பெருமாள் முருகன் கொல்லைப்புற வழியாக நுழைந்து புக்கர் பரிசைப் பெற்றுவிடுவாரோ என்று கவலைப்படுகிறார் குமுதத்தின் ஆஸ்தான புருடா எழுத்தாளன் சாரு நிவேதிதா[ஆதாரம்: 17.01.2018 குமுதம் வார இதழ்]. 'கொல்லைப்புற வழி' என்பதற்கு, 'ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தி எழுதி உலகப் புகழ் அடைவது' என்று விளக்கமும் தருகிறார்.
இவருடைய மூன்று நூல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவுள்ளனவாம். அவை நோபல் பரிசும் புக்கர் பரிசும் பெறுவதற்கான தகுதி உடையன என்று பெருமை பீத்திக்கொள்ளும் இந்த நபருக்குப் பெருமாள் முருகனை விமர்சிக்கும் தகுதி கொஞ்சமும் இல்லை என்பதைக் கீழ்க்காணும் ஒப்பீட்டின் மூலம் அறியலாம்.
*பெருமாள் முருகன் சீரிய சிந்தனையாளர். சாருநிவேதிதா போல, 'பரமஹம்ச நித்தியானந்தா'வின் கால்களில் விழுவதும், பின்னர் அவரின் கால்களை வாரிவிடுவதுமான பச்சோந்திப் புத்தி அவருக்குக் கிஞ்சித்தும் இல்லை.
*பெருமாள் முருகன் பண்பாளர்; ஒழுக்க சீலர். சாருவைப் போல, இணையத்தில் நட்புப் பாராட்டிய ஓர் அப்பாவிப் பெண்ணின் மார்பளவை விசாரித்தது போன்ற இழி செயலை அவர் ஒருபோதும் செய்தவரல்லர். தான் சரக்கடிப்பதைப் பகிரங்கப்படுத்தி, எதையும் மறைத்துப் பேசத் தெரியாத ''அப்பாவி நான்'' என்று வாசகரை நம்பவைக்கும் சாருவின் சிறுபிள்ளைத்தனம் அவரிடம் இல்லை.
*மாதொருபாகனை அவர் எழுதியது ஒரு விபத்து[இது என் தனிப்பட்ட கருத்து] என்பதைத் தவிர, அவரால் உருவாக்கப்பட்ட படைப்புகள் அத்தனையும் தரத்தில் மிக உயர்ந்தவை. சாருவின் படைப்புகள், தரத்தில் அவற்றிற்கு நிகரானவை அல்ல.
*பெருமாள் முருகன், கதா விருது, திருப்பூர் தெய்வசிகாமணி விருது என்று பல விருதுகள் பெற்றவர். சாகித்திய அகடமி விருதை வென்றிருக்க வேண்டியவர். இத்தகைய ஒரு விருதுக்கே தகுதி இல்லாதவரான சாரு 'புக்கர்' பரிசுக்கு ஆசைப்படுவது நகைப்பிற்குரியது.
*பெருமாள் முருகன் பெருந்தன்மை மிக்கவர். சக எழுத்தாளனை இழித்துப் பேசும் சாருவின் சாக்கடைப் புத்தி அவருக்கு இப்போது மட்டுமல்ல, வேறு எப்போதும் இருந்ததில்லை.
*இதழாசிரியர்கள் விரும்பிக் கேட்டால் மட்டுமே படைப்புகளை வழங்குவதோடு, அம்மாதிரியான வாய்ப்புகள் அமையாதபோது, சாருவைப்போல பத்திரிகையாளர்களைத் தேடிப்போய்ச் சரணாகதியடைந்து ஜால்றா அடிக்கும் பழக்கம் பெருமாள் முருகனுக்கு இல்லை; இருக்கும் இடம் தெரியாமல் தனக்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருப்பவர் அவர்.
இவை போன்ற, இன்னும் பல பாராட்டுக்குரிய நற்பண்புகளைக் கொண்ட பெருமாள் முருகனை.....
'கொல்லைப்புற வழியாக நுழைந்து புக்கர் பரிசைத் தட்டிச் செல்ல நினைப்பவர்' என்று சாருநிவேதிதா குறிப்பிட்டது கடும் கண்டனத்திற்குரியது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++