ஆண்களைக் காட்டிலும் பெண்களின் மூளை, அளவில் சிறியது. அதனால், ஆண்களே அதி புத்திசாலிகள் என்பார்கள். ஆனால், ’அது’ விஷயத்தில் மட்டும் பெண்களுக்குரிய ‘புத்திசாலித்தனம்’ ஆண்களுக்கு இல்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
கதை: ஜன்னலோர இருக்கை
பேருந்து ஓட ஆரம்பித்தவுடன் பசுபதியின் நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது.
அவனுக்கு நேர் முன் இருக்கையில் ஒரு தேன்சிட்டு! அவளுக்கு இருபக்கமும் இரண்டு பொக்கைவாய்க் கிழவிகள்.
அரைச்சந்திர வடிவில் தகதகத்த அவளின் பொன்நிற முதுகும், பூனை முடி படர்ந்த சங்குக் கழுத்தும் உறங்கிக் கொண்டிருந்த அவனின் இளமையைத் தட்டி எழுப்பின. ஒரு தடவை அவளைத் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டான்.
இருக்கையில் நன்றாகச் சாய்ந்து, தன் கால் விரல்களால் அவளின் குதிகாலில் உரசி வெள்ளோட்டம் பார்த்தான்.
அவள் திரும்பிப் பார்க்கவோ முறைக்கவோ இல்லை.
அவனுக்குள் தைரியம் சுரந்தது. அவளின் ‘மெத்’தென்ற கெண்டைக்கால் சதையை, இரு கால் விரல்களால் லேசாகக் கிள்ளினான்.
அவள் கண்டுகொள்ளவே இல்லை! அவளும் உணர்ச்சிவசப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தான் பசுபதி.
காலைச் சற்றே பின்னுக்கு இழுத்து, மீண்டும் நுழைத்து, அவளின் வழுவழுப்பான கால் சதையில் மேலும் கீழுமாகத் தேய்த்தான்.
அதனால் கிடைத்த சுகம் அவனைச் சிலிர்க்க வைத்தது. ஆனால், அது ஓரிரு நிமிடமே நீடித்தது.
‘சரேல்’ என எழுந்து நின்ற அவள், சன்னலோரம் இருந்த கிழவியைப் பார்த்து, “ஆயா, கையை வெச்சுட்டுச் சும்மா இருக்க மாட்டியா? இந்தப் பக்கம் நகரு” என்று அதட்டலாய்ச் சொல்லி, ஜன்னலோர இருக்கைக்கு இடம் பெயர்ந்தாள்.
அவள் இடம் பெயர்ந்தபோது, அவனின் வலப்பக்கம் இருந்த ஜன்னலோர இருக்கையை அரைக் கண்ணால் முறைப்பதையும் அவன் கவனிக்கவே செய்தான்.
அந்த இருக்கை காலியாக இருந்தது. தனக்கு இடப்பக்க இருக்கையில் ஒரு பத்து வயதுச் சிறுவன். அவள் மீது யாரும் கை வைக்க வாய்ப்பே இல்லாத நிலையில் அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்று பசுபதிக்குக் குழப்பமாக இருந்தது.
“காலை வெச்சுட்டுச் சும்மா இருக்க மாட்டியா? என்று தன்னைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வியைத்தான் இப்படிப் பதட்டத்தில் மாற்றிக் கேட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். பாட்டியிடம் சொல்வது போல, நாகரிகமாகத் தன்னை எச்சரித்திருக்கிறாள் என்றும் நம்பினான்.
நல்ல பிள்ளையாய்க் கைகளையும் கால்களையும் மடக்கி வைத்து இருக்கையில் சாய்ந்து கண் மூடினான் பசுபதி.
“தூங்கினது போதும் எழுந்திரு” என்ற அதட்டல் கேட்டுப் பசுபதி கண்விழித்தான்.
“ஊர் வந்திடிச்சி” என்று சொன்ன ஜன்னலோரச் சிட்டு, “போ...போ...” என்று கிழவியை முன்னுக்குத் தள்ளினாள்.
இடத்தைக் காலி செய்வதற்கு முன்னால், ”மர மண்டை...” என்று பசுபதிக்குக் கேட்கும்படியாக மூன்று தடவை சொன்னாள்; வெறுப்பில் வடித்த ஒரு கடைக்கண் பார்வையை அவன் மீது வீசவும் செய்தாள்.
‘மரமண்டை’ என்று அவள் சொன்னது தன்னைத்தான் என்பது புரிய பசுபதிக்கு நிறையவே அவகாசம் தேவைப்பட்டது. புரிந்தபோது.....
“நான் மடையன்...அடிமடையன்...”என்று அருகில் இருப்பவர்கள் தன்னை வேடிக்கை பார்ப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் முணுமுணுத்தான்.
அதற்கப்புறமும் அந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்போதெல்லாம் இப்படி முணுமுணுப்பது அவனுக்கு வழக்கமாகிவிட்டது.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக