நாய் இறைச்சி உலகளவில் பரவலாக உட்கொள்ளப்படுவதல்ல எனினும், ஏனைய விலங்குகளின் இறைச்சியைப் போலவே, நாய் இறைச்சியிலும் புரதங்களும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன என்பது அறியத்தக்கது.
சில ஆப்பிரிக்க நாட்டுப் பகுதிகளில், விஷத்தின் வீரியத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கவும், பாரம்பரிய மருத்துவ நோக்கங்களுக்காகவும், மந்திரவாதிகளை விரட்டவும், காம உணர்ச்சியை அதிகரிக்கவும்[ஹி... ஹி... ஹி!!!] நாய் இறைச்சி பயன்படுத்தப்படுகிறது.
இந்த இறைச்சி வரலாற்று ரீதியாக உலகின் பல பகுதிகளில் மனிதர்களால் உண்ணப்படுகிறது.
கம்போடியா, சீனா, இந்தோனேசியா, கானா, லாவோஸ், நைஜீரியா, தென் கொரியா, சுவிட்சர்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் இது குறைந்த அளவில் உட்கொள்ளப்படுகிறது .
மேற்கண்ட நாட்டவர்கள் உண்பது போலவே இந்தியர்களாகிய நாம் அனைவருமே[சைவர்கள் நீங்கலாக] இதை உண்பதை வழக்கப்படுத்திக்கொண்டால் தெரு நாய்கள் எண்ணிக்கை சட சடவென[நாய் இறைச்சிக்காக நிறையவே நாய்ப் பண்ணைகள் உருவாக்க நேரிடும்]ச் சரிய, அவை குறித்தப் பிரச்சினைகளும் தீருமா? சிந்திப்பீர்.
உலகம் முழுவதும் உணவுக்கென்று ஆண்டுக்குத் தோராயமாக 10,000 கோடிக்கும் அதிகமான விலங்குகள் கொல்லப்படுகின்றன[இவற்றில் 1,900 கோடி கோழிகள், 150 கோடி மாடுகள், 100 கோடி ஆடுகள், மற்றும் 100 கோடிப் பன்றிகள் போன்ற பெரிய விலங்குகள் அடங்கும். மீன்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை டிரில்லியன்களாக இருக்கும் என்றும், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான விலங்குகள் இறைச்சிக்காக கொல்லப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன]
இவற்றில் இந்தியர்களாகிய நம்மால் கொல்லப்படுபவை 10 கோடி[நூற்றில் ஒரு பங்கு] என்றாலும், நாம் உண்டு செரிப்பவற்றின் எண்ணிக்கை நம் நாட்டில் உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கையைவிட அதிகம் ஆகும்
நமக்கு எவ்வகையிலும் தீங்கு செய்யாத அப்பிராணிகளான ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற பாவப்பட்ட உயிரினங்களை ஈவு இரக்கமே இல்லாமல் கொன்று உண்ணுகிறோம். ஆயிரக்கணக்கானவர்களை விரட்டி விரட்டிக் கடித்துக் காயப்படுத்துவதோடு உயிரிழப்புகளுக்கும் காரணமான தெரு நாய்களை அப்புறப்படுத்துவதை{பின்னரான நடவடிக்கைகள் குறித்து அரசு[கள்] விரைந்து முடிவெடுக்கும் என்று நம்பலாம்} எதிர்த்து நம்மில் சிலர் ‘ஐயோ குய்யோ’ என்று கூச்சலிட்டு அலறுவது ஏன் என்று புரியவில்லை!
இவர்கள் அனைவரும் 100% ஜீவகாருண்யர்களாக[கூட்டம் கூட்டமாக மொய்த்து ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களையோ, கண்ணுக்குத் தெரியாமல் நம்மைத் தாக்கி அழிக்கும் நுண்ணுயிரிகளையோ[பாக்டீரியா+வைரஸ்]கூடக் கொல்லக்கூடாது] வாழ்ந்துகாட்டுவார்களா?

