தமிழில்[பயிற்றுமொழி] பள்ளிக் கல்வி பயின்ற தேனிப் பெண் ஒருத்தி, தன் விருப்பத்திற்கிணங்க தொழிநுட்பக் கல்வி பயின்று, விண்வெளி வீரர்களுக்கான மிக மிகக் கடினமான பல பயிற்சிகள் மூலம் விண்வெளி வீராங்கனைக்கான முழுத் தகுதியையும் பெற்று, அரியதொரு வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
இது குறித்த, குங்குமம் வார இதழில் வெளியான நீண்டதொரு கட்டுரையின் தொடக்க..இறுதிப் பகுதிகளை மட்டும் இங்கே இணைத்திருக்கிறேன்.
தமிழில் படித்தால் வேலை வாய்ப்பில்லை; எதையும் சாதிக்க இயலாது என்று சொல்லித் திரியும் அரைவேக்காட்டுப் பெற்றோர்களுக்காகவே இந்தப் பதிவு.
இனியேனும் அவர்கள் திருந்தட்டும். அவர்கள் திருந்துகிறார்களோ இல்லையோ, தம் பிள்ளைகளைத் தமிழ் வாயிலாகக் கல்வி கற்பிக்க எண்ணும் பெற்றோர் வழியில் குறுக்கிடுதல் கூடாது என்பது நம் வேண்டுகோள்...எச்சரிக்கையும்கூட.
நன்றி; குங்குமம் வார இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக