திராவிடர் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் இரண்டு கழகங்களும் தமிழ் மொழி, இன வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும் அமைப்புகளாகும். இவற்றுக்கிடையேயான நட்பு நாளும் போற்றப்படுகிற ஒன்று.
நூற்பதிப்புக் கழகத்தை நிறுவிய திருவரங்கம் பிள்ளையின் இணையரும், தனித்தமிழ்ப் பற்றாளர் மறைமலையடிகளாரின் மகளுமான நீலாம்பிகை அம்மையாரின் தலைமையில், 1938ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்தான் பெரியாருக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தைக் கடுமையாக வெறுத்த மறைமலையடிகள், அவரின் தன்னலமற்ற, மூநடம்பிக்கை ஒழிப்புப் பணியையும், தமிழினத்தின் மேம்பாட்டுக்கான தொண்டினையும் கருத்தில் கொண்டு அவரின் நண்பரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிகளாரின் பாடநூல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் விலக்கிக்கொள்ளப்பட்டபோது பெரியார் அதைக் கண்டித்தார். தனித்தமிழ், சைவத்தில் நிலைகொண்டது, திராவிட இயக்கம் கடவுள் மறுப்பைக் குறிக்கோளாகக் கொண்டது. எனினும், தமிழையும் தமிழினத்தின் உரிமைகளையும் பாதுகாப்பதில் இவ்விரு அமைப்புகளும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இணைந்து இயங்கின என்பது நினைவுகூரத்தக்கது.
* * * *
நன்றி: ‘இந்து தமிழ்’[27.06 2020] நாளிதழ். ‘கழகமும் செல்வியும் வளர்த்த தமிழ்’ என்னும், ‘செல்வ புவியரசன் அவர்களின் கட்டுரையிலிருந்து எடுத்தாண்டது இப்பதிவுக்கான கருத்துரை.
=====================================================================
இடம் நிறையவே காலியாக உள்ளது. குங்குமத்தில் முன்பு[2015] வெளியான என் ஒருபக்கக் கதையையும் போகிறபோக்கில் வாசித்துச் செல்லுங்கள். நன்றி.