நம் முன்னோர்கள், 'காவியம்' என்னும் பெயரில் ராமாயணம், பாரதம் என்றெல்லாம் பெத்த பெரிய கதைகளை எழுதினார்கள். கதைகளில் இடம்பெற்ற கற்பனை மாந்தர்களையே[கதைமாந்தர் படைப்பும், இடம்பெறும் நிகழ்வுகளும் 90% நம்ப இயலாதவை] கடவுளாக்கி வழிபட்டார்கள் பின்வந்தவர்கள்.
ராமன் என்னும் கற்பனை மனிதன் ராமபிரான் ஆனதும், அநுமார் ஆஞ்சநேயசாமி ஆனதும் இப்படித்தான்.
நம் நாட்டில் எதற்கெல்லாமோ பஞ்சம் நிலவுகிறது. கோயில்களும் சிலைகளும் அவற்றிற்கு விதிவிலக்கு. இருப்பவை போதாதென்று புதிய புதிய கோயில்களும் சிலைகளும் நிறுவப்படுதல் கண்கூடு. இதன் விளைவு.....
அளவிறந்த பொருள் விரயம்; வீணாகும் மனித சக்தி.
தன்னலத்தையும் தன் குடும்ப நலன்களையும் தியாகம் செய்து, ஏழை எளிய மக்களுக்காக 40 ஆண்டுகள், 05 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு சிகிச்சையளித்த[இது உலக மகா சாதனை] டாக்டர் ஜெயச்சந்திரன் என்னும் மாமனிதருக்கும் இவரைப் போன்ற நல்ல மனம் படைத்தவர்களுக்கும் சிலை வைப்பார்களா? [கற்பனைக் கடவுள்களைப் புறக்கணித்து உண்மை மனிதர்களை மதித்துப் போற்றுவதற்குக் கற்றுகொள்வார்களா?!] சிலை நிறுவினால்.....
கர்னாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை[தமிழில், 'நிறுவுதல்' என்றால் சாமி கோபிக்குமோ?!] செய்வதற்காக, வந்தவாசி, கொரட்டூர் குன்றிலிருந்து 108 அடி உயரமும், 26 அடி அகலமும் கொண்ட பாறையில் கோதண்டராமர் சிலை வடிவமைக்கப்பட்டு, ஏராள இடர்ப்பாடுகளுக்கிடையே அதைப் பெங்களூரு கொண்டுசெல்லும் பணி தொடர்கிறதாம்.
கற்பனைக் கடவுள்களுக்குக் கோயில் கட்டுவதற்கும் சிலை வைப்பதற்கும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு மனித சக்தியும் பொருளும் வீணாக்கப்படும் என்பது புரியவில்லை.
நம் மக்கள் மனம் திருந்தி.....
தன்னலத்தையும் தன் குடும்ப நலன்களையும் தியாகம் செய்து, ஏழை எளிய மக்களுக்காக 40 ஆண்டுகள், 05 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு சிகிச்சையளித்த[இது உலக மகா சாதனை] டாக்டர் ஜெயச்சந்திரன் என்னும் மாமனிதருக்கும் இவரைப் போன்ற நல்ல மனம் படைத்தவர்களுக்கும் சிலை வைப்பார்களா? [கற்பனைக் கடவுள்களைப் புறக்கணித்து உண்மை மனிதர்களை மதித்துப் போற்றுவதற்குக் கற்றுகொள்வார்களா?!] சிலை நிறுவினால்.....
இவரையும் இவரைப் போன்றவர்களையும் வழிகாட்டிகளாகக்கொண்டு வருங்காலச் சந்ததியினரும் மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். குருட்டு நம்பிக்கைகளை முரட்டுப் பிடிவாதத்துடன் பின்பற்றுகிற நம்மவர்கள் திருந்துவது எப்போது?!
------------------------------------------------------------------------------------------------------------------
பதிவுலக நண்பர்கள் கவனத்திற்கு.....
என் பதிவுகளுக்கு முறையற்ற வகையில் சிலர் கருத்துத் தெரிவிப்பதால், அவர்களை எதிர்கொள்வதில் என்னுடைய நேரம் வீணாகிறது. நான் கருத்துப்பெட்டியை அடைத்து வைத்திருப்பதற்கு இது மட்டுமே காரணம். வேறு காரணம் எதையும் கற்பிக்க வேண்டாம் என்று நண்பர்களை அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------
அமேசான் கிண்டிலில் வெளியான என்னுடைய 08 நூல்கள்: