குறிப்பிடத்தக்க கோரிக்கைகளை[இன்னும் பல உள்ளன] நிறைவேற்றிய பின்னர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்குங்கள்” என்று இந்தியாவின் குடிமக்களுக்கு நீங்கள் புத்திமதி சொல்லலாம்.

இது இந்தியாவில் வாழும் பெரும்பான்மைக் குடிமக்களின் உங்களுக்கான புத்திமதி கோரிக்கை ஆகும்.

இந்தியா வாழ்க! இந்தியா வளர்க! இந்தியா வெல்க!

* * * * *

https://www.maalaimalar.com/news/national/mann-ki-baat-program-pm-modi-says-should-buy-locally-made-products-782036