“சே...ரசனை கெட்ட ஜென்மங்கள்...உணர்ச்சியில்லாத பிண்டங்கள்...” ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் மனிதராய்ப் பிறந்த அத்தனை பேரையும் திட்டிக்கொண்டிருந்தாள் மாலினி.
“இதோ பார் மாலு, இந்த மாதிரி கண்காட்சிக்கெல்லாம் இவ்வளவுதான் கூட்டம் வரும். ஒரு நிர்வாணக் கண்காட்சி நடத்திப்பார். மக்கள் வெள்ளம் அலைமோதும். பத்திரிகை நிருபர்கள் பேட்டி காணப் போட்டி போடுவார்கள். டிக்கெட் போட்டால் ஆயிரக் கணக்கில் பணத்தை அள்ளிடலாம்” என்றாள் அவள் தோழி சிநேகா.
“நடத்திடறேன்” என்றாள் மாலினி, திடமான குரலில்.
“இதோ பார் மாலு, இந்த மாதிரி கண்காட்சிக்கெல்லாம் இவ்வளவுதான் கூட்டம் வரும். ஒரு நிர்வாணக் கண்காட்சி நடத்திப்பார். மக்கள் வெள்ளம் அலைமோதும். பத்திரிகை நிருபர்கள் பேட்டி காணப் போட்டி போடுவார்கள். டிக்கெட் போட்டால் ஆயிரக் கணக்கில் பணத்தை அள்ளிடலாம்” என்றாள் அவள் தோழி சிநேகா.
“நடத்திடறேன்” என்றாள் மாலினி, திடமான குரலில்.
“அடியே, நான் விளையாட்டுக்குச் சொன்னேன். அப்படிச் செய்துடாதே” என்று பதறினாள் சிநேகா.
“ரொம்ப நன்றிடி” என்று மட்டும் சொன்னாள் மாலினி.
அன்று, நிர்வாண ஓவியக் கண்காட்சியின் தொடக்க நாள்.
பத்து மணிக்குக் கண்காட்சி தொடக்கம். எட்டு மணியிலிருந்தே கூட்டம் அலைமோதத் தொடங்கியது.
'இது, நிர்வாண ஓவியக் கண்காட்சி. ஓவியங்களுக்கான மாடல்கள் மேடையில் காட்சி தருவார்கள்’ என்று விளம்பரப்படுத்தியிருந்தாள் மாலினி.
அலை மோதிய ஜனத்திரளைப் போலீஸ் வந்து ஒழுங்குபடுத்தி, வரிசையில் நிற்க வைத்தது.
தோள்களில் கேமராக்களுடன் ஏகப்பட்ட பத்திரிகை நிருபர்கள்.
மணி பத்தாயிற்று.
ஓவியக்கூடம் திறக்கப்பட்டது.
'நான் முந்தி, நீ முந்தி’ என்று காத்திருந்தவர்கள் உள்ளே பாய்ந்தார்கள்.
அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அசடு வழிந்தார்கள். அவர்களின் முகங்களில் கோபமும் வெறுப்பும் தாண்டவமாடின.
காரணம்..........
நிர்வாண ஓவியங்களுக்கு ‘போஸ்’ கொடுத்தவர்கள்...........
சுமதி, பத்மா, மது ஆகியோர். எல்லோருமே மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்! மில்க் சாக்லேட் சுவைத்தவாறு மேடையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்தார்கள்!
அன்று, தான் அடைந்த ஏமாற்றத்தின் பிரதிபலிப்பை, இன்று, அந்த ரசிகர்கள் முகத்தில் கண்டு ரசித்து மகிழ்ந்துகொண்டிருந்தாள் மாலினி.
**************************************************************************************************ஜெயரூபன்' என்பவரின் கற்பனையில், 14.02.1985 குமுதம் இதழில் வெளியானது. எழுத்தாளருக்கும் குமுதம் இதழுக்கும் என் நன்றி.
சரியான ஏமாற்றமே எனக்கும்தான் நண்பரே 32 வருடங்களுக்கு முன்பே ஸூப்பர்...
பதிலளிநீக்குஎத்தனை சுறுசுறுப்பாக இயங்கிறீர்கள்!பிரமிக்கிறேன்.
நீக்குநன்றி நண்பரே.
30 வருசத்துக்கு முந்தைய கதை. உமது கதைன்னு சொல்லியிருந்தாலும் யாரும் கண்டுபிடிக்க மாட்டா. ரொம்பப் பெருந்தன்மையான ஆள்தான் நீர்.
பதிலளிநீக்குமுதல் தடவையா பாராட்டியிருக்கிறீர்!
நீக்குநன்றி.
ஹா ஹா ஹா மாலினிக்கு கல்லெறி விழவில்லையோ?:).
பதிலளிநீக்கு'கல்லெறி' இல்லேன்னாலும் சரமாறியா 'சொல்லெறி' விழுந்ததாம்!
நீக்குநன்றி அதிரா.