நம் குடியரசின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று ஆற்றிய உரை நேற்றைய தொ.க.செய்தி அறிவிப்புகளிலும், இன்றைய நாளிதழ்களிலும் வெளியானது.
நடிகரின் பேச்சு, குறிப்பாக மோடி அவர்களையும் அமித்ஷா அவர்களையும் கடவுள் கிருஷ்ணனுடனும் மானுடன் அர்ச்சுனனுடனும் ஒப்பிட்டது பெரும் பரபரப்புக்கு உள்ளானது.
மோடி அவர்களைக் கடவுள் கிருஷ்ணனோடும் அமித்ஷா அவர்களை அருச்சுனனுடனும் ஒப்பிட்டுப் பேசுவதுதான் ரஜினியின் நோக்கமாக இருந்துள்ளது.
மோடியைக் கடவுளாக்கித் தன்னை மானுடன் ஆக்குவதை அமித்ஷா வெறுக்கக்கூடும் என்று அஞ்சிய நடிகர், வெகு புத்திசாலித்தனமாக, “இருவரில் யார் கிருஷ்ணன், யார் அர்ச்சுனன் என்பது நமக்குத் தெரியாது; அவர்கள் இருவரே அறிவார்கள்” என்று பூசி மெழுகிவிட்டார்.
ஆனால், ரஜினியின் போதாத காலம், அமித்ஷாவுக்கு நெருக்கமானவரும், தமிழும் இந்தியும் தெரிந்தவருமான ஒருவர், “தமிழ் அணியிலக்கணத்தில் ‘கொண்டுகூட்டுப் பொருள்கோள்’ என்று ஒன்று உள்ளது. அந்த இலக்கணத்தின்படி, உவமைகளில் முதலாவதாக நிற்பது, உவமிக்கப்படும் பொருள்களில் முதலிலுள்ளதோடுதான் இணையும். அதாவது, ரஜினி தன் பேச்சில் முதலில் மோடி பெயரையும் உங்கள் பெயரை[அமித்ஷா] இரண்டாவதாகவும் குறிப்பிட்டார். அவர் கையாண்ட இரு உவமைகளில் முதலில் வருவது கடவுள் கிருஷ்ணன். அவர் மோடிக்கு உவமையாகிறார். உங்களுக்கு மனிதனான அர்ச்சுனன் உவமை” என்று சிசுசிசு குரலில் விளக்கவுரை தந்தாராம்.
ரஜினி மீது கடும் கோபம் கொண்ட அமித்ஷா, நாலுபேர் மத்தியில் அதை வெளிப்படுத்த இயலாததால், அப்போதைக்கு ஒரு வெப்பப் பெருமூச்சை மட்டும் வெளிப்படுத்தியதாகத் தகவல்.
பாவம் ரஜினி. அவரைப் பகவான் காப்பாற்றுவாராக!
=================================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக