'ப்ராஹ்மணத்துவேஷம், பெரியாரிய பெருச்சாளிகள்: கறுப்பர் கூட்டத்தை விளாசிய கஸ்தூரி'
இப்படியொரு தலைப்பின் கீழ், ‘கறுப்பர் கூட்டம்’ தொடர்பாகச் செய்தி வெளியிட்டுள்ளது ‘சமயம் தமிழ்[’Shameena Parveen | Samayam Tamil Updated: 15 Jul 2020, 12:16:00 PM] செய்தி நிறுவனம்.
வலைத்தள வாசிப்பாளர் ஒருவர், கஸ்தூரியின் விளாசலுக்கு எதிராக விளாசுகிறார். சமயம் தமிழில் இடம்பெற்றுள்ள இந்த இருவரின் கருத்துப் பகிர்வைப் பதிவின் கீழ்ப்பகுதியில் தந்திருக்கிறேன்.
வடமொழிச் சொல்லான ‘ப்ராஹ்மணன்’ஐத் தமிழில் பிராமணன் ஆக்கி நீண்டகாலம் ஆகிவிட்டது. தமிழின் மீது பற்றுக்கொண்ட பிராமணர்கள், ப்ராஹ்மணன் என்று எழுதுவதைத் தவிர்த்துவிட்ட நிலையில், ‘விளாசல்’கஸ்தூரி இதற்கு விதிவிலக்காக இருக்கிறார்.
இவர் மட்டுமல்ல, இவரைப் போன்ற ப்ராஹ்மணர்கள், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமிழை ஏதேனும் ஒரு வகையில் இழிவுபடுத்துவதில் ஆத்ம திருப்தி காண்பவர்கள்.
கஸ்தூரி அம்மையார் அவர்களுக்கு அடியேனின் விண்ணப்பம்.....
ப்ராஹ்மணனைப் பிராமணன் என்று எழுதினால் உங்கள் ப்ராஹ்மணன் ஜாதி தனக்குரிய பாரம்பரியப் பெருமையை இழந்துவிடும் என்று அஞ்சுகிறீர்களா?
“ஆம்” என்றால், இனி, உங்களின் தாய்மொழியும் தேவ பாஷையுமான சமஸ்கிருதத்திலேயே எழுதுங்கள்; உரையாடுங்கள்; நீச பாஷையான தமிழை மறந்தும் பயன்படுத்தாதீர்கள்.
சமஸ்கிருதத்தைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாட மொழி ஆக்குவதன் மூலம் எதிர்காலத்தில் அதைத் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக ஆக்கும் கனவும் உங்களுக்கும் உங்களைப் போன்ற ப்ராஹ்மணர்களுக்கு உண்டு. மாநிலத்திலும் மத்தியிலும் உங்களுக்கு ஆதரவானவர்கள் ஆண்டுகொண்டிருப்பினும் கனவு நனவாவதில் தாமதம் ஏற்படுகிறது. அதைத் தவிர்க்க வேண்டுமாயின்.....
‘ப்ராஹ்மணன்’ என்னும் பெயரிலேயே ஒரு கட்சி தொடங்குங்கள். நீங்கள் ஒரு பிரபல நடிகை என்பதால், உங்கள் கட்சியும் மிக விரைவில் பிரபலமாகும். மிகக் குறுகிய கால அவகாசத்தில் மாநில ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம். பெரியாருக்கு முன்பிருந்த பிராமணர்களின் செல்வாக்கை மீட்டெடுக்கலாம்; பெரியாரியப் பெருச்சாளிகளைப் பூண்டோடு ஒழித்துவிடலாம்.
செய்வீர்கள்தானே? வாழ்த்துகள்!
