வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

தரணி போற்றும் எழுத்தாளரும் தரமற்ற அவரின் [ஒரு] சிறுகதையும்!!!

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கடந்த வார 'விகடன்'[15.08.2018] இதழில் 'சிவப்பு மச்சம்' என்னும் தலைப்பில் சிறுகதை எழுதியுள்ளார். பிரபலமானவர் என்பதற்காகவே சில எழுத்தாளர்களின் படைப்புகளைச் சில பிரபல இதழ்கள் வெளியிடுகின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!
தொழிலில் நொடித்துப்போனதால் ஓர் ஏழை விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார்.

அரசு எந்திரம் பரபரப்பாகச் செயல்படுகிறது.

விவசாயியின் வீடு தேடி வந்த அதிகாரிகள், உரிய ஆவணங்களில் விவசாயியின் மனைவி 'ராக்கி'யிடம் கையெழுத்துப் பெற்றதோடு, ''விரைவில் உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுவிடும். அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றி கூறிச்செல்கிறார்கள்.

ராக்கியும், கொஞ்சம் நாட்கள் கழித்து ஆட்சியர் அலுவலகம் சென்று விசாரிக்கிறார். அதிகாரிகளோ, ராக்கியை அலட்சியப்படுத்தியதோடு அவர் மனம் புண்படும் வகையில் நடந்துகொள்கிறார்கள்.

மனம் நொந்த ராக்கி, ''நீங்கெல்லாம் உருப்பட மாட்டீங்க'' என்று சாபம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

இதுவரையிலான நிகழ்வுகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்பம்சம் ஏதுமில்லை. மிகச் சாதாரண நடையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. 

கதையின் மையப்பகுதியில், கதையோடு ஒட்டாத ஒரு நிகழ்வை ஒட்டவைத்து அடுத்து என்ன நிகழுமோ என்று அறியும் ஆவலை வாசகர் மனங்களில் தூண்ட முயல்கிறார் கதாசிரியர்

சுப்பிரமணியம் ஓர் உயர் அதிகாரி. ராக்கிக்கான உதவித் தொகைக்கு 'அனுமதி' வழங்குபவர் அவர். அனுமதி வழங்காததால், விவசாயியின் மனைவி ராக்கி சாபம் கொடுத்துச் சென்ற நிலையில், அவர்[சுப்பிரமணியம்] நெற்றியில் அன்று ஒரு சிவப்பு மச்சம் தென்படுகிறது; அது தோனறியதற்கான காரணத்தை மருத்துவ ரீதியாக அறிந்திட இயலாமல் பெரும் மனக்குழப்பத்திற்கு ஆளாகிறார் அவர்; குணப்படுத்த இயலாத நோயாக அது உருமாறும் என்று அஞ்சுகிறார்.

இந்நிலையில் இன்னொரு அதிசயமும் நிகழ்கிறது.

சுப்பிரமணியத்தின் அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 23 பேர்களுக்கும் அதே மாதிரியான சிவப்பு மச்சம் அவரவர் நெற்றியில் தோன்றியிருக்கிறது.

எந்த ஒருவருக்கும் மச்சம் உருவானதற்கான காரணம் புரியவில்லை.

குணப்படுத்துவதற்கு, 'மச்சத்தின் மீது சந்தணம் பூசுதல், எச்சில் தடவுதல் , பச்சிலைகளை அரைத்துப் பூசுதல் என்று அவரவர்க்குத் தெரிந்த கை மருத்துவத்தைப் பரிந்துரைக்கிறார்கள்.

என்ன செய்தும் எந்த ஒருவருக்கும், கெடுதி விளைவிக்கும் அந்த மச்சம் மறையவே இல்லையாம்.

குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில், உடம்பின் குறிப்பிட்ட ஓரிடத்தில், குறிப்பிடத்தக்க ஒரே மாதிரியான சிவப்பு மச்சம் தோன்றுவது எவ்வகையிலும் சாத்தியமே இல்லை.

சாத்தியம் இல்லாத ஒன்று சாத்தியப்பட்டது என்றால், அதைச் சாத்தியப்படுத்தியது யார்?

கடவுள் என்கிறாரா எழுத்தாளர்?

இத்தகைய மாயாஜாலங்களை நிகழ்த்தி, எத்தனை எத்தனை ஆண்டுகளாக, எத்தனை எத்தனை குற்றவாளிகளைத் தண்டித்திருக்கிறார் அவர்?

போதிய புள்ளிவிவரங்கள் தருவாரா ராமகிருஷ்ணன்?

வெளியிடுவதற்குப் பத்திரிகைகள் உள்ளன என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் கதை கட்டிவிடுவதா?

இதன் பிறகும் கதை தொடர்கிறது.....

ராக்கிக்குரிய உதவித் தொகைக்கான ஆணையைப் பிறப்பித்ததோடு, உதவித் தொகையை எடுத்துக்கொண்டு ராக்கியின் வீடு தேடிச் செல்கிறார்கள் உயர் அதிகாரி சுப்பிரமணியமும் ஏனைய அலுவலர்களும். ஆனால் அந்தோ.....

ராக்கி அவரின் வீட்டில் இல்லை. எங்கு தேடியும் அவரைக் கண்டறியவும் இயலவில்லையாம். 

குற்றம் புரிபவர் தண்டிக்கப்படுவர் என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படாத ஒரு நம்பிக்கை மட்டுமே. குற்றம் புரிந்த சுப்பிரமணியத்தையும் 23 பேரையும் சிவப்பு மச்சம் தோன்றித் தண்டித்தது என்று பிரபல எழுத்தாளர் கதை சொல்லியிருப்பது.....

சிந்திக்க வைக்கிறதா, சிரிக்கத் தூண்டுகிறதா??
=======================================================================
முதல் 10 சூடான இடுகைகளில் இடம்பெற்ற இப்பதிவை, முகப்புப் பக்கத்தில் தோன்றாதவாறு தமிழ்மணம் இருட்டடிப்புச் செய்துள்ளதால், தலைப்பை மாற்றி மீண்டும் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்மணம் தற்சார்புடன் செயல்படுவது வருந்தத்தக்கத

8 கருத்துகள்:

  1. இன்னுமா தமிழ்மணத்தை எல்லாம் பார்க்கிறீர்கள்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்மணத்தில் இணைக்காவிட்டாலும், சராசரியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் புதிய பதிவுகளை வாசிக்கிறார்கள். சில சமயம் 200ஐக் கடப்பதும் உண்டு.

      தமிழ்மணத்தில் இணைக்கும்போது அந்த எண்ணிக்கை சில நூறுகளுக்குக் குறைவதில்லை என்பதால் தமிழ்மணம் தவிர்க்க இயலாததாக உள்ளது.

      நன்றி D.D.

      நீக்கு
    2. வாசிப்போர் நூற்றுக்கணக்கில்தானா?!

      நீக்கு
    3. என் தகுதிக்கு இது போதும் புதுமுகன்.

      நன்றி நண்பரே.

      நீக்கு
  2. I am seeing all your blogs through tamilmanam only. is there any other way to see the list of blogs and their works ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பதிவர்கள்[bloggers], அவரவர் வலைப்பதிவில் வலைப்பக்கத்தில்[blog] எழுதும் கட்டுரைகளைத்[பதிவுகள்] திரட்டித் தருபவை திரட்டிகள்.

      'இன்ட்லி', 'தமிழ்வெளி' போன்ற பிரபலமான திரட்டிகள் இப்போது செயல்படுவதில்லை. 'தமிழ்ப் பதிவுகள்', 'பதிவர் திரட்டி', 'தேன்கூடு' என்னும் பெயர்களில் பல திரட்டிகள் இருந்தாலும் தமிழ்மணம் அளவுக்கு அவை பிரபலமானவை அல்ல.

      தமிழ்மணமே உங்களுக்குப் போதுமானது.

      உங்களுக்குப் பிடித்தமான பிளாக்குகளின் முகவரிகளைக்[https://kadavulinkadavul.blogspot.com என்பது என் பிளாக்கின் முகவரி] குறித்து வைத்துக்கொண்டால், முகவரியை டைப் செய்து நேரடியாகச் சம்பந்தப்பட்ட பிளாக்குக்குச் சென்று பதிவுகளை வாசிக்கலாம்.

      இதற்கு மேலும் விளக்கம் தேவை என்றால் எழுதுங்கள்.

      நன்றி sarav.

      நீக்கு
  3. எஸ்.ரா விடம் இருந்து இதுபோன்ற கதைகள் வெளிவருவது வேதனைதான் ஐயா

    பதிலளிநீக்கு
  4. நிகழ்ச்சி அமைப்பில் அவர் மிகவும் கவனம் செலுத்துதல் வேண்டும்.

    நன்றி ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு