http://kadavulinkadavul.blogspot.com/2017/05/blog-post_14.html
‘வருண்’ அவர்களின் கருத்துரை:
#பாலகுமாரன் எப்போவுமே இப்படித்தானே எழுதினார்? பொண்டாட்டியை "தேவடியாள்"னு சொன்னால்த்தான் காமம் நல்லாயிருக்கும்னு நம்புபவர் அவர். இப்போ "நாட்டுக்கட்டை" பட்டம் காதலிக்கு. :)
இதே மாதிரி பொம்பளைங்க ஆம்பளைங்க விமர்சிக்கிறாப்பிலே எழுதினால் ஆம்பளைக்கு அன்னைக்கு நைட் வயாகராவும் உதவ முடியாது என்பதையும் கவனிங்க. ஆம்பளைங்க பொம்பளைங்களை இப்படிப் பேசித்தான் தங்களை "தேர்த்த" முடியுது. அவளை ஓரளவுக்கு கவனிக்க முடியுது என்பது பரிதாபம். வயசான காலத்தில் பொம்பளைகளை அவர் இப்படித்தான் திருப்திப் படுத்த முடியும். படுக்கையில் முடியாது பாருங்க?! பாவம் விடுங்க!
மேலும் வயதாக ஆக அசிங்கம் எல்லாம் தெரியாதுனு நீங்க சாண்டில்யன் பிற்கால நாவல்களை முந்தைய நாவல் களுடன் இணைசெய்து பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
நான் என் சொந்த அனுபவத்தில் கண்டதென்னவென்றால் படைப்பாளிக்கு காமம் பற்றி எழுதும்போது தான் எல்லை கடப்பது உணர முடியாது என்பதே.
காதலன்-காதலி, கணவன் -மனைவி இடையில் உள்ள உறவைத்தானே நான் எழுதுறேன். அதில் காமம் தூக்கினால் "சுப(க)ம்"தானே என்பார். எனக்கும் அதில் ஓரளவுக்கு ஒப்புதல் உண்டு.
சரோஜாதேவிக் கதையில் எவனுமே காதலன் காதலி உறவு கொள்வதையோ, கணவன் மனைவி உறவு கொள்வதையோ எழுதுவதில்லையே. இன்றைய காமக் கதைகளிலும் அப்படித்தான். இல்லையா? தகாத உறவை மையமாக வைத்துத்தானே எழுதுகிறார்கள்? அதனால் நீங்க இவ்விரண்டையும் "கம்பேர்" பண்ணக் கூடாதுனு நினைக்கிறேன்.
நான் பார்த்தவரைக்கும், காமம் பற்றி எழுதும்போது நமக்கு நாம் செய்வது தவறாகத் தெரிவதில்லை. மற்றவர்கள் எழுதினால் அருவருப்பாகவும் தவறாகவும் தெரியும் என்று நம்புகிறேன். மற்றபடி நான் எழுதும்போது என் கதைக்கு வந்த விமர்சங்களை வைத்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். நான் பாலகுமாரன் விசிறி என்று என்னைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்#
என் விளக்கவுரை:
மகிழ்ச்சி வருண்.
//நான் என் சொந்த அனுபவத்தில் கண்டதென்னவென்றால் படைப்பாளிக்கு காமம் பற்றி எழுதும்போது தான் எல்லை கடப்பது உணர முடியாது என்பதே// என்கிறீர்கள்.
உண்மைதான். என்னுடைய பழைய சில கதைகளிலும்[வலைத்தளத்தில் பதிவிட்டதில்லை] இது நேர்ந்திருக்கிறது.
//காதலன்-காதலி, கணவன் -மனைவி இடையில் உள்ள உறவைத்தானே நான் எழுதுறேன். அதில் காமம் தூக்கினால் "சுப(க)ம்"தானே என்பார். எனக்கும் அதில் ஓரளவுக்கு ஒப்புதல் உண்டு// என்றும் சொல்கிறீர்கள்.
‘கணவன் - மனைவி’ இடையே...சரி; ‘காதலன் - காதலி’ இடையே ‘காமக் கிளர்ச்சி’யை உண்டுபண்ணும் உரையாடல் தவறல்லவா? அதனால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பெண்கள்தானே. எத்தனை எத்தனை வெறித்தாக்குதல்கள் ! கடத்தல்கள்! கற்பழிப்புகள்! கொலைகள்!
“ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொள்ளலாம்” என்று கார்த்தி சொன்ன பிறகும் பானுமதியின் உச்சக்கட்ட ‘வெறிப்பேச்சு’ தேவைதானா? மணமான பிறகு எப்படி வேண்டுமானாலும் வெறியாட்டம் ஆடட்டும்[‘அந்தரங்க’ உறவின்போது, ஆண்களைக் காட்டிலும் படு படு ஆபாசமாகப் பேசும் பெண்கள் எதார்த்த உலகில் உள்ளனர்]. மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
திருமணம் ஆகாத நிலையில், ‘உன்னைக் கைவிட மாட்டேன்’ என்று காதலன் வலியுறுத்திச் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில்[போராட்டத்திற்கு ஒரு தீர்வு கிட்டும் நிலையில்] காதலியின், “இங்க தொடு, அங்க தொடு... எங்கேயோ பத்திகிச்சுன்னா அதை முடிச்சாகணும்.....” என்னும் பேச்சு விரசத்தின் உச்சம் என்பதுதான் என் குற்றச்சாட்டு.
பாலகுமாரனின் இம்மாதிரியான உரையாடல்களை விமர்சன உலகம் வரவேற்குமேயானால்.....
இன்னும் வரம்பு கடந்து, “எனக்குத் தாங்கல. இப்பவே, இந்த இடத்திலேயே நான் மல்லாந்து படுத்துடுறேன். படு...என்னோட படுடா. என்னைப் பரவசப்படுத்துடா” என்று பானுமதி சொல்வதாக எழுத்துச் சித்தர் பாலகுமாரன் எழுதக்கூடும்[இது போல இதைவிடவும் ஆபாசமான எழுத்துக்குத்தான் ‘சரோஜாதேவி’யை உதாரணம் காட்டினேன்].
மற்றபடி, பாலகுமாரன்மீது அழுக்காறோ அவரைப் போல் நாம் பிரபலம் ஆகவில்லையே என்னும் ஆதங்கமோ எனக்கு இல்லை.
என்னுடைய, பாலகுமாரனின் ‘பச்சை’ எழுத்து பற்றிய பதிவு, கூடுதல் விளக்கங்களுடன் அமைந்திருத்தல் வேண்டும் என்பதைத் தங்களின் சீரிய பின்னூட்டம் உணர்த்தியதன் விளைவே இப்பதிவு.
மிக்க நன்றி வருண்.
சமீபத்தில் தனது தாய் - தந்தையின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி எழுதிவருக்கு இதெல்லாம் ஒரு விடயமாக தெரிய வாய்ப்பில்லை நண்பரே...
பதிலளிநீக்குநினைவூட்டலுக்கு நன்றி கில்லர்ஜி.
பதிலளிநீக்குஇந்த மாதிரி எழுத பாலகுமாரன் தேவையில்லை ,கழிசடை எழுத்தாளர்களே போதும் !மெர்குரிப்பூக்கள் எழுதிய கரங்கள் இப்படி தற்குறிபோல் எழுதுவதைக் காணும்போது மனம் ஒப்பவில்லை :)
பதிலளிநீக்குநாம் எழுதுவதையெல்லாம் அவர் படிப்பாரா?
பதிலளிநீக்குநன்றி பகவான்ஜி.