கறுப்பர் கூட்டம் You tube Channel ஐ பார்த்தேன், ஜாதி சமூக நீதி எல்லாம் பேசும் சாக்கில் பிரிவினை , ப்ராஹ்மணத்துவேஷம், இந்துமத அவமதிப்பு, வன்மம் இதை மட்டுமே பேசும் காணொளிகள். பெரியாரிய பெருச்சாளிகள். இவர்களின் அண்டப்புளுகை நிஜமென்று நம்புவதற்கு பெயர் தான் பகுத்தறிவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்த ஒருவர், கஸ்தூரி அவர்களே.. அவர்கள் ஆபாசமாக பேசினார்கள் என்று ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அவர்கள் பேசிய அனைத்தும் பார்ப்பனர்களால் எழுதப்பட்ட ஹிந்து மத புராணங்கள் தான் அதில் பொய் எதுவும் இல்லை.. பெரியாரிய பெருச்சாளிகள்?? அப்போ நீங்களெல்லாம் என்ன பார்ப்பன அயோக்கியர்களா? என்றார்.
அதற்கு கஸ்தூரி கூறியதாவது, எந்த புராணத்தை எந்த அந்தணர் இயற்றினார் என்று தரவு தரமுடியுமா? எதுவுமே தெரியாமல் எப்ப பாரத்தாலும் பிராமணரை மட்டும் தாக்குவோர் தான் அயோக்கியர்கள் என்றார்.கஸ்தூரி கேட்ட கேள்வியை பார்த்த அந்த சமூக வலைதளவாசியோ, கறுப்பர் கூட்டம் அளித்த தகவல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதன் ஆதாரத்தை வெளியிட்டார். அதை பார்த்த கஸ்தூரி, நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை. ஏனென்றால் உங்களிடம் பதிலோ ஆதாரமோ இந்து மத நூல்களை பற்றிய அறிவோ இல்லை. இருப்பது வெறும் பொய், அந்த பொய்யை கண்மூடித்தனமாக நம்பும் 'பகுத்தறிவு' என்ற பித்தலாட்டம் . உங்கள் 'வரலாறும்' மூடநம்பிக்கை தான்! என்றார்.
மூடநம்பிக்கை என்று கஸ்தூரி சொன்னதை பார்த்த அந்த நபர், உங்களுக்கு ஒரு இணைப்பையும் கொடுத்துள்ளேன் பதிலாக அதில் சனாதன வேதம் சொல்லும் பார்ப்பன உயர்வும், சூத்திர தர்மம் எனும் பெயரில் இருக்கும் ஆயோக்கியத்தனம் பற்றியும் தமிழில் தெளிவாக அந்த பாடல் எண்ணுடன் எழுதியுள்ளேன்.. படித்துவிட்டு வாருங்கள் பேசுவோம்.. அம்பேத்கரை படியுங்கள் கஸ்தூரி என்றார்.
கஸ்தூரியும் அத்துடன் நிற்பதாக இல்லை. அம்பேத்கரை படிக்கச் சொன்ன நபரிடம், புராணங்கள் அந்தணரால் எழுதப்பட்டவை என்ற உங்கள் கூற்றிற்கு சான்று எங்கே? சனாதனமும் இல்லாத வேதமும் இல்லாத "மனு தர்மம்" பற்றிய ஒப்பாரியை கையில் எடுத்ததிலேயே இளிக்கிறது உங்கள் வரலாற்றறிவு.
அம்பேத்கர் என்ற பெயரே ஒரு ப்ராஹ்மணரின் பெயர் என்பதை நீர் அறிவீரா? என்று கேட்டார்.
பதிலுக்கு அந்த நபரோ, மனு தர்மம் சனாதனம் இல்லையா?? வர்ணாசிரம தர்மம் எதன் அடிப்படையில்?? ராமாயணம் மஹாபாரதம் எதன் அடிப்படையில்??? பாவ யோனியில் பிறந்த சூத்திரனை கொலை செய்வது என்னுடைய கடமை என்று ராமன் சொல்லி சம்புகனை கொலை செய்தாரே அது மனு ஸ்மிருதி அடிப்படை இல்லையா?? என்று கேட்டார்.
கஸ்தூரியோ, சம்பூகனின் கதை, மனுஸ்ம்ரிதி, இது ரெண்டும் பெரியாரிஸ்டுக்கள் மட்டுமே சொல்லி கேட்டு உள்ளேன். எல்லாம் கறுப்பர் கூட்டம் மாடல் கற்பனை சேர்த்து பிசையப்பட்ட பொய் மொழிபெயர்ப்பு தான் என்றார்#