ta.quora.com தளத்தின் ‘கேள்வி-பதில்’ பகுதியில், ‘பெண்கள் அழகைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?’ என்னும் கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்.....
#பெண்களின் அழகு - இரசிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது.
பெண்களின் அழகை ஆண்கள் மட்டுமே இரசிப்பதில்லை… பெண்களும், குழந்தைகளும் இரசிக்கிறார்கள். ( இ is silent here).
பெண்கள் அழகு சிறிது சிறிதாகக் கூட ஆரம்பித்து, குமரிப்பருவத்தில் உச்சத்தில் இருக்கிறது. உடலியல்பு, வடிவு, பேச்சு, நலம், வாசம் என அனைத்துமே ஒரு உச்ச கட்டத்தில் இருக்கிறது.
பெண்களுக்கு அப்பருவத்தில் ஒரு கர்வம் வரும். எந்த ஆணையும் தன்னால் திரும்பிப்பார்க்கவைக்க முடியும், வீழ்த்த முடியும் என்றெல்லாம் பெருமையாக, ஒரு பெரும் தன்னம்பிக்கை தோன்றும். அது உண்மையும்கூட.
இயற்கை ஒரு பெண் தனக்கான ஏற்ற துணையை, தான் விரும்பிய துணையை, தேர்ந்தெடுத்துக் கொள்ளத் தரும், ஒரே ஒருமுறை அளிக்கும், சந்தர்ப்பம் - குமரிப்பருவம். தன்னைத்தானே தன் அழகை இரசிக்காத பெண்கள் யாருமே இல்லை.
இயற்கை ஒரு பெண் தனக்கான ஏற்ற துணையை, தான் விரும்பிய துணையை, தேர்ந்தெடுத்துக் கொள்ளத் தரும், ஒரே ஒருமுறை அளிக்கும், சந்தர்ப்பம் - குமரிப்பருவம். தன்னைத்தானே தன் அழகை இரசிக்காத பெண்கள் யாருமே இல்லை.
பெரும்பாலான பெண்கள் தம் இயற்கை அழகால் வரும் கர்வம் தன்னம்பிக்கை தரும் போதையில் பலரை அலட்சியம் செய்தோ, அல்லது தேர்வு செய்ய உதவிக்கு வரும் பெற்றோரை அலட்சியம் செய்தோ, அல்லது தன்னைப்பற்றி கற்பனைக்கு மிகுந்து எதிர்பார்த்துக் காத்திருந்தோ, அந்தப் பருவத்தைத் துணையைத் தேடி அடைய முடியாமல், அல்லது இயலாமல், கடந்து விடுவார்கள்.
பிறகுதான் இருக்கிறது. அழகும் இளமையும் குறையக் குறைய தனது கர்வம் பெருமை சிறுகச் சிறுக அழிவதைக்கண்டு பயந்து கிடைக்கும் வாழ்க்கையை ஏற்று வாழ முடிவு செய்யும்போது அழகு என்றால் என்ன என புரியவரும். காலம் கடந்திருக்கும். இழந்த அழகை மீட்கவே, அழகு சாதனங்களுடனான அலாதி நேசம் மிச்சசொச்ச வாழ்நாளெல்லாம் தொடர்ந்து வருகிறது.
பெண்கள் மனத்தாலும், உடலின்பத்தாலும் சந்தோசமாக இருந்தால், அவர்கள் உடல் வனப்பில் அழகும் இளமையையும் பருவம் தாண்டியும் தொடரும். சில நாற்பது வயது பேரிளம் பெண்கள் அழகாக இருந்தால், அவர்களின் கணவன்மார்தான் இதற்குப் பொறுப்பு.
பெண்களின் அழகு என்பது பருவத்தைச் சார்ந்ததால், ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்கள் அழகாக இருந்து கொண்டே இருப்பார்கள். பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் வயதாகிக்கொண்டே போகலாம். ஆனால், காலம்தோறும் அந்த அந்தக் காலகட்டத்தில் எழிலும் வனப்பும் மிக்க அழகான பெண்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அழகை ரசிப்பது ஒரு மனப்போக்கு. பார்க்கும் அழகை அனுபவிக்க நினைப்பது ஒரு மனப்போக்கு. இங்குதான் சட்டமும், சமூகக்கட்டமைப்பும் தன் வேலையைச் செய்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பையும், ஆண்களுக்கு நெறிகாட்டி வழிகாட்டுதலையும் செய்கிறது. இது மீறப்படும்போது சமூகக் குற்றங்கள் மலிகின்றன. ஆகவே இருபாலரும் கவனமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டியது கடமையாகிறது.
ஆகவே அழகு என்பது இறைவனின் கொடை (இரு பாலருக்கும்). அழகும் இளமையும் இருக்கும் போதே பெண்கள் தனக்கான துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது சாலச்சிறந்தது#
===================================================================
நன்றி: ta.quora.com[கேள்வி - பதில்]; பதில் அளித்த ‘திருவடியான்’ அவர்களுக்கும் நம் நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக