அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

பிள்ளையாரப்பா... இவங்களைக் கொஞ்சம் திருத்தப்பா!

கீழ்க்காண்பது, சற்று முன்னர் படித்த நேற்றைய[24.08.2020] நிகழ்வு குறித்த செய்தி. ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியிருக்கு[ https://www.updatenews360.com/other/two-boys-drowned-while-trying-to-dissolve-ganesh-idol-in-a-lake-near-hosur-24082020/ ]

#கிருஷ்ணகிரி: சூளகிரி ஏரியில் விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிப் பகுதி வாணியர் தெருவைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்-சகுந்தலா தம்பதியினர். இவர்களுக்குப் பகவதி, முரளிச் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்துள்ளர். கொரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் சில மாதங்கள் விடுமுறையில் உள்ளதால் இருவரும் வீட்டிலேயே இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமின்றி கொண்டாடப்பட்டது. மேலும், அவர்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு வதுள்ளனர் இந்த நிலையில் இன்று வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையைக் கரைக்கச் சூளகிரி துரை ஏரிக்கு, பகவதி மற்றும் முரளி சென்றுள்ளனர்.
அப்போது சிலையை ஏரியில் விட்டுவிட்டு ஏரியின் ஆழப் பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆழப் பகுதியில் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி காவல்துறையினர் இரு உடல்களையும் மீட்டு, சூளகிரி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுவர்கள் இருவர் ஏரியில் மூழ்கிப் பலியான சம்பவம் சூளகிரிப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.#
2 Children drowned in lake in Sulagiri, Krishnagiri
பெருந்தகையீர்,

இந்தச் சிறுவர்கள் உயிரிழந்தது ஏன்?

பிள்ளையாரை ஏரியில் கரைக்கச் சென்றதால்.

சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது ஏன்?

காரணம் பெரும்பாலோருக்குத் தெரியாது[கற்பனைக் கதை இருக்கு].

கரைச்சா[விசர்ஜனமாம்!] புண்ணியம் கிடைக்கும்னு யாரோ சொன்னதை நம்பி ஒவ்வொரு ஆண்டும் சில உயிர்களையாவது பலி குடுக்கிறீங்களே, [கடந்த ஆண்டு கர்னாடகாவில் இரு சிறுவர் பலி] ஏனய்யா?

சாமி கும்பிடுங்க. பிள்ளையாரையும் வீட்ல வைச்சிக் கும்பிடுங்க யாரும் தடுக்கல. அது உங்களுக்குள்ள உரிமை[நான் கும்பிடுறதில்ல. அது வேறு விசயம்]. நீங்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடக் கூடாது என்று கொடுமதியாளர்கள் கட்டிவிட்ட கதைகளை நம்பி மோசம் போகிறீர்களே, இது சரியா?

சிந்திக்கிற அறிவு மனிதர்களுக்கு வாய்ச்சிருக்கு. அது உங்களுக்கும் இருக்கு. அதைக் கொஞ்சமாவது பயன்படுத்துங்க. இது என் பணிவான வேண்டுகோள்.

இந்த மாதிரியெல்லாம் எழுதினா, மனசைப் புண்படுத்திட்டான்னு பொங்கி எழுவீங்கன்னு எனக்குத் தெரியும். தெரிஞ்சும் ஏன் எழுதறேன்னா.....

செய்தியைப் படிச்சுட்டுச் சும்மா இருக்க முடியல. பாழாய்ப்போன மனசு கிடந்து துடிக்குதய்யா...துடிக்குது. 
=====================================================================
மிக மிக மிக முக்கியக் குறிப்பு!
இதை எழுதியதால எனக்கு எந்தவொரு நன்மையும் இல்ல[தீமை விளையலாம்!]; என் பதிவுகளை வாசித்தவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கூடும். அவ்வளவுதான்.