ஞாயிறு, 28 ஜூன், 2020

“ஓம் நமோ நாராயணாய”!!!

இப்படி நான் சொல்லலீங்க. சொன்னவர்...தினமும் சொல்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் அவர்கள்.
இந்த மந்திரத்தை[?!] வீடுதோறும், 108 முறை சொல்லி ஜெபம் செய்தால் கொரோனா ஓடி ஒளிஞ்சுடும்/ஒழிஞ்சுடும்னு('28.06.20 இந்து தமிழ்'நாளிதழ்ச் செய்தி) சொல்லியிருக்கார் அவர். 

உலகெங்கிலும் இது உச்சரிக்கப்பட்டா கொரோனா ஒழிஞ்சிடுமா?

எல்லாம் ஒரு நம்பிக்கைதான்னு சொல்றீங்களா? சரி, ஒழியலேன்னா.....

நாராயணன் மேல மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையும் ஒழிஞ்சிடுமே!

நாராயணன் கவலைப்பட மாட்டார்.  ஜீயர் கவலைப்படாம இருப்பாரா?

தெரியல.

“அல்லாவின் பேரைச் சொல்லு, கொரோனா ஒழிஞ்சிடும்”னு சாயபுகளோ[ஏதோ ஓர் ஊர்ல, கொரோனா சிகிச்சைக்காக மசூதியை ஒப்படைக்கத் தயார் என்று இவர்கள் அறிவித்திருப்பதாகச் செய்தி படித்தேன்], "கர்த்தரை அழை, கொரோனா காணாமல் போயிடும்”னு கிறித்தவர்களோ அறிக்கை விட்ட மாதிரித் தெரியல. ஜீயருக்கு மட்டும் இதற்கான துணிச்சல் பிறந்தது எப்படி?

எப்படியாச்சும் சில நாட்களில் கொரோனா காணாம போனா, “எல்லாம் ஓம் நமோ நாராயணாய மந்திரத்தைச் சொன்னதன் பயன்” என்று சொல்லி, வைணவத்தை வளர்க்கவும், தன் கௌரவத்தை உயர்த்தவும் ஆசைப்படுகிறாரோ?

சிதம்பரம் நடராசர் கோயில் தீட்சிதர் இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதே, இது தெரியாதா ஜீயருக்கு? ரெண்டொரு ஆண்டாள் கோயில் அர்ச்சகர்களுக்கேனும் கொரோனா தொத்தணுன்னு நினைக்கிறாரோ?

“தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களையும் திறக்கணும்” என்று அரசுக்கு இவர் வைத்துள்ள வேண்டுகோள் இதை உறுதிப்படுத்துது.

இப்பதிவின் மூலம் ஜீயரின் மனதை நோகடிப்பது என் நோக்கம் அல்ல; அல்லவே அல்ல.

இனியும் இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டு, தன் மீதான நாராயண பக்தர்களின் நன் மதிப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டாம் என்பதே என் அன்பான வேண்டுகோள்.
=======================================================================