பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 7 நவம்பர், 2019

வேதம் புனிதமானது?!?!

முனிவரை ஈனும் மான் க்கான பட முடிவு
இந்துத்துவாக்களால் பெரிதும் போற்றப்படுகிற வேத சாஸ்திரங்களில்.....

அசுவத்தாமன்                குதிரைக்கும்,

காங்கேய முனிவர்        கழுதைக்கும்,

காலக்கோட்டு ரிஷி       மானுக்கும்,

ஜம்புகர்                                நரிக்கும்,

காங்கேயர்                         கழுதைக்கும்,

மாண்டவியர்                     தவளைக்கும்,

சவுனகர்                               நாய்க்கும்,

கணாதர்                              கோட்டானுக்கும்,

சுகர்                                        கிளிக்கும்,

ஜாம்புவந்தர்                       கரடிக்கும்[ஆதாரம்: ‘ஞான சூரியன்’, சாமி புக்ஸ், மயிலாப்பூர், சென்னை]

என்றிவ்வாறாக, மனிதர்களை விலங்குகளும் பறவைகளும் பெற்றெடுத்ததாகக் கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

இவை போன்ற அதீதக் கற்பனையில் கட்டிவிடப்பட்ட கதைகள் ஏராளம்!

இத்தகு கதைகளின் பிறப்பிடமாகவும் இருப்பிடமாகவும் உள்ள வேதங்களில் இட்டு நிரப்பப்பட்ட மந்திரங்களைத்தான் நம் மக்கள், தாம் நடத்தும் திருமணங்களிலும், புதுமனைபுகும் விழாக்களிலும், குடமுழுக்கு நிகழ்வுகளிலும், மழை பெய்வித்தல் போன்ற காரணங்களுக்காகச் செய்யப்படும் யாகங்களிலும், அன்றாடம் கோயில்களில் செய்யப்படும் வழிபாடுகளின்போதும் வேத சாஸ்திரம் படித்த வேதியர்களை ஓதச் செய்கிறார்கள்.

அந்தக் காலத்து ‘உலகாயதர்’ போன்ற அறிவுலக மேதைகளும், அண்மைக்காலம்வரை வாழ்ந்து மறைந்த பெரியார் போன்ற சீர்திருத்தச் சிந்தனையாளர்களும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்குப் பட்ட பாடு வீணாகிப் போனதா?

ஆபாசக் கதைகளையும், மாந்தருக்குள்ளே ஏற்றத் தாழ்வுகள் உருவாகக் காரணமான கருத்தாக்கங்களையும் உற்பத்தி செய்த இந்த வேத சாஸ்திரங்களை, நம்மவர்கள் தம் தலையில் சுமந்து கொண்டாடக் காரணமான அந்த அயோக்கியர்கள் யார்?

அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கிவைக்கும் திறன் தமிழனுக்கு வாய்க்காமல் போனது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?
===========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக