அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 28 ஜூலை, 2018

கேளு...கேளு...கேள்வி கேளு!!!

'உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உள்நிலையில் உச்சத்தைத் தொட முடியும்' என்கிறார் ஓர் உலகறிந்த ஞானி. அற்ப ஆயுளில் செத்துத்தொலைக்கப் பிறந்தவன் மனிதன். சாவதற்குள் உச்சத்தை எங்கு தேடி அலைவது?!
#இந்தக் 'குரு பவுர்ணமி' நாளில்தான் இந்த உலகின் 'ஆதி யோகி' என்னும் முதல் குரு பிறந்தார். ஆதியோகியான சிவன் 'ஆதிகுரு'வாக மாறி சப்தரிஷிகளுக்கு[ளுடன்] யோக விஞ்ஞானத்தைப் பகிர்ந்துகொண்டார். நீங்கள் கடவுளாக வணங்கும் சிவனை, 'யோக கலாச்சாரத்தில் ஆதி யோகியாகப் பார்க்கிறோம். அதாவது, முதல் யோகியாகப் பார்க்கிறோம். சிவன் இந்த மண்ணில் நம்மைப் போன்றே மனிதனாக வாழ்ந்து உள்நிலையில் உச்சத்தைத் தொட்டவர். அதனால்தான் சிவனுடைய புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உள்நிலையில் உச்சத்தைத் தொட முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் சிவன்#

கோவை 'ஈஷா யோக மையம்' சார்பில், 'ஆதி யோகி' சிலையின் முன்பு நேற்றுக் கொண்டாடப்பட்ட குரு பவுர்ணமி விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்காக, 'சத்குரு' ஜக்கி வாசுதேவ் ஆற்றிய உரையின்[தினத்தந்தி, 28.07.2018] சாராம்சம் இது.

சத்குருவின் உரையைத் தொடர்ந்து ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சி, கூட்டுத் தியானம், 'கேள்வி - பதில்' நிகழ்ச்சி போன்றவையும் இடம்பெற்றதாகத் தினத்தந்தி குறிப்பிட்டிருக்கிறது.

''ஆதிசிவன் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிற கடவுள். அவர் பிறப்பு இறப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். தான் இருக்கும் கோலத்தில்[?] இருந்துகொண்டே ரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை அருளியிருக்க முடியும். இந்த உலகில் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை.  நீங்களோ, முதல் குருவாக இந்த உலகில் அவதரித்து ரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தைக் கற்றுத் தந்ததாகச் சொல்கிறீர்கள். இது கதையா? அல்ல என்றால், அதற்கான ஆதாரம் உள்ளதா?'' 

''ஆதிசிவன், குரு பவுர்ணமி நாள் பார்த்துப் பிறந்தது ஏன்? மற்ற நாட்களில் பிறந்திருக்கக் கூடாதா? கடவுளும்கூட நல்ல நாள், கெட்ட நாளெல்லாம் பார்ப்பாரா?''

''அவர் மனித குருவாகப் பிறந்தார் என்றால், அந்த மனித குருவின் தோற்றம் எவ்வாறு இருந்தது?''

''ஆதிசிவன் இம்மண்ணில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்து 'உள்நிலையில் உச்சம்' தொட்டவர் என்கிறீர்கள். அதென்ன, உள்நிலையில் உச்சம் தொடுவது? மனத்தளவில் உச்சம் தொடுவது என்று கொள்ளலாம்தான். ஆனாலும், அதென்ன உச்சம் தொடுவது? எது உச்சம்? அதன் வரம்பு என்ன?''

''சிவனை யோக கலாச்சாரத்தில் ஆதியோகியாகப் பார்க்கிறோம் என்கிறீர்கள். யோகம் ஒரு கலையாக இருக்கலாம். இதைக் கலாச்சாரங்களில் ஒன்றாகச் சேர்க்க முடியுமா? இப்படியொரு கலாச்சாரம் இருக்கிறதா?''

''உள்நிலையில் உச்சம் தொடுவது, யோக கலாச்சாரம் என்பவையெல்லாம் ஞானியான உங்களுக்குப் புரிந்திருக்கலாம். எங்களுக்குப் புரியும்படியாகச் சொல்வது உங்கள் கடமை அல்லவா? எதையெதையோ சொல்லிச் சொல்லி எங்களை ஒருவித மயக்க நிலையில் அல்லவா ஆழ்த்துகிறீர்கள்?''

சத்குருவின் பக்தர்களே,

மேற்கண்டவை, 'பசி'பரமசிவமாகிய என் மனதில் உதித்த கேள்விகள். இவற்றையும், இவை போன்ற நீங்கள் கேட்க விரும்பும் பிற கேள்விகளையும் சத்குருவுக்குச் சமர்ப்பணம் செய்யுங்கள்[இக்கேள்விகள் எவ்வகையிலும்  உங்களின் மனங்களை நோகடிப்பதற்காக அல்ல; உங்களின் பக்தி, பலவகை மூடநம்பிக்கைகளுக்கு வழிகோலுவதைத் தடுப்பதற்காகவே].

அவர் அளிக்கும் விளக்கங்கள் உங்களுக்கு மனநிறைவைத் தருமாயின்.....

உங்களாலும் 'உள்நிலையில் உச்சத்தை'த் தொடுவது இயலக்கூடும்.

உண்மையில் இத்தகையதொரு உச்சத்தைத் தொடுவது உங்களின் விருப்பம் என்றால், அது நிறைவேற என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000














13 கருத்துகள்:

  1. உள்ளூர்ச் சரக்குக்குத்தானே 'கிக்' அதிகம்!

    பதிலளிநீக்கு
  2. உள்நிலை உச்சம் அடையலாம் முயன்றால் மட்டும்,
    அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  3. ஆத்திகர் கடவுளைத்தேடுவதைக் காட்டிலும், நாஸ்திகர்தான் எப்பவும் கடவுள் சிந்தனையிலேயே மூழ்கி இருப்பார்களாம்.. அது 100 வீதம் உண்மை என்பதனை அறிவுப்பசிஜி யின் தேடலில் இருந்து காண முடிகிறது ஹா ஹா ஹா..

    மீயும் ஒரு ஞானி என்பதை மறந்திடாதீங்கோ பிளீஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  4. ஆத்திகர்கள் கடவுள் கடவுள் என்று அலைவதை நிறுத்தும்போது நானும் கடவுள் சிந்தனையிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டுவிடுவேன்!

    ஞானி அதிராவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. இவர்கள் உச்சம் அடைந்து விட்டது உண்மையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்குருவுக்கு இவர்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்கள்!

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு