ஒரு சிந்தனையாளரின் பாராட்டு
I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com . |
நம் அறிவுக் கெட்டிய வரை ஆழ்ந்து சிந்தித்து,ஆராய்ந்த வகையில்..............................
‘கடவுள்’என்று சொல்லப்படும் ஒருவரின் ’இருப்பு' ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் படவில்லை என்பதை உரிய அரிய ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம்.
நம் கருத்துகளை ஏற்பவர்களின் எண்ணிக்கை பற்றியோ, மறுப்பவர்கள் எத்தனை பேர் என்பது பற்றியோ நம்மால் அறிய இயலவில்லை.
சற்று முன்னர் வரை 1400 பேர் இந்த ஆய்வுத் தொடரைப் படித்து வந்துள்ளனர்[கூகிள் புள்ளி விவரம்] எனினும் ஒரே ஒருவர் மட்டுமே தம் கருத்தை வெளியிட்டுள்ளார்!
எது எப்படியோ, ‘கடவுளே எல்லாம்’ என்று நம்புகிறவர்களின் மனதை மாற்றுவது அல்லது அவர்களைத் திருத்துவது என்பது எளிதான செயல் அல்ல.
வாழ்க்கை அனுபவங்கள் அவர்களை மாற்றக் கூடும்!!
அப்படிப்பட்ட பிடிவாதக் காரர்களிடம்...கடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைப் பவர்களிடம் நாம் எழுப்ப விழையும் வினா.....
நீங்கள் நம்புகிற கடவுள் திடீரென்று மாயமானால் அல்லது மடிந்து போனால்“
என்ன ஆகும்?
எதிர்பாராமல் கடவுள் எனப்படுபவர் மாண்டுபோனால் என்னவெல்லாம் நடக்கும்?
சினத்தின் சிகரத்துக்குச் சென்றுவிடாமல், பொறுமையுடன் ஆற அமர சிந்துயுங்கள்.
கடவுள் இல்லாமல் போனால் என்ன நடக்கும்? என்னவெல்லாம் நிகழும்?
கடவுள் மாயமான...மறைந்த...மடிந்த அந்த நொடியில்[ஒரு நொடியில் கோடி கோடி கோடி..........கோ.....டி......ல் ஒரு கூறு என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்] இந்தப் பிரபஞ்சமும் அழிந்துவிடுமா?
பிரபஞ்சமும் கடவுளின் ஒரு வடிவம்[”எல்லாம் அவனே”] என்பதால் அது அழியத்தான் செய்யும்.
அது அழியும் போது அதில் உள்ள அனைத்துக் கோள்களும் உயிர்களும் பிறவும் அழியும்.
மனித குலமும் அழிந்து போகும்!
இப்போது ஒருங்கிணைந்து சிந்தித்துக் கொண்டிருக்கிற நீங்களும் நானும் கூட அழிந்து விடுவோம்!
[கடவுள் உட்பட அனைத்துமே அழிந்து ஒழிந்து எஞ்சியிருக்கிற நிலையைக்
கற்பனை செய்து பாருங்கள்.
கற்பனை செய்து மனத்தளவில் அதை உணருவது சாத்தியமே இல்லைஎனினும் அது ஒரு சுவையான அனுபவம்]ணர்வீர்கள்!]
இப்படிப்பட்ட ஓர் அழிவு ஆறறிவு படைத்த மனித குலத்துக்கு வருத்தத்தை உண்டு பண்ணுகிற ஒன்றா?
நிச்சயமாக இல்லை.
தோற்றம் என்று ஒன்று இருந்தால், அழிவும் நிச்சயம்.
எப்போதோ தோன்றிய இது இப்போதோ எப்போதோ அழிவது நிச்சயம்.
எனவே மனித குலம் வருத்தம் கொள்ளத் தேவையே இல்லை.
வருத்தப்படவும் இயலாது!
தனி மனிதர்களின் தொகுப்புதான் மனிதகுலம்.தனி மனிதன் வருந்த முடியும். அவனுக்கு ‘மனம்’ என்று ஒன்று இருக்கிறது. மனிதத் தொகுப்புக்கு ‘மனம்’ ஏது?
தனி மனிதன் வேண்டுமானால்.....
திடீர் மரணம் சம்பவிக்கும் போது, “இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாமே”என்று வருந்தலாம்.”என்றைக் கிருந்தாலும் நமக்குச் சாவு
நிச்சயம்தானே” என்று அவ்வப்போது நினைந்து மனதைப் பக்குவப் படுத்தி வைத்திருந்தால், வருத்தத்தின் அளவை வெகுவாகக் குறைத்துவிட முடியும்.
அதோடுகூட, ”அடடா...கடவுள் சாகும் அந்த அரிய தருணத்தில் அல்லவா நானும் சாகிறேன்!”என்று பெருமிதப் பட்டுக் கொண்டால், கொஞ்சமும் வருத்தம் இல்லாமல் பேரானந்தத்தோடு மரணத்தைத் தழுவலாம்!
இன்னொன்றையும் மறத்தல் கூடாது.....
நாம் பித்துக்குளித் தனமாகக் கற்பனை செய்தது போல, கடவுளுக்கு ஒரு போதும் அழிவு இல்லை என்பதை ஏற்றுக் கொண்டால்....
எப்போதும் இருக்கும் கடவுள், நம் மரணத்தைத் தடுத்து நிறுத்தி, அவரைப் போலவே நமக்கும் ‘மரணமில்லாப் பெரு வாழ்வை’நல்குவாரா?!
தற்கலிகமாகவேணும் ஓர் ஆண்டுக்கு...ஒரு யுகத்துக்கு... ஒரு சூரிய ஆண்டுக்கு நம் சாவைத் தள்ளி வைப்பாரா?!
கடவுள் என்று ஒருவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதனாகப் பிறந்தவனுக்குச் சாவு நிரந்தரமானது.
அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாததால்தான்....
’அவன் திருவடியில் ஐக்கியமாதல்’...’மரணமில்லாப் பெருவாழ்வு’’மறு
பிறப்பு’...என்று எவ்வாறெல்லாமோ கற்பனை செய்து, அனுமானித்து மனிதர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு திருப்தி பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
மறு பிறப்பு என்பது ‘உண்மை’ என்றே ஏற்றுக் கொண்டாலும்.....
ஓர் உயிர் எத்தனை முறை இறந்து இறந்து பிறந்து கொண்டே இருக்கும்?
எவ்வளவு காலத்திற்கு?
கடவுள் என்பவர் இருக்கும்வரையா?
ஆதாரங்களுடன் நிரூபித்தவர் யார்?
உணர்ந்தவர் யார்? அவரால் பிறருக்கு உணர்த்த முடியுமா?
இந்தச் சாவைப் பற்றிய சிந்தனையும் அது பற்றிய அச்சமும் இல்லையென் றால் ....................................
கடவுளைப் பற்றிய சிந்தனையும் உதித்திருக்காது!
’மனித உடம்புக்கு மட்டும் தான் அழிவு; உயிருக்கு அழிவே இல்லை.அது ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு உடலில் புகுந்து வாழ்ந்து முடித்து வெளியேறிவிடும்.ஏதாவது ஒரு பிறவியில் மற்ற பிறவிகள் பற்றிய நினைவுகள் வந்து போகும்.பல பிறவிகள் எடுத்துக் கொண்டே இருந்தாலும்
தனக்கு அழிவே இல்லை என்பதை உயிர் அறிந்திருக்கும்........’இப்படியான
ஒரு நிலை நிரூபிக்கப் பட்டிருந்தால்.....
மனிதன் கடவுளைக் கண்டுகொள்ளவே மாட்டான்!
அடுக்கடுக்காய்த் துன்பங்கள் வந்தாலும் அவற்றால் தனக்கு அழிவு வராது என்பதை அவன் அறிந்திருப்பதால்.....
தன்னம்பிக்கையோடு துன்பங்களை எதிர் கொள்வான்;கடவுளைக் கண்டுகொள்ளவே மாட்டான்!
“ஏன் தோன்றினோம்...எப்படித்தோன்றினோம்?”என்பது பற்றியெல்லாம் அவன்
கவலைப் படுவதில்லை.ஆனால், “ஏன் சாகிறோம்...எப்படிச் சாவோம்?”என் பதை நினைத்துக் கவலைப் படுகிறான்.வேடிக்கைதான்!
இதற்கு மூல காரணம் ஆறாவது அறிவு.
இந்த அறிவால் விளைந்த நன்மைகளைக் காட்டிலும் தீமைகள் அதிகம்[பட்டியல் இட முடியும்]
தீமைகளில் தலையாயது இந்த மரண பயம்.
மரண பயத்துக்கு ஆளாகி, வாழ்ந்துகொடிருக்கும் போதே செத்துச் செத்துப் பிழைக்காத மனிதர் யார்?
இப்படிச் செத்துப் பிழைப்பதைவிட........
கடவுளோடு சேர்ந்து செத்துத் தொலைவது மேலானது.
’அவ்வளவுதானா? கடவுளோடு சேர்த்து எல்லாமே இல்லாமல் போனதா?
இனி இந்த வெளியில் எப்போதும் வெறுமைதானா?
கடவுள் திரும்பி வரமாட்டாரா? மனிதகுலம் மீண்டும் தோன்றித் துளிர் விட்டுத் தழைக்காதா?”
இவ்வாறெல்லாம் யாராவது சிந்தித்துக் கவலைப் படுகிறீர்களா?
அது முட்டாள் தனமானது.
தனி மனிதனைப் பொறுத்தவரை....
ஒரு முறை பிறந்து வாழ்ந்து செத்துப் போனால், அவனைப் பொறுத்தவரை எல்லாமே முடிந்து போனது.
அப்புறம் எது இருந்து எது அழிந்தால் அவனுக்கென்ன?
ஒவ்வொரு தனி மனிதனின் நிலையும் இதுதான்.
இக வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்கிற இன்பங்களைக் காட்டிலும்
துன்பங்களே மிகுதி[விதிவிலக்காக ஒரு சிலர் இருக்கலாம்.அவர்களுக்குத் தத்துவ சிந்தனை{குறிப்பாக மரணம் பற்றி}கொஞ்சமும் இருக்காது என்பதில் ஐயம் இல்லை.மரணத்தைப் பற்றி அடிக்கடி சிந்தித்து மனதைப் பக்குவப் படுத்திக் கொண்ட பகுத்தறிவாளரும் இதற்கு விதிவிலக்கு]
“பிறப்பு ஏன்? இறப்பு ஏன்? இன்பம் ஏன்? துன்பம் ஏன்?எப்படி எல்லாம் சிந்தித்தாலும் ஒன்றும் புரியவில்லையே ஏன்...ஏன்...?”------இப்படியெல்லாம், இன்னும் எப்படியெல்லாமோ எண்ணியெண்ணிக் குழம்பிக் காலம் கழித்து ஒரு நாள் செத்துத் தொலைப்பதை விட, எதிர் பாராமல் ஒரு நாளில் கடவுளோடு சேர்ந்து சாவது எவ்வளவோ மேல்!
..............................................................................................................................................................
அடுத்து................
கடவுள் அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சத்துக்கு எவ்வித பங்கமும் இல்லை என்று வைத்துக் கொள்வோம்.
கடவுளால் கட்டுப் படுத்தப் படாத இந்த உலகில் என்னவெல்லாம் நடக்கும்?
பின்னர் இது பற்றிச் சிந்திப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக