வியாழன், 19 ஜூலை, 2018

'மோகினி' தோசம்!!!

'10லிருந்து 50 வயது வரையிலான பெண்களை அனுமதித்தால் சபரிமலைக் கோயிலின் புனிதம் கெட்டுவிடும்' என்று அறிவிப்புச் செய்திருக்கிறது சபரிமலை நிர்வாகக் குழு[தேவம்சம் போர்டு] இது இன்றைய ஊடகச் செய்தி[பாலிமர் தொலைக்காட்சியில் நண்பகல் 02.00 மணிச்செய்தி].
2016 ஆம் ஆண்டிலேயே, சபரிமலைக் கோயிலில் வயது வேறுபாடின்றி அனைத்துப் பெண்களும் நுழைந்து வழிபடுவதற்கு அனுமதிக்க உத்தரவிடுமாறு இளம் வழக்கறிஞர் மன்றம் ஒன்று வழக்குத் தொடுத்தது.

அது குறித்த விசாரணையில், எல்லாத் தரப்புப் பெண்களும் அங்கு சென்று வழபடலாம் என்று கேரள அரசு அறிவித்தது.

நீதிமன்றமும், கோயிலுக்குச் சென்று வழிபடும் உரிமை ஆண்களைப் போலவே அனைத்து வயதுப் பெண்களுக்கும் உண்டு என்று அண்மையில் அறிவித்துள்ளது. ஆனாலும். தேவசம் போர்டு பிடிவாதமாக, 10 முதல் 50 வயது வரையிலான பெண்களின் நுழைவால் கோயிலின் புனிதம் கெடும் என்று அறிவித்திருக்கிறது.

புனிதம் என்றால் தூய்மை, தெய்வீகத்தன்மை என்று அகராதிகள் பொருள் தருகின்றன.

கோயிலில் நிலவும் புனிதத்தன்மையை, அதாவது, தெய்வீகத்தன்மையை அற்ப மனித ஜாதிப் பெண்களின் நுழைவு முற்றிலுமாய்ப் போக்கிடும் என்றால், அது கோயிலும் அல்ல; அங்கு குடியிருப்பவர் கடவுளும் அல்ல.

குறிப்பிட்ட வயதுப் பெண்களின் நுழைவால் கோயிலின் புனிதத்தன்மை கெடும் என்பது உண்மையானால்.....

ஐயப்பனைக் காட்டிலும் மூத்த கடவுளான ஏழுமலையானின் திருப்பதிக் கோயிலின் புனிதத்தன்மை முற்றிலுமாய்க் கெட்டழிந்திருக்க வேண்டும்.

ஐயப்பனின் சகோதரக் கடவுளான[வேறு வேறு அவதாரங்கள் என்றும் சொல்கிறார்கள்] பழனி முருகனின் கோயிலும் புனிதத்தை இழந்திருக்க வேண்டும்.

இது குறித்துச் சபரிமலைக் கோயில் குழுவினர்[தேவசம் போர்டு...தமிழில்?] ஏன் சிந்திக்கவில்லை? சிந்திக்கத் தவறிய அவர்களுக்குப் பிற கோயில்களின் பூசாரிகள்[?] ஏன் அறிவுறுத்தவில்லை?

பெண்கள் நுழைந்தால்தான் புனிதம் கெடுமா? அவர்கள் கோயிலின் எல்லைக்கு அப்பால் நின்று வழிபட்டால் கெடாதா? கடவுள் என்பவரால் அருளப்பட்ட புனிதத்தன்மை பிரபஞ்ச வெளியெங்கும் பரவிக் கிடக்கிற ஒன்றல்லவா? அதற்கு எப்படி இவர்கள் வரம்பு கட்டுகிறார்கள்?

பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தால் மட்டும்தான் புனிதம் கெடுமா? அவர்கள் மீது உராய்ந்த காற்று பட்டால்கூட அது கெட்டுவிடுமே. என்ன சொல்கிறார்கள் அவர்கள்?

மாதவிடாய்ச் சுழற்சியை[இயல்பானது] அவர்கள் சுட்டிக்காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. அது உண்மையாயின், அவர்கள் அறியாமையின் உச்சத்தைத் தொட்டவர்கள் ஆவார்கள்.

கோயிலுக்குள் செல்பவர்கள் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள அவரின் அனைத்துப் பக்தர்களுக்கும்[பெண்கள் உட்பட] சொந்தமானவர்தானே ஐயப்பன்? அப்புறம் ஏன் கோயில் என்னும் ஒரு குறுகிய எல்லைக்குள் அவரை அடைத்து வைத்துப் பெண்கள் நெருங்கினால் புனிதம் கெடும் என்கிறார்கள்?

ஐயப்பனை ஈன்றெடுத்தவர் மோகினி[திருமாலின் அவதாரம்] என்னும் பெண்தான். கடவுளாயினும் அவரும் பெண்தானே? அந்தப் பெண்ணுக்குப் பிறந்த ஐயப்பன், ஏதேனும் ஒரு தோசத்துடன் பிறக்காமல் புனிதத்தின் மறு வடிவமாய்ப் பிறந்தது எப்படி? அவருக்குரிய கோயிலின் புனிதத்தன்மை பெண்களால் பறிபோகும் என்று சொல்வது எவ்வகையில் நியாயம்?

இந்த அறிவியல் யுகத்திலும், மாதவிடாய்ச் சுழற்சியைக் காரணம் காட்டியும், கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என்று புலம்பியும் குறிப்பிட்ட வயதுப் பெண்களைத் தேவசம் போர்டு அனுமதிக்க மறுப்பது ஏற்புடையதல்ல.
------------------------------------------------------------------------------------------------------------------






12 கருத்துகள்:

  1. நண்பரே இன்றைய அனுமதியின் பின்னணியே பெண்கள் வருகையாலும வருமானம் கூடட்டுமே என்பதை முன்னிட்டே தேவசம் போர்டு காய் நகர்த்துகிறது.

    இதுதான் உண்மை புனிதமும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. //பெண்கள் வருகையாலும வருமானம் கூடட்டுமே என்பதை முன்னிட்டே தேவசம் போர்டு காய் நகர்த்துகிறது//

    சுவாமி ஐயப்பனுக்கே வெளிச்சம்!

    நன்றி நண்பர் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  3. பெண்களுக்கு இதைவிடவும் பெரிய அவமானம் வேறு எதுவும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.

      நன்றி புதுமுகன்.

      நீக்கு
    2. //'பசி'பரமசிவம்July 19, 2018 at 9:29 PM
      உண்மைதான்.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்ன அறிவுப்பசிஜி உண்மைதான் என்கிறீங்க? இதில் என்ன அவமானம் இருக்கு பெண்களுக்கு? அப்படி அறிவித்த அந்த ஐயப்பன் சுவாமியின் ஆட்களுக்கே அவமானம்.. போஸ்டில் அழகாக சொல்லிப்போட்டு இங்கு கட்சி மாறிப் பேசலாமோ?:)

      நீக்கு
    3. அதிரா சொல்வதே உண்மை. அவசரப்பட்டுப் புதுமுகனை வழிமொழிந்துவிட்டேன்.

      ஐயப்பசாமி ஆட்களுக்குத்தான் அவமானம் என்பதே சரி.

      நன்றி அதிரா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. இங்கு பெரும்பான்மையாக உள்ள இந்துமதத்தவரால் பரப்பப்படுகிற மூடநம்பிக்கைகளால்தான் என் வாரிசுகளும், சொந்தபந்தங்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவேதான், அவர்களைக் கண்டித்து எழுதுகிறேன்.

      பிற சிறுபான்மை மதத்தவரால் பாதிப்பு நேரிட்டால் அவர்களையும் கண்டிப்பேன். பாதிப்பு இல்லையென்றாலும் பிற மதக் கொள்கைகளை விமர்சித்துப் பதிவுகள் எழுதியிருக்கிறேன்[அவர்கள் யாரும் கேள்வி எழுப்பியதில்லை. மூடநம்பிக்கைகளை மூட்டை மூட்டையாகச் சுமந்து திரிகிற நீங்கள்தான் அதைச் செய்கிறீர்கள்].

      https://kadavulinkadavul.blogspot.com/2017/04/blog-post_1.html

      https://kadavulinkadavul.blogspot.com/2012/02/blog-post_2.html

      https://kadavulinkadavul.blogspot.com/2016/06/blog-post_18.html

      உலகளவில் ஆயிரக்கணக்கில் மதங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் எழுதச் சொல்லி எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

      பகுத்தறிவு பேசுறவனின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தவிர்த்து, மற்ற மதத்தவரோடு மோதவிட்டுக் கலவரத்தை மூட்டி வேடிக்கை பார்க்க நினைப்பது அயோக்கியத்தனம்.

      உங்களிடமுள்ள மூடத்தனங்களிலிருந்து முதலில் விடுபடுங்கள் அப்புறம் என் போன்றவர்களிடம் கேள்வி கேட்கலாம்.

      மற்ற மதங்களைக் குறை சொல்லத் தைரியம் இருக்கான்னு கேள்வி கேட்குற நீர், உண்மைப் பெயரோடும் முகவரியோடும் வந்து கேள்வி கேளும்[ஒரு தளத்தை உருவாக்கித் தமிழில் எழுதுவதற்கு முயற்சி செய்யும். உமக்கு ஆங்கிலம் தெரியும் என்பதைக் காட்டிக்கொள்ளவதற்கான இடம் இதுவல்ல].

      போலிப் பெயரில் பதுங்கியிருக்கும் உம்மைப் போன்ற கோழைகளின் பின்னூட்டங்களை அனுமதிப்பதே தவறு.நாகரிகம் கருதி அனுமதித்திருக்கிறேன்.

      இனியேனும், ஒருவரிடம் கேள்வி எழுப்புவதற்கு முன்னால், அது தொடர்பான அவரின் அணுகுமுறைகளைத் தெரிந்துகொண்டு கேள்வி கேளும்.

      நன்றி ரவிக்குமார் அவர்களே.

      நீக்கு
  5. இப்படி ஒரு பிரச்சனையும் ஓடுதோ... பிரச்சனை இல்லாமல் இருக்க விடமாட்டினம் எதையாவது புதிதாக ஆரம்பித்து பிரச்சனையை உருவாக்கினால்தானே அவர்களுக்கு சந்தோசம் + வருமானம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், புதிது புதிதாகப் பிரச்சினைகளை உருவாக்குவதற்கென்றே சிலர் அலைகிறார்கள். அவர்களுள் மேலே கேள்வி எழுப்பியுள்ள நபரும் ஒருவர்.

      நன்றி அதிரா.

      நீக்கு
  6. மனதில் உள்ள கறையை அகற்றுவது யார்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இஅடைவெளிக்குப் பிறகு வருகை தந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

      //மனதில் உள்ள கறையை அகற்றுவது யார்...?//

      ஐயப்ப பக்தர்களுக்கு ஐயப்பனே அகற்றக்கூடும்.

      பக்தி இல்லாதவர்கள் தாமாகவே அகற்றிட முயலுதல் வேண்டும். சரிங்களா?

      நன்றி DD.

      நீக்கு