பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 27 ஜூலை, 2018

இந்தப் புண்ணிய பூமியில்தான் 'இது'வும் நிகழ்ந்தது!!

'அவர்கள்' நான்கு வர்ணத்திற்குள்ளும் வராதவர்கள்; தீண்டப்படாத சூத்திரச் சாதி மக்களையும்விடக் கீழானவர்கள்; 'பஞ்சமர்கள்'.

அவர்கள் ஓட்டு வீடுகளில் வசித்தல் கூடாது; காலில் செருப்பு அணியக்கூடாது; பெண்கள் இடுப்புக்கு மேலே எந்தவொரு ஆடையும் உடுத்துதல் கூடாது. 

இளம் பெண்களின் மார்பகங்கள் பெரிதாக ஆக, விதிக்கப்பட்ட அதற்குரிய வரியைச் செலுத்துதல் வேண்டும்.
ஆண்கள் தோளில் துண்டு போடக்கூடாது. முழங்காலுக்குக் கீழே ஆடை எதுவும் உடுத்துதல் ஆகாது. [நாயடி அல்லது புலையன் ஒருவனை ஒரு உயர் மேல்மட்டச் சாதிக்காரன் [பிராமணன] பார்க்க நேரிட்டால் அவன் தீட்டுப்பட்டவனாகக் கருதப்படுவான்.  இங்ஙனம் தீட்டுப்பட்டவன் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடித் தன்னைச் சுத்திகரிக்க வேண்டும்”.
(A. Sreedhara Menon – Social and cultural History of Kerala – 1979 – Page 68 – as quoted by Dr. Ivy Peter)

அந்த இன மக்கள் இம்மாதிரிக் கொடுமைகளுக்கு உள்ளானது கன்னியாக்குமரியை உள்ளடக்கிய அன்றைய திருவிதாங்கூர் மாவட்டத்தில்.

இச்சூழலில் இடம்பெற்ற ஓர் உண்மை நிகழ்வின்  சுருக்கம் பின்வருமாறு:

திருநெல்வேலியில்,  'அந்த'ச் சாதிப் பெண்கள் மேலாடை உடுத்த அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அந்த ஊரைச் சார்ந்த பெண்ணொருத்தி இரணியலைச்[இங்கு, பெண்களுக்கு மேலாடை உடுத்த அனுமதியில்லை] சேர்ந்த அதே சாதி இளைஞனுக்கு மணம் செய்விக்கப்படுகிறாள்.

இரணியலில் இருக்கும் கணவன் வீட்டுக்குப் புறப்படும்போதே,  அவளின் உறவினர்கள் மேலாடையை அகற்றிவிட்டுச் செல்லுமாறு வற்புறுத்துகிறார்கள்.

அவளோ, ''எல்லோரும் என் மார்பகங்களைப் பார்ப்பார்கள். அதை என்னால் சகிக்க முடியாது'' என்று சொல்லி, அதை அகற்றாமலே கணவன் ஊரான இரணியலுக்குச் செல்கிறாள்.

மேலாடையை அகற்றுமாறு அந்த ஊர் மேல் சாதிக்காரர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். உடன்படாத அந்த 'ரோஷக்காரி' அதை உடுத்திய நிலையிலேயே கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள்.

அவள் செத்தொழிந்த பின்னரும் அதை அகற்றும் முயற்சியில் 'அவர்கள்' ஈடுபடுகிறார்கள். பெண்ணின் கணவன் அழுது புலம்பி வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. 

பரிதாபத்துக்குரிய அந்த இளம் பெண்ணின் மேலாடை அகற்றப்பட்டு, அவளின் மார்பகங்களை எல்லோரும் பார்த்த பின்னரே அவள் அடக்கம் செய்யப்படுகிறாள்.

இது அன்றைய நிகழ்வு.

நெஞ்சுருக வைக்கும் நடையில் இதைச் சிறுகதையாக வடித்தெடுத்தவர், மறைந்த எழுத்தாளர் சு,சமுத்திரம் அவர்கள்.

கதையின் முழு வடிவம் நினைவில் இல்லை. என் நடையில் அதை வடித்தெடுத்தால் அதன் சிறப்புக்குப் பங்கம் விளையும் என்பதால் கதைக்கான நிகழ்வை மட்டும் தந்திருக்கிறேன்.

இது கடந்த கால நிகழ்வுதான், ஆயினும்,  மறத்தற்கரியது.

இந்நிகழ்வை மட்டுமல்ல, இம்மாதிரிக் கொடும் பாதகங்களுக்கு அடித்தளம் இட்டவர்களையும்  மறத்தல் சாத்தியம் அல்ல.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனியேனும், இந்த மண்ணில் நல்லவை மட்டுமே நடக்கட்டும்.
========================================================================







10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இத்தனை கொடூர மனம் இவர்களுக்கு எப்படி வாய்த்தது!?

      நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. தன்மானம் இல்லாமல் இருக்கும்போது எந்த அவமானமும் மனதை உருத்துவதில்லை. திருநெல்வேலியில் இருந்த ரோசக்காரிக்கு மேலாடை இருந்தது எனபதைவிடத் தன்மானம் இருந்தது. ஆனால் இரணியலில் இருந்த அவளைச் சார்ந்தவர்களுக்கு அது இருந்திருக்கவில்லை. இருந்திருக்கவில்லை என்பதைவிட இருக்கவிடாமல் செய்யப்பட்டிருந்தது. அந்தத் தன்மானம் என்பது மேலாடையோடு நின்றுவிடாமல் பிற உரிமைகளுக்கும் படர வேண்டும். இன்று படர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. கருத்துரை மிக்க மகிழ்ச்சி
      ‌தருகிறது.

      நண்பருக்கு மிக்க நன்றி

      நீக்கு
  3. எவ்வளவு கீழ்த்தரமான எண்ணங்கள் இவர்கள்தான் உயர்ந்த ஜாதியினரா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்கள் இந்த நிலையை எட்டியது எப்படி என்பதுதான் புரியவில்லை.

      மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  4. எப்பவோ எங்கோ கேள்விப்பட்ட கதையாக இருக்கு.. நம்ப முடியவில்லை..

    பதிலளிநீக்கு
  5. இதைவிடவும் கொடூரங்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கு. ஆதாரங்களும் இருக்கு. நம்பித்தான் ஆகணும்.

    நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு