அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 20 மார்ச், 2020

அதென்னங்க ‘உஞ்சவிருத்தி’?!

//தலையில் சிவப்பு அங்கவஸ்திரம். இடது தோள்பட்டையில் கயிறு கட்டித் தொங்கவிடப்பட்ட சொம்பு. காலில் சலங்கை. இப்படியானதொரு கோலத்துடன், கிருஷ்ண பஜனை பாடியவாறு வீடு வீடாகச் சென்று தானம் கேட்பதற்கு ‘உஞ்சவிருத்தி’ என்று பெயர்// - உஞ்சவிருத்திக்கு இப்படியானதொரு விளக்கத்தைத் தந்திருக்கிறது இன்றைய ‘தினமலர்’[20.03.2020] நாளிதழ்.

உஞ்சவிருத்தி தானம் பெற்றே வாழ்ந்து முடித்தவர்கள்  முன்பு இருந்ததாகக் கேள்வியுற்றிருக்கிறோம். இன்றும்கூட, [40 ஆண்டுகளாக] இவ்வகைத் தானத்தைப் பெற்று ஒருவர் வாழ்ந்துகொண்டிருப்பதாக இந்நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அவர் பெயர் கல்யாணராமன்[திருச்சி]. “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்களெல்லாம் உஞ்சவிருத்தி எடுத்திருக்கிறார்கள். இது எனக்கு என் தந்தையார் கற்றுக்கொடுத்த வேதம். 40 ஆண்டுகளாக இதைச் செய்துதான் பிழைக்கிறேன்.

மக்கள் பச்சரிசியைத்தான் தானமாகக் கொடுப்பார்கள். சொம்பு நிரம்பிவிட்டால் தானம் பெறுவதை நிறுத்திவிட வேண்டும். ஆனால், நான் தெருவில் இறங்கினால் இரண்டு மூட்டைவரை அரிசியைத் தானமாக்ப் பெற்றுவிடுவேன். எனக்குத் தேவையானது போக எஞ்சியிருப்பதை முதியோர் இல்லத்திற்கோ[அவர் வழக்கமாகத் தங்கும் இடம்] அனாதை இல்லங்களுக்கோ தந்துவிடுவேன்.

சாமி கதைகள் சொல்லும்போது[உபன்யாசம்] மக்கள் பட்டு வேட்டி, சேலை எல்லாம் கொடுப்பார்கள் அதுகளையும் நான் வைத்துக்கொள்வதில்லை.; ஏழைகளுக்குக் கொடுத்துவிடுவேன்” என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்  கல்யாணராமன்.

சாமி பெயரால் பிச்சை எடுப்பதுதான் உஞ்சைவிருத்தி என்று நான் நினைத்ததுண்டு. இச்செய்தியைப் படித்தபிறகு, இதுவும் ஒரு வகையான வாழ்தல் முறையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

வாழ்க கல்யாணராமன்!
========================================================================

உஞ்சவிருத்தி பிராமணர் என்பவர்கள் பிராமணர்களில் ஒரு பிரிவினர். இவர்கள் தலையில் தலைப்பாகை கட்டி, காலில் சலங்கை கட்டி, இடது தோளில் ஒரு பித்தளைச் செம்பை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டபடி தம்பூராவை மீட்டியபடி சப்ளா கட்டையைத் தட்டி பசனைப்பாடல்களைப் பாடியபடி வீடுவீடாகச் சென்று அரிசி முதலான தானியங்களைத் தானமாகப் பெற்று அதை வீட்டுக்குக் கொண்டுவந்து சமைத்து உண்டு வாழ்பவர்கள் ஆவர்.[1] [2] இதில் இன்னொரு பிரிவினர் அறுவடையான நெல் வயல்களிலில் சிதறிய தானியங்களை சேகரித்துவந்து வைத்து சமைத்து உண்பவர்கள் ஆவர் - விக்கிப்பீடியா