சனி, 5 ஜனவரி, 2019

பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்வது சரியா?

அண்டவெளியில் உள்ள 'பிரபஞ்சம்'[All existing matter and space considered as a whole; the cosmos...]பெருவெடிப்பின் மூலம் உருவானது என்றும், விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

விரிவடைந்துகொண்டிருப்பதாக[The universe is believed to be at least 10 billion light years in diameter and contains a vast number of galaxies; it has been expanding since its creation in the Big Bang about 13 billion years ago]ச் சொல்லப்படும் பிரபஞ்சம் ஒன்றல்ல; இது போல் இன்னும் பல பிரபஞ்சங்கள் [multiverse] உள்ளன என்று மறைந்த விஞ்ஞானி 'ஸ்டீபன் ஹாக்கிங்' கடைசியாக வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்[ஊடகச் செய்தி].

பெருவெடிப்பு குறித்தும், பிரபஞ்சம் விரிடைந்துகொண்டிருப்பது குறித்தும் பிரபஞ்சங்கள் பலவாக உள்ளன என்பது குறித்தும் நமக்கு எழும் சில சந்தேகங்கள்:

*பெருவெடிப்பிலிருந்து உருவானது பிரபஞ்சம் எனின், பெருவெடிப்பு நிகழ்வதற்கு முன்பு அண்டவெளியில் ஆற்றல் மிக்க அணுக்கள்[தாமாக உருவான அணுக்களா, கடவுளால் உருவாக்கப்பட்ட அணுக்களா?] மட்டுமே இருந்தனவா? அல்லது, எதுவுமே இல்லையா?

*எதுவும் இல்லையெனின், அத்தகைய ஒரு 'வெறுமை' நிலை இருப்பதை எவ்வகையிலேனும் அனுமானிக்க இயலுமா?

*பெருவெடிப்பிலிருந்து உருவான பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருக்கிறது...சரி, எப்போதிருந்து இது நிகழ்கிறது? எவ்வளவு காலத்திற்கு விரிவடைந்துகொண்டே இருக்கும்? முற்றுப்பெறுவது எப்போது? எந்தவித அளவுகோலுக்கும் கட்டுப்படாமல் விரிந்து பரந்து கிடக்கும் அண்டவெளியில் முற்றுப்பெறுதல் என்பது சாத்தியமா?

*ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபஞ்சங்கள் இருப்பதாகத் தமது இறுதி ஆய்வறிக்கையில் சொல்லியிருக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். முதலில் உருவான பிரபஞ்சம் கோள வடிவில்[உருண்டை வடிவிலான பலூன் போல] விரிவடைந்துகொண்டிருந்தபோது, அதன் விரிவடைதல் ஆங்காங்கே தடைபட்டதால், காலியாக உள்ள இடங்களில் எல்லாம் புதிய புதிய வெடிப்புகள் நிகழ்ந்ததன் விளைவாக மேலும் பல பிரபஞ்சங்கள் தோன்றியதாகச் சொல்கிறார் அவர்.

*பிரபஞ்சங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவை என்றால், அவை அத்தனையும் விரிவடைந்துகொண்டே இருக்கின்றன என்றால், ஏதோவொரு காலக்கட்டத்தில் அவை அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே பிரபஞ்சமாக மாறிவிடுவது சாத்தியம்தானே? நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமே இவ்வகையில் உருவானதாக இருக்கக்கூடுமோ?

*பிரபஞ்சம் விரிவடைவது உண்மை என்றால்.....

பிரபஞ்சத்தின் சுற்றுவட்ட எல்லைக்கப்பால் அது மேலும் விரிவடைவதற்கான வெற்றிடம் தேவை. அந்த வெற்றிடம் அதி நவீன விஞ்ஞானக் கருவிகளின் மூலம் அளந்து அறிவதற்கு உரியதா?

இம்மாதிரியான கேள்விகளுக்குத் துல்லியமான விடை கண்டறியப்பட்டால்தான், பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டிருக்கிறது என்பதைச் சாமானிய மக்கள் நம்புவார்கள்!

இது, ஒரு சாமானியனின் உளறல்! பிழை காணின் பொறுத்தருளுங்கள்!!
------------------------------------------------------------------------------------------------------------------------------
சிறப்புச் செய்தி: என்னுடைய 08 நூல்கள் அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளன!