பக்கங்கள்

வியாழன், 10 அக்டோபர், 2019

பாலுறவுப் பொன்மொழிகள்!!!

*பல நேரங்களில் தவறு செய்ய முயலும்போது நம் மனசாட்சி நம்மைத் தடுத்துவிடுகிறது. நம் மீதான, இச்சைகளின்[குறிப்பாகக் காமம்] உச்சக்கட்டத் தாக்குதலின்போது அது எங்கோ ஓடி ஒளிந்துகொள்கிறது!

*நினைத்தபோது நினைத்த இடத்தில் நினைத்த வகையிலெல்லாம் உடலுறவு சுகம் அனுபவிக்க இயலாத நம் முன்னோடிகளில் கணிசமானவர்களால் கற்பனை செய்யப்பட்டதே ‘காதல்’ ஆகும்.

*உடலுறவில் உச்சம் தொடுவது பெண்ணுக்குச் சாத்தியமா என்பது பற்றி இதுவரை எந்தப் பெண்ணும் கருத்துச் சொன்னதில்லை. “ஆம்” என்றும் “இல்லை”யென்றும் தொடர் விவாதம் நடத்திக்கொண்டிருப்பவர்கள் அப்பாவி ஆண்களே!

*வாழ்ந்து முடித்து மடிந்துபோவதை ‘ஆடி அடங்கும்  வாழ்க்கையடா’ என்றார்கள் நம் முன்னோர்கள். உடலுறவுக்கு முன்பு நாயாய்ப் பேயாய்  ஓடியாடி அலைந்து உடலுறவுக்குப் பின் அடங்கிவிடுவதும் இதில் அடங்கும்தானே?!

*‘இது’ விசயத்தில் பெண்களின் பங்கு மிகவும் குறைவு. லேகியம், ஆயின்மெண்ட், வயாகரா, நயாகரா என்று அலைந்து திரிபவர்கள் ஆண்களே.

*உலக அளவில் எது எதிலோ கின்னஸ் சாதனை நிகழ்த்தப்படுகிறது. ‘இது’ விசயத்தில் முயற்சி ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

*ஆசைப்பட்டபடியெல்லாம் அனுபவிக்க இயலாதபோது மனம் வருந்துவது மனித இயல்பு. அந்த வருத்தத்தை உரிய முறையில் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். தவறினால், உடல் நலிவுற்று, பின்னர் எதிர்பாராத வகையில் வாய்ப்புகள் கிடைத்தால் அவற்றைப் பயன்படுத்த இயலாமல் போவது மிகப் பெரிய சோகம்.

*ஆண்களைப் பொருத்தவரை இறுதி மூச்சுவரை புணர்ச்சி செய்ய இயலும். பெண்ணின் உடலமைப்பு அதற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்படவில்லை. கடவுள் எனப்படுபவர் பெண்ணுக்கு இழைத்த மிகப் பெரிய துரோகம் இதுவாகும்.
===========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக