அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

‘ப.சி’[ப.சிதம்பரம்]யின் கேள்விக்குப் ‘பசி’யின் பதில்![100% நகைச்சுவைப் பதிவு]

“கொரோனாத் தொற்று நோய் கடவுளின் செயல்”னு நம் நாட்டு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சொல்லி வைக்க[கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. 41ஆவது குழு ஆலோசனைக் கூட்டத்தில்], நம் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்[‘ப.சி’], “2017-2018, 2018-2019, 2019-2020 ஆண்டுகளுக்கான உங்களின் தவறான பொருளாதார நிர்வாகத்திற்கு, காரணமானவரும் கடவுளா?[அல்லது நீங்களா?]”னு கேட்டிருக்கார்(தினத்தந்தி, 30.08.2020)

கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சிருந்தா நிர்மலா அம்மா அப்படிப் பேசியிருக்க மாட்டாங்க. சிதம்பரம் அய்யாவும் கேள்விக்கணை தொடுத்திருக்க மாட்டார். கொரோனா தொற்றுக்கு மட்டுமல்ல, அம்மாவின் பொருளாதாரச் சீர்கேட்டுக்கு[‘ப.சி’யின் கருத்து] மட்டுமல்ல, பிரபஞ்ச நிகழ்வுகள் அத்தனைக்கும் கடவுள்தான் காரணம் என்பது இருவருக்குமே புரிந்திருக்கும்.

இதையே சற்று விரிவாகவும் தெளிவாகவும் சொன்னால்.....

‘நாம் எல்லோரும் தினம் தினம் தின்னுறது, தூங்குறது, குறட்டை விடுறது, கன்னிப் பெண்களுடன் ‘கபடி’ விளையாடுவதாகக் [கிழவர்கள்] கனவு காண்றது[ஹி...ஹி...ஹி!],  விழிக்கிறது, ஒன்னுக்கு ரெண்டுக்குப் போறது, வேலை பார்க்குறது, வெட்டி அரட்டை அடிக்கிறது, சளிப் பிடிச்சா இருமுறது, காறித் துப்புறது, ஒருத்தனை ஒருத்தன் கட்டிப்பிடிச்சிக் குழாவுறது, காலை வாருறது, கல்யாணம் கட்டிக்கிறது, பிள்ளை பெத்துக்கிறது, கள்ளக்காமம் பண்ணுறது, வேண்டாதவனைத் தீர்த்துக்கட்டுறது, இருக்கிறவரைக்கும் கும்மாளம் அடிச்சுட்டுத் தீராத நோய் நொடின்னு வதைபட்டுச் செத்துச் சுடுகாடு போய்ச் சேருறது உட்பட நாம செய்யுற அத்தனை காரியங்களுக்கும் கடவுளே காரணம். எல்லாம் அவன் செயல்.’

'இப்படியெல்லாம் கடவுளை நக்கல் பண்ணி இவன் எழுதுறானே'ன்னு என் மேல கோப்படாதீங்க. காரணம்.....

இதை எழுதியவன் நானல்ல; நான் வெறும் கருவிதான். எழுத வைத்தவர் கடவுள்.

அவனின்றி அணுவும் அசையாது! ஹ...ஹ...ஹா!!
=====================================================================
பின் குறிப்பு:

“நாலு பேர் உன் வீடு தேடி வந்து உன்னை உதைச்சா, ‘ஏன் என்னை உதைக்கிறீங்கன்னு?’ கேட்டுடாதே. உன்னை உதைச்சது கடவுள். அவங்க வெறும் கருவிதான்” என்று எவரெல்லாமோ முணுமுணுப்பது அசரீரியாகக் கேட்டது... கேட்டுக்கொண்டிருக்கிறது. வம்பே வேண்டாம்னு, தலைப்பில் ‘நகைச்சுவைப் பதிவு’ சேர்த்துட்டேன். ஹி...ஹி...ஹி!