சனி, 25 ஜனவரி, 2020

தமிழில் ‘நீட்’ எழுதி மருத்துவம் கற்கும் மாணவர்கள்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி மாணவர் மூவர், 2019ஆம் ஆண்டு நீட் தேர்வைத் தமிழ் வழியில் எழுதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகிறார்கள்.

571 மதிப்பெண் பெற்ற ஈ.சரவணனும், 544 மதிப்பெண் பெற்ற எம்.குபேந்திராவும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயில்கின்றனர்.

மாணவர் கார்த்திகேயன் திருச்சி கேஏபி விஸ்வநாதன் கல்லூரியில் பயில்கிறார்.

எஸ்ஆர்வி பள்ளியில் இந்த ஆண்டு தமிழ் வழியில் பயிலும் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தமிழில் நீட் தேர்வு எழுதத் தயாராகி வருகிறார்கள். “அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்விக்கான வாய்ப்பு இவர்களுக்கு உள்ளது” என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழில் நீட் எழுதிச் சாதித்த மாணவர்களையும் இனி எழுத இருப்போரையும் பாராட்டி வாழ்த்துகிறோம்.  

மாணவர்களை ஊக்குவித்துத் தமிழில் எழுதத் தூண்டிய எஸ்ஆர்வி நிர்வாகத்தினரையும், இம்மாதிரிச் செய்திகளைத் தேடி எடுத்து வெளியிடுகிற ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளியிடுவோரையும் பாராட்டி மகிழ்கிறோம்.

நன்றி.
நன்றி: ‘இந்து தமிழ்’[25.01.2020] நாளிதழ்