அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 9 ஜூன், 2019

மிகப் பல இந்திய மொழிகளை விழுங்கிய இந்தி!!!

இந்தி அரக்கி க்கான பட முடிவு
#இந்திய தேசியம் மிகப்பெரிய துரோகத்தை வேறு யாருக்கும் இழைத்திருக்கவில்லை – இந்தி மாநிலங்களுக்கே இழைத்திருக்கின்றது.

பிஹாரின் கதை மட்டுமல்ல, இந்தி மொழி பேசப்படும் மாநிலங்கள் அனைத்தின் கதையுமே சோகக் கதைகள்தான்.
இந்தி மொழி என்பது ஒரு மொழியல்ல. தனித்தனி மொழிகளாகவும் துணைமொழிகளாகவும் பேச்சுவழக்குகளாகவும் இருந்த பல மொழிக் கலாச்சாரங்கள்மீது மேலிருந்து திணிக்கப்பட்ட ஒரு சர்காரி பாஷா அது. 

அதனூடாக அது வடக்கு, மத்திய இந்தியாவை ஓர் ஒற்றை இந்திப் பிரதேசமாக ஆக்க முயற்சி செய்திருக்கிறது. சுதந்திரப் போராட்டக்காலத்தில்கூட உயிரோடு இருந்த பல மொழிகளை சுதந்திர இந்தியா இந்தி என்ற ஒற்றை அடையாளத்தில் கரைத்து ஒழித்துக் கட்ட முயற்சி செய்துவருகிறது. அந்த வேலை இந்நொடியும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சமஸ்கிருத ஞானஸ்நானம் அளிக்கப்பட்ட ராஷ்ட்டிர பாஷா இந்தியை கட்டாயமொழியாக ஆக்கியபோது, பல கட்டங்களில் தமிழ்நாட்டில் நாம் எதிர்த்தோம். ஆனால் அதனால் பாதிப்பு தமிழ் போன்ற பிற மொழிகள் மீது மட்டும்தான் இருக்கும் என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால் உண்மையில் இந்தியால் பாதிக்கப்பட்டவை வடக்கு, மத்திய இந்தியாவில் பேசப்பட்ட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகள்தான். இவற்றில் இந்தி-உருதுவை விட பல நூற்றூண்டுகால இலக்கியப் பாரம்பரியம் உடையவை பல. அவதி, போஜ்புரி, பிரஜ் பாஷா, ஹரியான்வி, மாகதி, மைதிலி, பஹாரி, சாத்ரி என பல மொழிகளினிடத்தை இந்தி அபகரித்துக்கொண்டது
நன்றி: 'சங்கதம்' http://www.sangatham.com/modernview/hindi-and-north-indian-languages.html
==================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக