விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள மல்லி ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. இரு குழந்தைகளுக்குத் தாய். பிளஸ் 1 படிப்பைப் பாதியில் கைவிட்டவர்.
‘விட்ட படிப்பைத் தொடர வேண்டும்; தேர்வுகள் எழுதி உயர் பதவிக்குச் செல்ல வேண்டும்’ என்ற இலட்சியத்துடன், இரவு நேரங்களில் ஓய்வு கிடைக்குப்போது படித்து 2013இல் தனித் தேர்வு மூலம் +2 எழுதி 1070 மதிப்பெண்கள் பெற்றார்.
2014இல் குரூப் -4 எழுதித் தேர்ச்சி பெற்று இளநிலை உதவியாளர் பதவி பெற்றார்.
2018இல் தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர், தமிழில் குரூப் -1, குரூப்-2 தேர்வுகள் எழுதி இரண்டிலும் வெற்றி ஈட்டினார்.
தரமான நூல்களைத் தேடிப் படித்ததோடு பயிற்சி மையங்களின் வழிகாட்டுதலையும் பெற்றுத் தேர்வு எழுதிச் சாதனை நிகழ்த்தியுள்ளார் காமாட்சி.
அவர் சொல்கிறார்: “தமிழில் தேர்வு எழுதி வெல்ல முடியுமா என்னும் அச்சத்தைப் புறம் தள்ளி வெற்றி பெற்றுள்ளேன்.”
காமாட்சி போன்ற கொள்கைப் பிடிப்புள்ள பெண்களால் தமிழ் வாழும் என்பது 100% உறுதி.
காமாட்சிக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
========================================================================
நன்றி: 'இந்து தமிழ்' நாளிதழ் 24.01.2020
========================================================================
நன்றி: 'இந்து தமிழ்' நாளிதழ் 24.01.2020