செவ்வாய், 21 மார்ச், 2017

இந்த உயரம் போதுமா ஜக்கி வாசுதேவ்?!?!?!

‘நான் துறவியல்ல; தியானம் செய்பவன்’[ஆனந்த விகடன் பேட்டி. 22.03.2017 இதழ்] என்கிறார் ஜக்கி வாசுதேவ். தியானம் செய்கிற, செய்விக்கிற ஒரு சாதாரண மனிதருக்கு, ‘சத்குரு’ என்னும் பட்டம் எதற்கு?
கண்களை மூடிக்கொண்டு, ஏதேனும் ஒரு கடவுள் பெயரையோ, மந்திரங்கள் என்னும் பெயரால் மனிதர்கள் சொல்லிவிட்டுப்போன சுலோகங்களையோ திரும்பத் திரும்ப, நிமிடக் கணக்கிலோ மணிக் கணக்கிலோ முணுமுணுப்பது தியானமா?[மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட ‘யோகா’ என்பது வேறு]

எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று புலன்களை வருத்திப் புலம்பிக்கொண்டிருப்பது தியானமா?

தியானம் குறித்தும் அதனால் விளையும் பயன்கள் குறித்தும் ஆதாரங்களுடன் விளக்கிச்  சொன்னவர் எவர்?

முக்தி, சொர்க்கம் என்றெல்லாம ஆன்மிக வாதிகள் காலம் காலமாகச் சொல்லிவருகிறார்களே தவிர, அவற்றிற்கு முறையான விளக்கங்கள் தந்தவர் எவருமிலர். அது போலத்தான் இதுவும். வார்த்தைகளின் பொருள் புரியாமலே மக்கள் முணுமுணுக்கவும் புலம்பவும் பழகிக் கொண்டார்கள்.

மேலே குறிப்பிட்டது போல, முணுமுணுப்பதும் புலம்புவதும்தான்   தியானம் என்றால், இந்தத் தியானத்தைத் தன்னிச்சையாய்த் தாம் இருக்கும் இடத்திலேயே ஒருவர் செய்துகொள்ளலாம். இதற்கு ஜக்கியைப் போல சத்குருவெல்லாம் எதற்கு?

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கவர்ச்சிகரமானதும் மனதை மயக்குவதுமான ஆசிரமம் எதற்கு? பல நூறு கோடி ரூபாய்ச் சொத்து எதற்கு? 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை எதற்கு?

கடவுள், கண்ணுக்கெட்டாத அல்லது தொட்டுவிட இயலாத உயரத்தில் இருப்பதாக நம்புகிறவன் மனிதன். இந்த நம்பிக்கையின் விளைவாகத்தான், வெட்டவெளிகளில் நின்று கடவுளைத் தொழும்போது உயர உயரத் தன் பார்வையைச் செலுத்தி இரு கை கூப்புகிறான்.

தரையில் குடிகொண்டிருக்கும் கடவுள்களை விட, திருமலை, சபரி மலை, இமயத்தின் கங்கோத்ரி போன்ற  உயர உயரமான மலைக் கடவுள்களுக்கு மகிமை இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்; தேடிச் செல்கிறார்கள்.

மக்களின் ‘உயரத்திற்கு மயங்கும்’ இந்தப் பலவீனத்தைப் புரிந்துகொண்டவர் ஜக்கி. 112 அடிஉயரத்தில் அவர் சிலை அமைத்ததன் ரகசியம் இதுதான்.

ஞாயிற்றுக் கிழமை என்றால், 20 ஆயிரம் பேரும், நவராத்திரி என்றால் 10 லட்சம் பேரும் தம் கோயிலில் கூடுவதாகப் பீத்திக்கொள்கிறார்.

பத்து லட்சம் பேரும் பத்து லட்சம் அறிவாளிகள் அல்லர்; அவர்கள் ஜக்கியால் அறிவு முடமாக்கப்பட்டவர்கள். இது அவருக்கும் தெரியும்.

மகா சிவராத்திரிக் கொண்டாட்டம் என்னும் பெயரில் விடிய விடிய ஆடிப்பாடிக் கூச்சலிட்டும் கும்மாளமடித்தும் ஆர்ப்பாட்டம் செய்வதால், ஓரிரவுப் பொழுதை மக்கள் தம்மை மறந்து கழிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு பயனேதும் இல்லை. 

எனக்கு வருமானம் 400 கோடி என்றாலும் சரி, 4000 கோடி என்றாலும் சரி அதை மக்களுக்குத்தான் செலவு செய்யப்போகிறேன் என்கிறார் வெள்ளியங்கிரிப் பிரபலம். கடவுளின் பெயரால், கோடிக்கணக்கில் செலவழித்துக் கட்டடங்கள் கட்டுவதும், சிலை வைப்பதும் மக்களுக்குச் செய்யும் சேவை என்கிறாரா அவர்? பகுத்தறிவைப் பயன்படுத்தவிடாமல் தடுப்பது சேவையாகுமா?

சிவராத்திரிக்கு 10 லட்சம் பேர் வருகை புரிவதாகச் சொல்கிறார்.

112 அடி சிலை  நிறுவப்பட்ட அந்தச் சிவராத்திரியிலும் 10 லட்சம் பேர் வருகை தந்திருக்கிறார்கள். அதாவது, ஜக்கியால் அறிவு முடமாக்கப்பட்ட 10 லட்சம் பேர் அன்று வருகை புரிந்திருக்கிறார்கள்.

அடுத்து வரும் நாட்களில், அவர் 1120 அடி சிலை அமைப்பாரேயானால் அவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாகப் பெருகும். உயரம் அதிகரிக்க அதிகரிக்க வருகையாளரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகும். இதன் மூலம்.....

சிந்திக்கும் அறிவு முடக்கப்பட்ட,  மிகப் பல லட்சம் அப்பாவிகளை ஓரிடத்தில், ஒரு நேரத்தில் திரட்டியது என்ற வகையில் இது உலகின் மாபெரும் சாதனையாகவும் அமையும்.

நவீனக் கட்டடக்கலை நுட்பங்களின் மூலம் அயல் நாடுகளில் 200 அடுக்கு, 300 அடுக்கு என உயர உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டுவரும் நிலையில், ஜக்குவும்[பல நூறு கோடி ரூபாய் சொத்துக்குச் சொந்தக்காரர். அவர் நினைத்தால் பல பல பல நூறு கோடி  செல்வத்தைக் குவிக்க முடியும்] இம்மாதிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

இந்தியப் பிரதமரின் ஆதரவுடன் மேற்குறிப்பிட்ட சாதனையை ஜக்கி நிகழ்த்துவார். இது போன்ற வேறு பல சாதனைகளையும் அவர் நிகழ்த்தக்கூடும்.

வாழ்க சத்குரு ஜக்கி வாசுதேவ்! வளர்க அவர்தம் புகழ்!!
***********************************************************************************************************************






11 கருத்துகள்:

  1. இந்த மந்திரங்களை எல்லோரும் படித்து உளற வேண்டும் நண்பரே

    அப்பொழுதுதான் இதன் மகத்துவம் குறையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது மிகவும் சரியே.

      நன்றி நண்பா.

      நீக்கு
    2. Thalaivare, amaithi maarkathilum idhu pol periya pulligalin sithu vilayattu nadakindradhe, adhaip pattriyum ezhudhinaal nandraaga irukkum. dhairiyam irukkiradhaa?

      நீக்கு
    3. எனக்குத் தைரியம் இருக்கிறதா என்று கேட்கும் தைரியசாலியான நீரே அமைதி மார்க்கம் பற்றி இங்கு எழுதியிருக்கலாம். பரவாயில்லை.

      இஸ்லாம் என்ன கிறித்தவ மதம் பற்றியும் எழுதியிருக்கிறேன். அனைத்துப் பதிவுகளையும் படியும். புரியும்.

      குறைந்தபட்சம் கீழ்க்காணும் ஒரு பதிவை மட்டுமாவது படித்துப் பாரும்.

      ‘மூன்று பெரிய மதங்களும் மூச்சுத் திணறும் கடவுளும்’ http://kadavulinkadavul.blogspot.com/2016/06/blog-post_89.html

      நீக்கு
    4. idhu ennanga aniyaamaa irukku! neenga kodutha sutiyila podhuva ezhudi irukeenga, aanaa, pira madha piragumaraip patri kurippittu edhavadhu thanipattu katturai ezhudi irukeengala, jaakiyay kalaithadhu pola?? Summaa hai naanum ellaa madhathaiyum korai sollitten appadinnu jalli adikaatheenga....thairiam irudndha jakkeer husain etc pathi katturai varainga paarpom!

      நீக்கு
    5. அய்யா அஞ்சாநெஞ்சரே,

      பொதுவாக எழுதுவதற்கெல்லாம் தைரியம் தேவையில்லை என்கிறீரா? சரி. நீர் கிண்டலடிப்பது போல் நான் ஒன்றும் பெரிய தைரியசாலி அல்ல. போதுமா?

      எனக்குத் தெரிந்ததைத் தெரிந்தவர்களைப் பற்றித்தான் நான் எழுத முடியும். அதனால் நேரும் விளைவுகளையும் என்னால் எதிர்கொள்ள முடியும்.

      உமக்குப் பிடிக்காத ஒரு நபரைக் குறிப்பிட்டு அவரைப் பற்றி எழுதச் சொல்ல உமக்கு என்ன அருகதை இருக்கு? நீர் குறிப்பிடும் ஆள் பற்றித் தைரியம் இருந்தா உமது தளத்தில் எழுதும்.

      ஜல்லி அடித்தல் கில்லி அடித்தல்னு இங்கே வந்து வம்பளக்க வேண்டாம்.

      நீக்கு
  2. நல்லதொரு பதிவு.
    //தரையில் குடிகொண்டிருக்கும் கடவுள்களை விட திருமலை சபரி மலை இமயத்தின் கங்கோத்ரி போன்ற உயர உயரமான மலைக் கடவுள்களுக்கு மகிமை இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்; தேடிச் செல்கிறார்கள்.
    மக்களின் ‘உயரத்திற்கு மயங்கும்’ இந்தப் பலவீனத்தைப் புரிந்துகொண்டவர் ஜக்கி.//

    நமது மக்களின் பலவீனங்களை மிக சரியாக நீங்க புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ஐயா. உங்கள் அனுபவங்கள் மிக பெரியது.
    கடவுள் இருக்கும் உயரத்திற்கு மட்டுமல்ல,சாதாரணமா போக கூடிய தொலைவில் இல்லாமல் கடவுள் எவ்வளவு தொலை தூரத்தில் இருக்கிறாரோ அவ்வளவு தொலை தூரம் சென்று கடவுளை வணங்கினால் தான், அல்லது அங்கே தூரம் சென்று புனித யாத்திரை சென்றாலோ தான் கடவுள் அருள் கிடைக்கும் என்பது நமது மக்களின் நம்பிக்கை.

    பதிலளிநீக்கு
  3. //மகா சிவராத்திரிக் கொண்டாட்டம் என்னும் பெயரில் விடிய விடிய ஆடிப்பாடிக் கூச்சலிட்டும் கும்மாளமடித்தும் ஆர்ப்பாட்டம் செய்வதால் ஓரிரவுப் பொழுதை மக்கள் தம்மை மறந்து கழிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு பயனேதும் இல்லை.//
    நமது மக்களுக்கு கொண்டாட்டங்கள் தேவைபடுகிறது. மேற்கு நாட்டவர்கள் அதை சுதந்திரமாக
    open-air concert,open air festival என்று சுதந்திரமாக கொண்டாடி மகிழுகிறார்கள்.
    நமது நாட்டு போலித்தனம் அப்படி செய்ய எல்லாம் இடம் கொடுக்கவில்லை.ஆகவே ஆன்மிக கொண்டாட்டம் மெரினா புரச்சி.

    பதிலளிநீக்கு