செவ்வாய், 11 ஜூலை, 2017

நுண்ணறிவாளன் கம்பன்!

சில ஆயிரம் ஆண்டுகளாகக் கடவுளின் ‘இருப்பு’ குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன எனினும், அனைத்துத் தரப்பினரும் ஏற்கத்தக்க  ‘முடிவு’ எட்டப்படவில்லை. கடவுள் இருப்பதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக்கொண்டால், அடுத்து எழும் கேள்விகளுள் ஒன்று.....

“படைப்புத் தொழிலை அவர் ஏன் மேற்கொண்டார்?” என்பது.

உலக அளவில் இக்கேள்விக்கு விடை காணும் முயற்சியைத் தத்துவ அறிஞர்கள் பலரும் மேற்கொண்டார்கள்/மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. ஆயினும், விடை சொன்னவர் எவருமில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது[இருந்தால், எவரொருவரும் இங்கே பதிவு செய்யலாம்].

இந்நிலையில், நம் தமிழ்க்கவிஞன் கம்பன் மட்டுமே ஒரு காரணத்தை அனுமானித்திருக்கிறார் என்பதைக் கம்பராமாயணம் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் அறிய இயலுகிறது. அவர்தம் அனுமானம் நிரூபிக்கப்படவில்லை எனினும் அவரின் நுண்ணறிவு குறித்து நாம் பெருமைப்படலாம்.
‘கடவுள் உலகங்களைப் படைத்தது ஏன்?’

கம்பன் சொல்லும் காரணம்.....

கடவுள் ‘விளையாடுகிறார்’ என்பதே. பாடல்.....

’உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடை யாரவர்
தலைவரன்ன வர்க்கேசரண் நாங்களே’


[பொருள்: அனைத்து உலகங்களையும் படைத்துக் காத்து அழிக்கின்ற அளவில்லாத விளையாட்டை நிகழ்த்துகிற அவரே எங்கள் தலைவர். அத்தகையவரை நாங்கள் சரணடைகிறோம்]

[‘அலகிலா’ > அளவில்லாத]

’கடவுள் விளையாடலாமா? விளையாட்டின் விளைவுகள் என்ன?’ என்பன போன்ற கேள்விகள் எழுவதும் அவற்றிற்கான விடை தேடலும் வரம்பு கடப்பவை எனினும், கடவுளின் படைப்புத் தொழிலுக்குத் தன்னளவில் கம்பன் ஒரு காரணத்தைக் கண்டறிந்திருப்பது பாராட்டுக்குரியதே.

கம்பனின் நுண்ணறிவைப் போற்றுவோம்.
=========================================================





12 கருத்துகள்:

  1. இதெல்லாம் ஒரு பொழப்பா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயந்துட்டேன். கொஞ்சம் யோசித்த பிறகுதான் புரிந்தது, கடவுளைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கீங்க என்று!

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா :)
      கடவுளுக்கு எதுக்கு இந்த வேண்டாத விளையாட்டுயெல்லாம் என்று கேட்டிருக்க வேண்டுமோ :)

      நீக்கு
    3. மனதில் பட்டதைச் சொன்னேன். பகவான்ஜி மனசைப் புரிந்துகொள்ளாதவனா நான்?

      நன்றி நண்பர் பகவான்ஜி.

      நீக்கு
  2. அவருக்கும் டைம்பாஸ் தேவைப்பட்டு இருக்கலாம் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. கடவுள் எங்கே இருக்கிறார்...?

    எந்த திசையில் இருக்கிறார்...?

    இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்...?

    படம் : ?




    தேடுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லாக் கேட்டீங்க தனபாலன். நானும் இதையேதான் கேட்கிறேன்; கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

      நன்றி.

      நீக்கு
  4. கடவுளே மனிதனால் படைக்கப் பட்டவர்தானே,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படைக்கப்பட்டவர்தான். ஆனாலும் அவரால் எத்தனை சண்டைகள், சச்சரவுகள், பழிவாங்குதல்கள்!

      நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் மனம் திறந்த பாராட்டுதலுக்கு நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு