புதன், 4 டிசம்பர், 2019

அமேசான் கிண்டில் போட்டிகள். இந்தியை முந்தியது தமிழ்!

இணையம் வழியாக, நூல்கள் வெளியிடுவதிலும் அவற்றை விற்பனை செய்வதிலும் முன்னிலை வகிக்கிற ‘அமேசான்’ நிறுவனம், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இலக்கியப் போட்டிகளை[pentopublish2019] 2019 செப்டம்பர் மாதத்தில் அறிவித்தது.

இந்தப் போட்டி, ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கானது. படைப்புகளை அனுப்புவதற்கான காலக்கெடு 14, டிசம்பர், 2019இல் முடிவடைகிறது.

படைப்புகள்.....

2000 - 10000 சொற்களில் அடங்குபவை[Short Form Entries]
10000க்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்டவை[Long Form Entries]

என்று இருவகையாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒவ்வொரு மொழிப் படைப்புகளுக்கும் மும்மூன்று பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன..

L.FORM: முதல் பரிசு ரூ.5,00,000; 2ஆம் பரிசு ரூ1,00,000; 3ஆம் பரிசு ரூ50,000.
SF:                    ,,             ரூ50,000;             ,,             ரூ25,000;              ,,            ரூ10,000

இந்நாள்வரை[06.12.2019] படைப்புகள் இடம்பெற்றுள்ள விவரம்.....

ஆங்கிலம்.......3000[LF2000 + SF1000]

தமிழ்.................286[124 + 162]

இந்தி.................267[110 + 157]

ஆக, அமேசான் நடத்தும் இலக்கியப் போட்டியில்[கதைகள், கவிதைகள்] இந்தியைத் தமிழ் முந்தியிருக்கிறது என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்[கடந்த ஆண்டு தமிழை இந்தி முந்தியிருந்தது].
==========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக