#அவனைச் சுமந்துகொண்டு அந்த ஓட்டலுக்கு எதிரே இருந்த சந்தில் நுழைந்தது அந்த ரிக்ஷா. சந்துக்குள் ஒரு காம்பவுண்டு. அதில் நான்கே நான்கு வீடுகள்.
ரிக்சா ஒரு வீட்டின் முன்னால் நின்றது. இதைக் கவனித்த மற்ற வீட்டுக்காரர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தார்கள்.
‘அவன்’ அந்த வீட்டுக்குள் நுழைந்தான். ரிக்சாக்காரனால் முன்பே வர்ணிக்கப்பட்ட அந்தப் பெண் கறுப்பாக இருந்தாள். ஆனாலும் நல்ல வாகான உடற்கட்டு.
ஒரு ஜமுக்காளம் விரிக்கப்பட்டது.
அவன் பயந்துகொண்டே அதில் அமர்ந்தான்.
ரிக்சாக்காரன் சொன்னபடியே அவன் அவளிடம் ரூபாய் இருபத்தைந்து கொடுத்தான். அவள் முகத்தில் நன்றியுணர்ச்சி பரவியது.
அவளுடன் அவன் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தான். அவள், தான் ‘அந்த’த் தொழிலுக்குத் தள்ளப்பட்ட கதையை வேதனை பொங்கச் சொன்னாள். உடலுறவு இச்சையைக் கிடப்பில் போட்டுவிட்டு அனுதாபத்துடன் அவளின் சோகக் கதையை முற்றிலுமாய்க் கேட்டான் அவன்.
பின்னர், அவள் முழுமனதுடன் ஒத்துழைத்ததில் எதிர்பார்த்ததிற்கும் மேலான உடலுறவு சுகத்தை அனுபவித்தான் அவன்.
“நான் ஒருவனுடன்தான் வாழ விரும்பினேன். அந்த விருப்பம் நிறைவேறவில்லை. நீயே என்னை நிரந்தரமாக ‘வைத்து’க்கொள்கிறாயா?” என்று அவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு கேள்வியைக் கேட்டாள்.
“நீ எவ்வளவு பெரிய ஆள். உன் புரட்சிகரமான கருத்தையெல்லாம் சினிமாவில் கேட்டிருக்கிறேன்” என்று அர்த்தமுள்ள ஒரு பார்வையை அவன் மீது படரவிட்டாள்.
அவன் மௌனம் சுமந்தான்.
ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் அந்த உபதேசங்களின்படி வாழ்ந்துகாட்டுகிறார்களா என்ன? அவனும் அவர்களில் ஒருவன்தானே?
பன்னிரண்டு மணிக்கு மேல் அங்கிருந்து புறப்பட்டு அவன் தங்கியிருந்த இடம் சேர்ந்தான்.
விடியும்வரை அவனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை#
‘வனவாசம்’ நூல் வாசித்தவர்கள் இந்த ‘அவன்’ கண்ணதாசன் என்பதை எளிதாக அனுமானித்திருக்க இயலும்.
===========================================================================
pdf கோப்பிலிருந்து திரட்டி, நடையில் மிகச் சில மாற்றங்கள் செய்து வெளியிடப்பட்டது இச்சிறு பகுதி. கண்ணதாசன் பதிப்பகத்தார் மன்னிப்பார்களாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக