'கடவுள் படைப்புத் தொழிலை ஏன் மேற்கொண்டார்? உயிர்களுக்காகவா, தனக்காகவா?' என்னும், படைப்பு குறித்த பகுத்தறிவாளர்களின் உயிர்நாடிக் கேள்விக்கு, ஆன்மிகவாதிகளிடமிருந்து ஆறறிவு சார்ந்த பதில் இன்றளவும் கிடைத்திடவில்லை.
அவர்களுக்கு நாம் அறிவுறுத்த எண்ணுவது ஒன்றுண்டு. அது.....
'காரணமின்றிக் காரியம் இல்லை' என்று சொல்கிறது அறிவியல் உலகம். மனிதராயினும் கடவுளாயினும் காரணமின்றி எந்தவொரு செயலிலும் ஈடுபடுதற்கு வாய்ப்பில்லை. கடவுள் உண்டென்று சொல்லுகிற நீங்கள், அவர் படைப்புத் தொழிலை மேற்கொண்டதற்கான காரணத்தைக் ஆராய்ந்து அறிந்து சொல்லுங்கள். அக்காரணம், அறிவுபூர்வமாக ஏற்கத்தக்கதாகவும், அனைத்து உயிர்களின் நலம் குறித்ததாகவும் இருப்பின் கடவுளைப் போற்றலாம்; வழிபடலாம்.'
ஆகவே, ஒட்டுமொத்த ஆன்மிகவாதிகளிடமும், கடவுள் பற்றிய கற்பனைக் கதைகளை நாளும் பரப்புரை செய்துகொண்டிருக்கிற அனைத்து மதவாதிகளிடமும் பின்வரும் வேண்டுகோளை முன்வைக்கிறோம்.
'அறிதல் நிகழ்த்தப்படும்வரை, மக்கள் மனங்களில் கடவுள் நம்பிக்கையைப் பதிவு செய்வதையும், அவர் புகழ் பாடுவதையும், விழாக்கள் எடுப்பதன் மூலம் பொழுது, பொருள் போன்றவற்றை விரயம் செய்வதையும், கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளை வளர்ப்பதையும் நிறுத்திடுவீர்.'
--------------------------------------------------------------------------------------------------------------------------------------