அமேசான் கிண்டிலில் 24 ஆவதாக ஒரு நூலை வெளியிட்டிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.
இந்த வணிக நிறுவனம், இலக்கியப் போட்டிகளை நடத்துகிறது என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன்.
நான் இதில் நூல்கள் வெளியிடுவது பரிசு பெறும் நோக்கத்துடன் அல்ல; அல்லவே அல்ல. காரணம்.....
ஒவ்வொரு பிரிவிலும்[நீள் கதை, குறுங்கதை] முதல் கட்டமாகத் தலா ஐந்து நூல்கள் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்வு செய்பவர்கள்......
அமேசானில் 1500 ரூபாய்க்குக் குறையாமல் வணிகம் செய்தவர்கள் மட்டுமே. படைப்புகளுக்கு மதிப்புரை எழுதுபவர்களும் நட்சத்திர அஸ்தஸ்து வழங்குபவர்களும் அவர்களே. இவற்றையும் நூலின் விற்பனையையும் கணக்கில் கொண்டுதான் ஐந்து நூல்கள் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட படைப்புகளிலிருந்து முதல் மூன்று பரிசுக்குரியனவற்றைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே நடுவர்களின் பணி.
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பலர் இணைந்து குழுவாக இயங்குவது போலவே, அமேசானிலும் இணைந்து செயல்படுகிறார்கள். அவர்களின் தயவு இருந்தால் மட்டுமே முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெறுதல் சாத்தியம்.
என்னைப் பொருத்தவரை, எந்தவொரு குழுவினருடனும் எனக்குத் தொடர்பு இல்லை. கடந்தவொரு மாதத்தில் மட்டும் அமேசானில் 5 நூல்கள் இணைத்துள்ளேன். அவற்றில் விற்பனையயும் வாசிக்கப்படும் பக்க எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டு எனக்குரிய தொகையை வழங்குகிறார்கள். இதில் கிடைக்கிற மகிழ்ச்சியே போதுமானதாக உள்ளது.
புதிய நூல்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக