வெள்ளி, 22 ஜூலை, 2016

ரஜினியை வாழ்த்தி ஒரு கவிதை!!!!!


நன்றி: கூகிள்
இன்று[22.07.2016] காலையில், ‘கபாலி’ திரைப்படம் வெளியான பல்வேறு திரையரங்குகளின் முன்னால் ரஜினி ரசிகர்கள், கூட்டம் கூட்டமாய்ப் பட்டாசு வெடித்துக் கொட்டம் அடிப்பதையும், ‘கும்பம்’ ஏந்தி நிற்கும் பரவசக் கோ[அவ]லங்களையும் காட்சிப்படுத்திக் கலைச்சேவை செய்துகொண்டிருந்தன தமிழ்த் தொலைக்காட்சி ஊடகங்கள்.

நடிகரின் வகை வகையான வண்ண விளம்பரப் படங்களுக்கி்டையே, ‘கபாலீஸ்வரரே வருக!’ என்று, அவரைக் கடவுளாக்கி வரவேற்கும் படங்களையும் காண முடிந்தது[‘பாலிமர்’ தொ.க. செய்தியில்]. [நாளைய தினசரிகளில் கலியுகக் கபாலீஸ்வரர் காட்சி தருவார் என்று நம்புகிறேன்].

கடவுள் நம்பிக்கை இல்லாத என் ஒட்டுமொத்த சதைப் பிண்டமும் சில கணங்கள் சிலிர்த்து அடங்கியது.

அடுத்த கணமே, என் நாவிலிருந்து அருவியெனப் பெருகி வழியலாயிற்று ஒரு ‘போற்றி’க் கவிதை! அது.....

போற்றி போற்றி ரஜினி போற்றி

கலியுகக் கபாலீஸ்வரக் கடவுள் போற்றி 

போற்றி அன்னார் திருநாமம் போற்றி

போற்றி அவர்தம் திருவடி போற்றி

போற்றாத கயவர் நரகம் எய்துவர்

போற்றி வாழ்வோர் புண்ணியம் சேர்ப்பர்

மாந்தர் வாழ்ந்திட பிறஉயிரினம் வாழ்ந்திட

மக்கள் கடவுளாம் ரஜினி போற்றி!
********************************************************************************************************************
‘நடிகர் ரஜினிகாந்த் கடவுளானார். கோயில் கட்டிக் குடமுழுக்குச் செய்வது எப்போது?’ என்னும் தலைப்பில் எழுதப்பட்டு என் தளத்தில் வெளியானது இப்பதிவு. இதை இணைத்துக்கொண்டதாக அறிவித்த ‘தமிழ்மணம்’ என்ன காரணத்தாலோ இடுகைப் பட்டியலில்[முகப்புப் பக்கத்தில்] சேர்க்கவில்லை. சில மணி நேரங்கள் கழித்துப் அடுத்து வரும் பக்கங்களில் வெளியாவதால் ‘பார்வை’ எண்ணிக்கை மிக மிகக் குறையும் என்பது தமிழ்மணம் அறியாததல்ல.

ரஜினியின் விளம்பரப் படங்களுக்குப் பாலாபிஷேகம் செய்கிறான் ரசிகன்; தேங்காய் பழம் உடைக்கிறான்; தீபாராதனை காட்டுகிறான்; சேலத்தில் திரையரங்கின் முன்னால் கிடா வெட்டி வெறிக்கூத்து நிகழ்த்தியிருக்கிறான். 


இம்மாதிரியான மூடநம்பிக்கைகளைக் கண்டிப்பது தவறாகுமா?


மேற்கண்டவாறு நான் தலைப்புக் கொடுத்தது குற்றமா?


தமிழ்மணத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை.


இப்பதிவுகூட, தமிழ்மணம் இடுகைப் பட்டியலில் இடம்பெறுமா என்று உள்மனம் கேள்வி எழுப்புகிறது.



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக