இந்த வார 'ராணி'[20.05.2018] வார இதழ், தரமானதொரு தலையங்கத்தைத் தாங்கி வெளிவந்திருக்கிறது. 'தமிழராய் வாழ்வோம்; தமிழால் உயர்வோம்' என்று முழக்கமிடும் இந்த இதழை வாரம் தவறாமல் வாசிப்பது தமிழரின் கடமை.
தலையங்கம்:
'எமனின் வாகனம் எருமை' என்பார்கள். அது உண்மையோ...பொய்யோ...நவீன எமன்கள் எல்லாம் வாகனம் இன்றி வலம் வருகிறார்கள்!
'எமனின் வாகனம் எருமை' என்பார்கள். அது உண்மையோ...பொய்யோ...நவீன எமன்கள் எல்லாம் வாகனம் இன்றி வலம் வருகிறார்கள்!
அறிவியல் என்கிற அதிசயம் எத்தனையோ அரிய வரங்களை நமக்கு அருளி வருகிறது. அவற்றால் பலாபலன்கள் அதிகம் என்றாலும்...பல விஷயங்களை அபாயமாக்குகிறோம். உதாரணம்...இணையம் எனும் 'இன்டர்நெட்', அலைபேசி என்னும் செல்ஃபோன்'!
இவை இரண்டும் தகவல் பரிமாற்றப் புரட்சி என்றாலும், இவற்றின் மறுபக்கம் பதைபதைக்க வைக்கிறது. தாம்பத்திய ரகசியங்கள் அன்றைய புதுமணத் தம்பதியருக்கு அவ்வளவாகத் தெரியாது. அவர்கள் அவற்றை அறிந்துகொள்ளவும், அவற்றைக் கடந்து பக்தி கொள்ளவுமே ஆலயக் கோபுரங்களில் 'செக்ஸ்' சார்ந்த சிலைகள் வைக்கப்பட்டன. அவர்கள் ஆபாசப் படங்கள் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. இன்று அப்படி அல்ல! 'செல்ஃபோன்'- 'இன்டர்நெட்' வழியாக வீடுகளுக்குள்ளும், நமது கைகளுக்குள்ளும் உலகளாவிய ஆபாசங்கள் குவிந்து வருகின்றன. அவற்றுக்குக் கடிவாளம் போட வாய்ப்பில்லை.
சினிமாக்களிலும் சின்னத்திரையிலும் அதிகரித்துவரும் பாலியல் - வன்முறைக் காட்சிகளுக்கு மனம் சலிக்கிற நாம், 'செல்ஃபோன்' - 'இன்டர்நெட்' வழியாக வரும் இவற்றுக்கு ஆரத்தி எடுக்கிறோம்.
சின்னப் பிள்ளைகள் உட்பட எவ்வளவோ பேரின் சிந்தனைகளை இது சிதைக்கிறது...வக்கிர உணர்வைத் தூண்டுகிறது. அதனால்தான் பாலியல் கொடூரங்கள் அதிகரித்து வருகின்றன.
இதோடு தவறான தகவல்கள், வதந்திகள், அபத்தமான படங்கள், மற்றவர்களை நோகடிக்கும் 'மீம்ஸ்'கள் என்று எல்லை மீறிப் போகிறது. இதற்கு லாடம் கட்டுவார் இல்லை. 'பத்து ரூபாய் நாணயம் செல்லாது' என்பது உட்பட உண்மைக்குப் புறம்பான பல செய்திகளைப் போட்டுச் சிலாகிக்கிறார்கள். அதனால் மற்றவர்களுக்கு எவ்வளவு பாதிப்புகள்-நேர வீணடிப்பு என்பதை மறந்துவிடுகிறார்கள்.
மிகப் பழைய செய்திகளைப் புதிய செய்திகள் போல அனுப்புவது, திடீரென பரபரப்பைக் கிளப்புவது எல்லாம் நல்லதல்ல! எல்லோரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற அதி நவீன யுகம் இது. சிலருடைய பொழுதுபோக்குக்காக எவ்வளவோ பேரை இம்சைக்கும் இடையூறுக்கும் உள்ளாக்குவது சரியல்ல!
நவீனங்களை 'முன்புத்தி'யோடு பயன்படுத்த வேண்டுமே தவிர...'பின்புத்தி'யோடு பழக்கப்படுத்துவது அறிவியலுக்கு மட்டுமல்ல...அனைவருக்கும் செய்யும் துரோகம். எதையும் நல்லதாகப் பயன்படுத்துவோம். அதுவே நமக்கும் நாட்டுக்கும் நல்லது!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
முக்கியக் குறிப்பு:
இந்தப் பதிவு, இப்போது[பிற்பகல் 02.30 மணி] சூடான இடுகைகள் பட்டியலில் 2ஆம் இடம் பெற்றுள்ளது. ஆனால், தமிழ்மணத்தின் முகப்புப் பக்கத்தில் காணப்படவில்லை..
தலைப்பில், 'ஆபாசம்' என்னும் சொல் இடம்பெற்றிருப்பது காரணமா?
ஆபாசமானதும் அசிங்கமானதுமான தலைப்புகளைக் கொண்ட பதிவுகளைத் தமிழ்மணம் இதுபோல ஓரங்கட்டியிருக்கிறதா?!?!
முக்கியக் குறிப்பு:
இந்தப் பதிவு, இப்போது[பிற்பகல் 02.30 மணி] சூடான இடுகைகள் பட்டியலில் 2ஆம் இடம் பெற்றுள்ளது. ஆனால், தமிழ்மணத்தின் முகப்புப் பக்கத்தில் காணப்படவில்லை..
தலைப்பில், 'ஆபாசம்' என்னும் சொல் இடம்பெற்றிருப்பது காரணமா?
ஆபாசமானதும் அசிங்கமானதுமான தலைப்புகளைக் கொண்ட பதிவுகளைத் தமிழ்மணம் இதுபோல ஓரங்கட்டியிருக்கிறதா?!?!
அலசிய உண்மைகள் சரியே...
பதிலளிநீக்குஇதற்கு லாடம் அடிப்பது யார் ?
ஆளில்லை. கூகுளாண்டவர் வழி காட்டினால் உண்டு!
நீக்குநன்றி நண்பரே.
சரியான நேரத்தில் தேவையான பதிவு.
பதிலளிநீக்குதங்களின் பாராட்டுரைக்கு நன்றி டாக்டர்.
நீக்குஅறிவுப்பசிஜி.. தமிழ்மணம் இப்போ இயக்கத்தில் இல்லையே.. அது என்னமோ தன் பாட்டில் சிலசமயம் எடுக்கும் சிலசமயம் எடுக்காது.. அதனால அதைக் கருத்தில் கொள்ளாதீங்கோ.. இப்போ நான் எல்லாம் அப்பக்கம் போய்ப் பார்ப்பதே இல்லை..
பதிலளிநீக்குதமிழ்மணத்தில் ஏதோ கோளாறு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினேன். மற்றபடி, இனி அதைக் கருத்தில் கொள்வதில்லை.
நீக்குநன்றி அதிரா.
உண்மை தான். இன்றைய சூழலில் தகவல் தொழிநுட்பம் பலராலும் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றைத் தடுக்க எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் திருடர்கள் சுதாகரித்து விடுகிறார்கள். சிந்தித்து செயலாற்றுவோம்!
பதிலளிநீக்குபயணங்கள் பலவிதம் - 03
https://newsigaram.blogspot.com/2018/05/PAYANANGAL-PALAVIDHAM-03.html
#சிகரம் #சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #இரயில்பயணங்கள் #SigaramBharathi #travel #experience #traintravelling #travellanka
கருத்துரைக்கும் பரிந்துரைக்கும் நன்றி சிகரம் பாரதி.
நீக்கு