எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 2 அக்டோபர், 2025

ஆயுதப் பூஜையா, ஆறறிவைச் சிதைக்கும் சூழ்ச்சியா?!?!

//இந்த நாளில் தங்களது தொழிலுக்குப் பயன்படும் கலப்பை, கருவிகள், ஆயுதங்கள், வாகனங்கள், புத்தகங்கள் போன்றவற்றை வைத்து இறைவழிபாடு செய்யப்படுகிறது. இதனை அஸ்திரப் பூஜை என்றும் அழைப்பர். பூஜைக்காக வைக்கப்பட்ட பொருட்கள் மறுநாள் விஜயதசமிவரை எடுக்கப்படாமல் இருக்கும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் தொழில் வளர்ச்சியும், கல்வியில் சிறந்த தேர்ச்சியும் பெற இயலும் என்று இந்துச் சமயத்தவர்கள் நம்புகின்றனர்// -விக்கிப்பீடியா.

அறிவின்மை மட்டுமல்லாமல், உணர்தல் திறனும் இல்லாத சடப்பொருள்களை வழிபடுவது மூடத்தனங்களில் ஒன்று. காரணம், நாம் செய்யும் வழிபாட்டை ஏற்கும் திறன் அவற்றிற்குக் கொஞ்சமும் இல்லை என்பதே[மனிதர்களின் சிந்திக்கும் அறிவைச் சிதைப்பதையே தொழிலாகக்கொண்ட நாசகாரக் கும்பல் செய்த சதி இது].

கருவிகளை வழிபடுவதற்கு மாறாக, கருவிகளை உற்பத்தி செய்வோரைக் கொண்டாடும்[வழிபடுவதல்ல] நாளாகவும், அக்கருவிகளைக் கையாண்டு அதன் உரிமையாளர்களுக்கு உதவும் தொழிலாளர்களுக்கு நன்றி சொல்லும் நாளாகவும் இதை அறிவிக்கலாம்.

எந்தவொரு விழாவாயினும் கொண்டாட்டமாயினும் அது ஆறறிவால் ஏற்கத்தக்கதாக அமைவதே மக்களுக்கு நல்லது.


ஆட்சியாளர்களும் சமூகவியலாளர்களும் மக்களும் சிந்திப்பார்களா?