‘நான் துறவியல்ல; தியானம் செய்பவன்’[ஆனந்த விகடன் பேட்டி. 22.03.2017 இதழ்] என்கிறார் ஜக்கி வாசுதேவ். தியானம் செய்கிற, செய்விக்கிற ஒரு சாதாரண மனிதருக்கு, ‘சத்குரு’ என்னும் பட்டம் எதற்கு?
கண்களை மூடிக்கொண்டு, ஏதேனும் ஒரு கடவுள் பெயரையோ, மந்திரங்கள் என்னும் பெயரால் மனிதர்கள் சொல்லிவிட்டுப்போன சுலோகங்களையோ திரும்பத் திரும்ப, நிமிடக் கணக்கிலோ மணிக் கணக்கிலோ முணுமுணுப்பது தியானமா?[மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட ‘யோகா’ என்பது வேறு]
கண்களை மூடிக்கொண்டு, ஏதேனும் ஒரு கடவுள் பெயரையோ, மந்திரங்கள் என்னும் பெயரால் மனிதர்கள் சொல்லிவிட்டுப்போன சுலோகங்களையோ திரும்பத் திரும்ப, நிமிடக் கணக்கிலோ மணிக் கணக்கிலோ முணுமுணுப்பது தியானமா?[மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட ‘யோகா’ என்பது வேறு]
எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று புலன்களை வருத்திப் புலம்பிக்கொண்டிருப்பது தியானமா?
தியானம் குறித்தும் அதனால் விளையும் பயன்கள் குறித்தும் ஆதாரங்களுடன் விளக்கிச் சொன்னவர் எவர்?
முக்தி, சொர்க்கம் என்றெல்லாம ஆன்மிக வாதிகள் காலம் காலமாகச் சொல்லிவருகிறார்களே தவிர, அவற்றிற்கு முறையான விளக்கங்கள் தந்தவர் எவருமிலர். அது போலத்தான் இதுவும். வார்த்தைகளின் பொருள் புரியாமலே மக்கள் முணுமுணுக்கவும் புலம்பவும் பழகிக் கொண்டார்கள்.
மேலே குறிப்பிட்டது போல, முணுமுணுப்பதும் புலம்புவதும்தான் தியானம் என்றால், இந்தத் தியானத்தைத் தன்னிச்சையாய்த் தாம் இருக்கும் இடத்திலேயே ஒருவர் செய்துகொள்ளலாம். இதற்கு ஜக்கியைப் போல சத்குருவெல்லாம் எதற்கு?
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கவர்ச்சிகரமானதும் மனதை மயக்குவதுமான ஆசிரமம் எதற்கு? பல நூறு கோடி ரூபாய்ச் சொத்து எதற்கு? 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை எதற்கு?
கடவுள், கண்ணுக்கெட்டாத அல்லது தொட்டுவிட இயலாத உயரத்தில் இருப்பதாக நம்புகிறவன் மனிதன். இந்த நம்பிக்கையின் விளைவாகத்தான், வெட்டவெளிகளில் நின்று கடவுளைத் தொழும்போது உயர உயரத் தன் பார்வையைச் செலுத்தி இரு கை கூப்புகிறான்.
தரையில் குடிகொண்டிருக்கும் கடவுள்களை விட, திருமலை, சபரி மலை, இமயத்தின் கங்கோத்ரி போன்ற உயர உயரமான மலைக் கடவுள்களுக்கு மகிமை இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்; தேடிச் செல்கிறார்கள்.
மக்களின் ‘உயரத்திற்கு மயங்கும்’ இந்தப் பலவீனத்தைப் புரிந்துகொண்டவர் ஜக்கி. 112 அடிஉயரத்தில் அவர் சிலை அமைத்ததன் ரகசியம் இதுதான்.
ஞாயிற்றுக் கிழமை என்றால், 20 ஆயிரம் பேரும், நவராத்திரி என்றால் 10 லட்சம் பேரும் தம் கோயிலில் கூடுவதாகப் பீத்திக்கொள்கிறார்.
பத்து லட்சம் பேரும் பத்து லட்சம் அறிவாளிகள் அல்லர்; அவர்கள் ஜக்கியால் அறிவு முடமாக்கப்பட்டவர்கள். இது அவருக்கும் தெரியும்.
நவராத்திரிக் கொண்டாட்டம் என்னும் பெயரில் விடிய விடிய ஆடிப்பாடிக் கூச்சலிட்டும் கும்மாளமடித்தும் ஆர்ப்பாட்டம் செய்வதால், ஓரிரவுப் பொழுதை மக்கள் தம்மை மறந்து கழிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு பயனேதும் இல்லை.
‘எனக்கு வருமானம் 400 கோடி என்றாலும் சரி, 4000 கோடி என்றாலும் சரி அதை மக்களுக்குத்தான் செலவு செய்யப்போகிறேன்’ என்கிறார் வெள்ளியங்கிரிப் பிரபலம். கடவுளின் பெயரால், கோடிக்கணக்கில் செலவழித்துக் கட்டடங்கள் கட்டுவதும், சிலை வைப்பதும் மக்களுக்குச் செய்யும் சேவை என்கிறாரா அவர்? பகுத்தறிவைப் பயன்படுத்தவிடாமல் தடுப்பது சேவையாகுமா?
சிவராத்திரிக்கு 10 லட்சம் பேர் வருகை புரிவதாகச் சொல்கிறார்.
112 அடி சிலை நிறுவப்பட்ட அந்தச் சிவராத்திரியிலும் 10 லட்சம் பேர் வருகை தந்திருக்கிறார்கள். அதாவது, ஜக்கியால் அறிவு முடமாக்கப்பட்ட 10 லட்சம் பேர் அன்று வருகை புரிந்திருக்கிறார்கள்.
அடுத்து வரும் நாட்களில், அவர் 1120 அடி சிலை அமைப்பாரேயானால் அவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாகப் பெருகும். உயரம் அதிகரிக்க அதிகரிக்க வருகையாளரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகும். இதன் மூலம்.....
சிந்திக்கும் அறிவு முடக்கப்பட்ட, மிகப் பல லட்சம் அப்பாவிகளை ஓரிடத்தில், ஒரு நேரத்தில் திரட்டியது என்ற வகையில் இது உலகின் மாபெரும் சாதனையாகவும் அமையும்.
நவீனக் கட்டடக்கலை நுட்பங்களின் மூலம் அயல் நாடுகளில் 200 அடுக்கு, 300 அடுக்கு என உயர உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டுவரும் நிலையில், ஜக்குவும்[பல நூறு கோடி ரூபாய் சொத்துக்குச் சொந்தக்காரர். அவர் நினைத்தால் பல பல பல நூறு கோடி செல்வத்தைக் குவிக்க முடியும்] இம்மாதிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
இந்தியப் பிரதமரின் ஆதரவுடன் மேற்குறிப்பிட்ட சாதனையை ஜக்கி நிகழ்த்துவார். இது போன்ற வேறு பல சாதனைகளையும் அவர் நிகழ்த்தக்கூடும்.
வாழ்க சத்குரு ஜக்கி வாசுதேவ்! வளர்க அவர்தம் புகழ்!!
***********************************************************************************************************************
அத்தனைக்கும் ஆசைப்படு என்றவர் ,உங்கள் யோசனைக்கும் ஆசைப் பட்டால் வியப்பேதுமில்லை !கொட்டிக் கொடுக்க கார்பரேட் கம்பெனிகள் தயாராக இருக்கே :)
பதிலளிநீக்குபிரதமரே அவருடைய சீடர்தானே!
நீக்குநன்றி பகவான்ஜி.
சிறப்பாக அலசி உள்ளீர்கள்
பதிலளிநீக்குமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html
நன்றி நண்பரே.
நீக்கு