எப்போதோ வாசித்த ஒரு ஜோதிட நூலிலிருந்து[நூல் பெயர் நினைவில் இல்லை] சேகரித்த குறிப்பு கீழ்க்காண்பது. நம்புகிறீர்களோ இல்லையோ, சும்மா படித்துவையுங்கள்.
மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் இருப்பது போலவே பிரம்மாவிற்கும்[பிரபஞ்சத்திற்கும்] ஆயுள் வரையறை உண்டு. இதை நம் முன்னோர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
பிரம்மாவின் ஆயுள் 100 பிரம்ம வருடங்கள். எனவே, பிரபஞ்சத்தின் ஆயுளும் 100 பிரம்ம ஆண்டுகள் என்றாகிறது[பிரம்மாவும் பிரபஞ்சமும் முதன்முதலில் தோன்றியது எப்போது என்றெல்லாம் கேள்வி கேட்க வேண்டாம்].
ஒரு பிரம்ம வருடம் என்பது.....
864 கோடிx[பெருக்கல்]360x100=3.1104x1014[அடுக்கு] ஆண்டுகள். இயலுமென்றால் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
மரணமுற்ற பிரம்மா மீண்டும் உயிர்த்தெழுவார்...பிரபஞ்சமும்தான். இதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை என்கிறார் ஜோதிட நூலாசிரியர். அழிவுக்கும் தோற்றத்திற்குமான 'கால இடைவெளி' 100 ஆண்டுகள் என்றோ 100 யுகங்கள் என்றோ அனுமானிப்பது அவரவர் விருப்பம்போலும்!
படைப்பாளியாக இருந்தாலும் பிரம்மாவும் ஒரு கடவுள்தான். அவர் செத்துச் செத்துப் பிழைப்பவர் என்றால், முழுமுதல் கடவுள் மட்டும் இதிலிருந்து விலக்குப் பெற்றது எப்படி?
இந்த கணக்கு மட்டும் மயக்கம் வரவைக்கவில்லை பிரம்மர்களின் கணக்கும் மயக்கத்தை வரவைக்கிறது.
பதிலளிநீக்குஹிட்வர் உமாநாத் என்ற படத்தில் சுருளிராஜன் சொல்வார் கதை கேட்டு, கதை கேட்டு வளர்ந்தது நமது நாடு.
கவைக்குதவாத கதைகளை நம்பியே வீணாய்ப் போனவர்கள் நம்மவர்கள் என்றும் சொல்லலாமா?
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
அருமை
பதிலளிநீக்குநன்றி பாரதி...நன்றி.
நீக்குமெத்தப் படித்தவர்களிடம் கூட மூட நம்பிக்கைகள் பெருகித்தான் வருகின்றன ஐயா
பதிலளிநீக்குமிகப் பலரிடம் என்பதுதான் ஆச்சரியம்.
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார்.
Muda
பதிலளிநீக்குMuda nambikkayil thilathavarhalaha than makkal irukkirarhal.innoru periyar vanthalum thiruttha mudiyadu
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இப்ராஹிம்.