2011 ஆம் ஆண்டில் ‘கடவுளின் கடவுள்’[http://kadavulinkadavul.blogspot.com] என்னும் வலைப்பதிவில் எழுதத் தொடங்கினேன். நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதிய பிறகு.....
‘ஒரு பக்கக் கதைகள் ஓராயிரம்’[[http://kadavulinkadavul.blogspot.com] என்று தலைப்பை மாற்றி எழுதி வந்தேன். சில நூறு கதைகள் எழுதிய பின்னர், ஆயிரம் கதைகள் எழுதுவது சாத்தியமில்லை என்ற முடிவுடன்.....
‘நான்...நீங்கள்...அவர்கள்’[http://kaamakkizaththan.blogspot.com] என்னும் தலைப்பில் புதிய வலைப்பதிவு தொடங்கினேன். அதில், நான் எதிர்பார்த்ததுபோல் தரமான பதிவுகள் எழுதிப் பெரும் எண்ணிக்கையில் வாசகரைக் கவர இயலாததால், ‘மூடர் உலகம்’[http://muudarulakam.blogspot.com] உருவாக்கினேன்.
மூடநம்பிக்கைகளையும், அவற்றை வளர்த்தவர்களையும் மிகக் கடுமையாகச் சாடியதாலோ என்னவோ, கூகிள் இத்தளத்தை Remove செய்துவிட்டது.
இந்த நிலையில், ‘படைப்பு உலகம்’ தொடங்கினேன்.
எவ்வளவோ முயன்றும் தமிழ்மணம்[தமிழ்மணம் இப்போது?!] திரட்டியில் இதை இணைக்க இயலாததால், இதில் எழுதுவதைத் தவிர்த்து, மீண்டும் ‘ஒரு பக்கக் கதைகள் ஓராயிரம்’[http://kadavulinkadavul.blogspot.com] என்னும் பழைய வலைப்பதிவிலேயே[தமிழ்மணத்தின் பழைய இணைப்பு துண்டிக்கப்படாத நிலையில்] கதைகள் வெளியிட்டேன்.
எழுதுவதில் சுணக்கம்.
மீண்டும் ‘கடவுளின் கடவுள்’ தளத்திற்குத் தாவல்.
வாசகரிடையே நல்ல வரவேற்பு. 800 பதிவுகளுக்கும் மேலாக வெளியிட்ட நிலையில், அவற்றில் கணிசமானவற்றை வேறு வேறு தலைப்புகளில் தொகுத்து, அமேசான் கிண்டிலில் நூல்களாக்கி[19 நூல்கள்] இணைத்தேன்.
பதிவுகளில் கணிசமானவை நூல்களாகிவிட்டதால், ‘கடவுளின் கடவுள்’ தளத்தை முடக்கிவிட்டு, வேறு தலைப்பில் புதிய தளம் தொடங்கினேன். அந்தத் தலைப்பு நினைவில் இல்லை. ஹி...ஹி...ஹி!
சில மாதங்களுக்கு முன்பு, https://pasiparamasivam.blogspot.com என்னும் என் பெயரிலான புதிய தளத்தை நிறுவிப் பல பதிவுகள் வெளியிட்டுள்ளேன்.
சில மாதங்களுக்கு முன்பு, https://pasiparamasivam.blogspot.com என்னும் என் பெயரிலான புதிய தளத்தை நிறுவிப் பல பதிவுகள் வெளியிட்டுள்ளேன்.
வாசகர் வருகை ஓரளவு மனநிறைவு தருவதாக அமைந்துள்ளது. கூகுள், விளம்பரங்கள் வழங்குகிறது[எப்போது நிறுத்தும் என்பது தெரியாது].
2011இல் தொடங்கிய ‘கடவுளின் கடவுள்’ தளத்திலேயே தொடர்ந்து எழுதிச் சாதனை நிகழ்த்தாமல், வேறு வேறு தலைப்புகளிலான தளங்களுக்குத் தாவியிருக்கிறேன்!
‘மனித மனம் ஒரு குரங்கு’ என்பார்கள். நான் இதை நிரூபித்திருக்கிறேன் என்று சொல்லிப் பெருமைப்படுவதா, வருத்தம் கொள்வதா எதைச் செய்வது என்று புரியவில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக