அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 12 மே, 2016

இப்பதிவு, ‘குமுதம்’ இதழ் ஆசிரியருக்குச் சமர்ப்பணம்!

ஓர் எழுத்தாளரின்  படைப்பை அச்சரம் மாறாமல் இன்னொருவர்  தன் பெயரில் வெளியிட்டால் அது ‘கதைத் திருட்டு’. ‘கரு’வை மட்டும் சுட்டால் அதுவும் திருட்டுதான். அப்படியொரு திருட்டுக்குக் குமுதம் ஆசிரியர் உடந்தையாக இருந்திருக்கிறார்[!!!].

கீழ்க் காண்பது, 30.03.2015 குங்குமம் இதழில், ‘வேண்டாம்’ என்னும் தலைப்பில் சிறியேன்[நாமக்கல் பரமசிவம்] எழுதிய ஒரு பக்கக் கதை.
இனி நீங்கள் வாசிக்கவிருப்பது இந்த வாரக் குமுதத்தில்[18.05.2016] ‘ஒரு சொல்’ என்னும் தலைப்பில், ‘விஜயலட்சுமி’ என்பவர் பெயரில் வெளியாகியிருக்கும் ஒ.ப.கதை.
குமுதம் ஆசிரியர், ‘நம்பர் 1 போட்டி’ இதழான குங்குமம் வார இதழை வாசிக்கவே மாட்டாரா? இதழின் மற்ற அம்சங்களை வாசித்தாலும் ஒ.ப.கதைகளைப் படிக்கும் வழக்கம் அவருக்கு இல்லையா? பரமசிவம் போன்ற, குமுதம் இதழைச் சற்றே கடுமையாக விமர்சனம் செய்யும் கத்துக்குட்டிகளின் கதைகளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாரா?

இப்பதிவு, மிகச் சிறந்த புனைகதைப் படைப்பாளரும், அசத்தும் ஆன்மிக எழுத்தாளரும்,  இங்கிதம் தெரிந்த இதழாசிரியரும், நம் மரியாதைக்கு உரியவரும் ஆன குமுதம் ஆசிரியர் ‘ப்ரியா கல்யாணராமன்’ அவர்களுக்குச் சமர்ப்பணம்.
===============================================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக