அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 29 ஜூன், 2020

ஐயோ பாவம்...அவதாரங்கள்!!!

இராமகிருஷ்ண பரமஹம்சர், ஷீரடி சாய்பாபா, புட்டபர்த்தி  சாய்பாபா, ரமண மகரிஷி போன்றோர் லட்சோபலட்சம் பக்தர்களால் மகான்கள் என்று போற்றப்பட்டவர்கள்; படுபவர்கள்.

முழுமுதல் கடவுளே இம்மகான்கள் உருவில் இம்மண்ணில் அவதரித்ததாகக் கருதி, இவர்களைப் வணங்கி வழிபடுகிறார்கள் நம் மக்கள்.

மேற்கண்ட நான்கு மகான்களும் குணப்படுத்த இயலாத[அன்றைய நிலையில்] கொடிய நோய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள்[ஆன்மிகவாதிகளின் நோக்கில் ‘மகா சமாதி ஆனவர்கள்].

கடவுளின் மறுபிரதிகளாக இம்மண்ணில் தோன்றிய இவர்கள் தீராத நோய்களுக்குள்ளாகி மரணிக்கும் அவலம் நேரலாமா? 

நேர்ந்தது என்றால் இவர்கள் மகான்களா? அவதாரங்களா?


கேட்டால், நேரடியான பதில் கிடைக்காது. கொஞ்சமும் புரியாதா தத்துவங்களை உதிர்த்துக்  கேட்போரை மயங்க வைப்பார்கள் ஆன்மிகவாதிகள். அதோடுகூட.....

கேள்வி எழுப்ப வேண்டியவர்கள், இவர்கள் இட்டுக்கட்டிய கதைகளால் சிந்திக்கும் அறிவு மழுங்கடிக்கப்பட்டு, அதீத பக்தி எனும் போதையில் மிதந்துகொண்டிருக்கிறார்கள்.

போதை தெளிய  ஆண்டுகள் பல ஆகக்கூடும்.

காத்திருப்பது மக்கள் நலம் விழைவோர் கடமை!

வருகைக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள்.

*கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு ஆகியவை காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. 
இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறும் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. 

அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையைக் கவனித்து வந்தனர்.

பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதப் பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது.

85 வயதில் திரு. சத்ய சாய் பாபா இயற்கை எய்தியபோது அவர் தாம் ஒன்றும் அதிசய அற்புதங்களை நிகழ்த்தும் கடவுள் பிறவியல்ல என்பதை நிறுவி, தாமும் ஒரு மனிதப் பிறவி தான் என்பதை உரத்துக் கூறியுள்ளார் என்று தான் கூற வேண்டும். 2000ஆம் ஆண்டில் புட்டபர்த்தியில் நடந்த ஒரு கூட்டத்தில் சாய் பாபா நான் 96 வயதில்தான் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்வேன் என்று உறுதிபட ஆருடம் கூறினார். அதன் பின்னரும் பலமுறை அவர் ஆருடம் கூறி வந்துள்ளார். ஆயினும், அவரும் வெறும் மனிதப் பிறவிதான் என்பதைக் குறிக்கும் வகையில் 85 வயதிலேயே இயற்கை எய்தினார். 

கடவுள் அவதாரம் எடுத்தவருக்கே 85 வயதில் ஆயுள் முடியும் போது பக்தர்கள் தங்களது ஆயுளை நீட்டிக்கச் சாமியார்களை நாடிப்போவது தான் ஆச்சரியமாய் இருக்கிறது.  [www.keetru.com]

*ராமகிருஷ்ண பரமஹம்சரின் கடைசி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரைக் கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். ராமகிருஷ்ணரின் உயிர், 1886 ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டுப் பிரிந்தது.

*1948ஆம் ஆண்டு ரமண மகரிஷியின் இடது கையில் ஒரு கட்டி ஏற்பட்டது. அது புற்றுநோய்க் கட்டி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதற்காக அவர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். ஆனாலும் குணம் ஆகவில்லை.

நோய் முற்றிய நிலையில், 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 8.47 மணிக்கு ரமணர் காலமானார்.

*ஷீரடி சாய்பாபாவுக்கு 1918ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி லேசான காய்ச்சல் அடித்தது. மூன்று நாட்களில் காய்ச்சல் குணமாகிவிட்டது. ஆனால் பாபா சோர்வாகக் காணப்பட்டார். இந்த நிலையில் தன் உயிருக்கு உயிரான செங்கல்[தனிக்கதை!] உடைந்ததால் அவர் சாப்பிடுவதைக் குறைத்தார். இதனால் அவர் உடல்நிலை பலவீனமானது.

16 நாட்களாக அவர் வழக்கம் போல் சாப்பிடவில்லை. 17ஆவது நாள் அதாவது 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பாபா மரணம் அடைந்தார். 
=======================================================================