அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

ஆபாசக் கவிஞரா லீனா மணிமேகலை?!?!

'லீனா மணிமேகலை உலக அளவில் கவனம் பெற்ற ஆவணப்பட இயக்குநர்; பத்திரிகையாளர்; கவிஞர்; இவருடைய கவிதைகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன' என்றிவ்வாறு வெகுவாகப் புகழப்பட்டிருக்கிறார் கவிஞர் லீனா மணிமேகலை{'தமிழ் இந்து'['பெண் இன்று' இணைப்பு] 28.10.2018'} நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில்.

மகிழ்ச்சி...மிக்க மகிழ்ச்சி.

கட்டுரையின் இறுதியில்.....

லீனா மணிமேகலை ஆகச் சிறந்ததோர் கவிஞர் என்பதற்கு ஆதாரமாக அவருடையை ஒரு கவிதையையும் பதிவு செய்திருக்கிறார் கட்டுரையாளர்.
அந்தக் கவிதையில் சில வரிகளும் நம் சந்தேகங்களும்:

#காவல் அதிகாரி
என் கவிதையைப் பிடித்துக்கொண்டு சென்றார்
விசாரணையின்போது அவர்
கண்களைக் கட்டிக்கொண்டார்
ஆடையில்லாத என் கவிதையைக் காண 
அவருக்கு அச்சமாக இருந்ததாம்#

'ஆடையில்லாத கவிதை' என்றால் ஆபாசக் கவிதை என்பது நமக்குப் புரிகிறது. இவருடைய கவிதைகள் ஆபாசமானவை என்று யாரெல்லாம் சொன்னார்கள்? கட்டுரையாளர் ஒரு சின்னஞ்சிறு பட்டியல்கூடத் தராததால், கவிஞரே தன்னை ஆபாசக் கவிஞர் என்று சொல்லிக்கொள்கிறாரோ என்று சந்தேகம் எழுகிறது.

#குற்றம் விளைவிப்பதே
தன் தலையாய பணி என்பதை
என் கவிதை ஒத்துக்கொண்டதால்
அபராதமும் சிறைத்தண்டனையும்
விதித்த நீதிபதி
தன் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டார்#

படிக்கவும் கேட்கவும் கூடாத அளவுக்கு அப்படி என்ன எழுதிவிட முடியும்?

மார்பகம் என்பதை முலை என்றோ, பிறப்புறுப்பு என்பதை அல்குல் என்றோ, இன்னும் வேறு வேறு வகையிலோ எழுதலாம். நீதிபதியே கண்களையும் காதுகளையும் மூடிக்கொள்ளும் அளவுக்கு இவரால் என்ன எழுதிவிட முடியும்?

#அபராதம் கட்டப் பணம் இல்லாததால்
சிறையிலடைக்கப்பட்ட என் கவிதை#

கவிதையைச் சிறையில் அடைப்பதா? அதெப்படீங்க? யாருமே படிக்கக் கூடாதுன்னு தடை விதிப்பதைச் சொல்கிறாரா? இவருடைய எந்தவொரு கவிதைக்கும் இன்றுவரை அரசு தடை விதித்ததாகத் தெரியவில்லையே!

கவிதையைச் சிறையில் அடைக்கிறதுன்னா வேறு என்னதான் அர்த்தம்?

#சிறையில் அடைக்கப்பட்ட கவிதை
கம்பிகளை மீட்டிக்கொண்டு
சதா பாடல்களை இசைத்தபடியிருந்தது
நாளடைவில் மற்ற கைதிகளும்
ஆடைகளைக் களைந்தனர்#

கவிதை கம்பி எண்ணிக்கொண்டு பாடல் இசைத்ததாம். அது எப்படிங்க?!மற்ற கைதிகளும் ஆடை களைந்தார்களாம். யார் அந்தக் கைதிகள்?

மற்ற கவிஞர்களைச் சொல்கிறாரா? இவரைப் பார்த்துட்டு மற்றவர்களும் ஆபாசக் கவிதை எழுதினார்களா?

என்னதான் சொல்கிறார் லீனா மணிமேகலை?

கவிஞருக்கும் கட்டுரையாளருக்குமே வெளிச்சம்!!!